சீனாவில் நடைபாதையில் விற்பனைக்கு நின்ற போலி லம்போ: போலீசார் பறிமுதல்
சீனாவின், சாங்கிங் மாகாணத்தில் நடைபாதையில் போட்டு விற்பனைக்கு நிறுத்தப்பட்டிருந்த போலி லம்போர்கினி காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டூப்ளிகேட் சமாச்சாரங்கள் சீனர்களுக்கு கைவந்த கலை என்பது தெரிந்ததே. ஆப்பிள் ஐபோன் முதல் அஸ்டன் மார்ட்டின் கார் வரை டூப்ளிகேட் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
இதேபோன்று, விலையுயர்ந்த கார்களின் டூப்ளிகேட் மாடல்களின் விற்பனை சீனாவில் கொடிகட்டி பறப்பதாக ஏற்கனவே செய்தியை வழங்கியிருந்தோம். இந்த நிலையில், பொது இடத்தில் வைத்து கூவாத குறையாக போலி லம்போர்கினி காரை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications








