என் மனைவிக்கு நான் தான் செய்வேன்! மாமனாருக்கு போட்டியா கணவர் கொடுத்த மறக்க முடியாத பரிசு!
மலபார் கோல்டு (Malabar Gold), இந்தியாவின் மிக பெரும் கோல்டு & டைமண்ட்ஸ் (Gold & Diamonds) விற்பனை நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருப்பவர், ஃபைசல் மலபார் (Faisal Malabar) ஆவார். இவர் தனது மகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) காரை வாங்கிக் கொடுத்ததை பார்த்து இருந்தோம். இந்த நிலையில், ஃபைசல் மலபாரின் மருமகனும் அவரது மனைவிக்கு, அதாவது ஃபைசல் மலபாரின் மகளுக்கு விலையுயர்ந்த லேண்ட் ரோவர் (Land Rover) காரை தற்போது பரிசாக வழங்கியுள்ளார்.
தந்தை- கணவருக்கு மத்தியில் அதிர்ஷ்டசாலியாக விளங்கும் ஃபைசல் மலபாரின் மகளை பற்றியும், அவர் பரிசாக பெற்றுள்ள லேண்ட் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க. இந்தியாவின் தங்க சுரங்கம் என்றால் அது கேரளா என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்தியாவில் தங்க ஆபரணங்களை விற்பனை செய்யும் பல நிறுவனங்கள் கேரளாவில் இருந்துதான் தோன்றியுள்ளன.

சில நிறுவனங்கள் துபாய் வரையில் கூட தங்களது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளன. அத்தகைய பிரம்மாண்டமான நகை கடை நிறுவனங்களுள் ஒன்றுதான், மலபார் கோல்டு ஆகும். 1993இல் கேரளாவின் கோழிக்கோட்டில் துவங்கப்பட்ட மலபார் கோல்டு இன்று தங்க ஆபரணங்களை சில்லறையாக விற்பனை செய்வதில் உலகின் 6வது மிக பெரும் நிறுவனமாக விளங்குகிறது. மலபார் க்ரூப்பில் இருந்து தங்க ஆபரணங்கள் மட்டுமின்றி, வைர ஆபரணங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இத்தகைய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஃபைசல் மலபார் உள்ளார். இது மட்டுமின்றி, விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கக்கூடிய மற்றொரு தனியார் நிறுவனத்தின் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் ஃபைசல் மலபார் குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஃபைசல் மலபாரின் இளைய மகளுக்கு கடந்த 2024ஆம் ஆண்டில்தான் திருமணம் நடந்தது.

ஃபைசல் மலபாரின் மூத்த மகள் ஜாமியா, தந்தையிடம் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்பக்கூடியவராக உள்ளார். இதனை ஃபைசல் மலபாரே ஒருமுறை இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்து இருந்தார். ஜாமியாவின் இந்த குணத்திற்காகவே கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) காரை வாங்கி கொடுத்தார்.
இந்த நிலையில், ஜாமியாவுக்கு அவரது கணவர் ஃபாவாஸ் (Fawas)-உம் தனது பங்கிற்கு தற்போது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Defender) காரை வாங்கி கொடுத்து திக்குமுக்காட செய்துள்ளார். இந்த புதிய டிஃபெண்டர் காரை டெலிவிரி பெற ஃபைசல் மலபார் உள்பட மொத்த குடும்பமும் ஷோரூமுக்கு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஃபைசல் மலபார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜாமியாவுக்கு பரிசாக அவரது கணவர் வழங்கியுள்ள வெள்ளை நிறத்திலான பிராண்ட்-நியூ டிஃபெண்டர் கார் ஆனது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல் கிடையாது. ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனையில் உள்ள டிஃபெண்டர் காரை ஃபாவாஸ் தனது மனைவிக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இந்தியாவில் டிஃபெண்டர் கார்கள் 90, 110 மற்றும் 130 என 3 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவில் இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.04 கோடியில் இருந்து துவங்கி அதிகப்பட்சமாக சுமார் ரூ.2.85 கோடி வரையில் தற்சமயம் உள்ளன. பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரீட் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் டிஃபெண்டர் கார்கள் மொத்தம் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. லேண்ட் ரோவர் டிஃபெண்டருக்கு மார்க்கெட்டில் நேரெதிர் போட்டியாக எந்த காரும் விற்பனையில் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சினிமா பிரபலங்களில் இருந்து அரசியல்வாதிகள் வரையில் பலரும் டிஃபெண்டர் கார்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர். இந்தியாவை காட்டிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் டிஃபெண்டர் கார்களின் விலைகள் சற்று குறைவாகவே இருக்கும் என நினைக்கிறோம். மாமனார் ஃபைசல் மலபாருக்கு போட்டியாக மனைவிக்கு ஃபாவாஸ் தனது டிஃபெண்டர் கார் பரிசை வழங்கியுள்ளதுபோல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications









