கார்டு மேல இருக்குற 16 நம்பரை கேட்ட கும்பல தூக்கிட்டாங்க! இவங்ககிட்ட இவ்வளவு காஸ்ட்லியான கார்கள் இருந்துச்சா?
சமீபத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரைடில் போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்காவில் உள்ள மக்களிடம் ரூ130 கோடியை ஏமாற்றிய கும்பல் கைது செய்யப்ப்டடது. அவர்களிடமிருந்து பல காஸ்ட்லியான கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கார்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் காஸ்ட்லியான கார்களை பயன்படுத்த வேண்டும் என பலர் விரும்புகின்றனர். இதனால் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து அதன் மூலம் இந்த காஸ்ட்லியான கார்களை வாங்கி வருகின்றனர். இப்படியாக காஸ்ட்லி காரை வாங்கிய மோசடி கும்பல் ஒன்று தற்போது சிக்கியுள்ளது.

இவர்களிடம் பறிமுதல்செய்த சொகுசு கார்களின் புகைப்படங்களை அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கிர்ந்துள்ளனர். இதில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு காஸ்ட்லியா கார்கள் முதலாகியுள்ளது. இதில் முக்கியமாக அவர்கள் 9 சொகுசு கார் மற்றும் எஸ்யூவிகளை பறிமுதல் செயண்துள்ளனர். இவர்கள் பறிமுதல் செய்ததால் மெர்சிடிஸ் நிறுவனத்தின் இ கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் ஆகிய கார்களும், பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் செடான், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், மினி கூப்பர், மற்றும் 7 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் மெர்சிடீஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ7 ஆகிய கார்கள் அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் தயாரிப்புகளாக இருக்கின்றன. இந்த கார்களின் விலையே தலா ரூ2 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இந்த புகைப்படத்தில் உள்ள மெர்சிடீஸ் எஸ்யூவி கார் பழைய தலைமுறை ஜிஎல்எஸ் கார் ஆகும். இதை இவர்கள் செகண்ட் ஹேண்டில் வாங்கியிருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் இவர்களிடம் கைபற்றப்பட்ட 2021 ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார் ரூ1.50 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இவ்வளவு காஸ்ட்லி கார்களை இவர்கள் கணக்கில் வராத பணத்தை வைத்து எப்படி வாங்கினார்கள் என விசாரணை நடந்து வருகிறது. இதை நேரடியாக வாங்கினால் இந்த பணத்தை செலுத்தியதற்காக வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டியது வரும் நேரடியாக பணமாகவும் வாங்க முடியாது.

இதனால் இதை அவர்கள் முறைகேடாக தான் வாங்கியிருக்க வேண்டும் என்ற சந்தேகமும் இருக்கிறது.இந்தியாவில் இப்படியாக பல்வேறு மோசடிகள் நடக்கிறது. வட இந்தியாவில் பலர் இப்படியான மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றி கோடி கணக்கில் லாபம் சம்பாதித்து வருவதாகவும் தெரிகிறது. இவர்களது பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இது போன்ற போலி கால்சென்டர்கள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் அதிகமாக இருக்கிறது. மக்கள் இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இவர்கள் பல கோடி ரூபாயை சம்பாதித்து அதை வைத்து பல சொகுசு கார்களை வாங்கி காஸ்ட்லியான லைஃப்ஸ்டலில் வாழ்ந்தது ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









