நம்ம ரத்னவேலு வாங்கிய புது காரின் விலை இத்தன கோடியா! யாருக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க! எரியுதுடி மாலா!

ரசிகர்கள் மத்தியில் நடிப்பு அரக்கன் என்ற பெயரை நடிகர் ஃபஹத் பாசில் (Fahadh Faasil) எடுத்து வருகிறார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களிலும், மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால், ஃபஹத் பாசிலுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி கொண்டுள்ளது.

தமிழை பொறுத்தவரையில் விக்ரம் (Vikram) மற்றும் மாமன்னன் (Maamannan) போன்ற திரைப்படங்கள், ஃபஹத் பாசிலின் நடிப்பு பசிக்கு நல்ல தீனி போட்டுள்ளன. இதில், மாமன்னன் படத்தில் ஃபஹத் பாசில் நடித்த ரத்னவேலு கதாபாத்திரம் மிரட்டலாக இருந்தது. இந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடியது எல்லாம் தனி கதை.

Fahadh Faasil Buys Land Rover Defender

ஃபஹத் பாசில் திரைப்படங்களை போலவே, கார்களையும் அதிகமாக நேசிக்க கூடியவர். அவரிடம் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. இதுதவிர பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் கார்களும் கூட, ஃபஹத் பாசிலிடம் இருந்து வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு விலை உயர்ந்த காரை ஃபஹத் பாசில் வாங்கியுள்ளார். அது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) ஆகும். பிரபல நடிகையான நஸ்ரியா நஸீம்தான் (Nazriya Nazim), ஃபஹத் பாசிலின் மனைவி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். இவர்கள் சமீபத்தில் தங்களது 9வது திருமண நாளை (Wedding Anniversary) கொண்டாடினர்.

Land Rover Defender

இதை முன்னிட்டு, மனைவி நஸ்ரியாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நோக்கத்தில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை ஃபஹத் பாசில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஃபஹத் பாசில் வாங்கியுள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில், 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆகும்.

அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 297 பிஹெச்பி பவர் மற்றும் 1,500-2,500 ஆர்பிஎம்மில் 650 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு இந்த கார் வெறும் 8 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும்.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார், மிகவும் சவால் நிறைந்த ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்றது. இருப்பினும் சொகுசு வசதிகளுக்கும் இந்த காரில் பஞ்சமில்லை. இதன்படி இந்த காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இதுதவிர வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும்.

ஃபஹத் பாசில் வாங்கியுள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் விலை (Price) சுமார் 2.30 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே ஆன் ரோடு விலை சுமார் 2.65 கோடி ரூபாய் வரை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை ஏற்கனவே திரையுலக நட்சத்திரங்கள் பலர் வைத்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஃபஹத் பாசிலும் இணைந்துள்ளார். மிகவும் விலை உயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ள ஃபஹத் பாசிலுக்கு நமது வாழ்த்துக்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 22, 2023, 15:30 [IST]
English summary
Fahadh faasil buys land rover defender worth rs 2 65 crore all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+