பாகிஸ்தான் காரங்க மூளை எப்படியெல்லாம் வேலை செய்யுது பாருங்க!! உண்மையான ரோல்ஸ்-ராய்ஸ் கார் தோற்றுப்போகும்!
ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் பிரிட்டிஷ் தரத்தின் உச்சம் என சொல்லலாம். ஆனால், பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் காரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதாவது, பாகிஸ்தானில் சிலர் ரோல்ஸ்-ராய்ஸ் போன்றதான காரை உருவாக்கி உள்ளனர். வாருங்கள் இதனை பற்றி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
லக்சரி கார்களுக்கு எல்லாம் அரசன் என ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை சொல்லலாம். ஏனெனில், அந்த அளவிற்கு, சொகுசு வசதிகள் மிக்கதாக ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை உருவாக்க 6 மாதங்களில் இருந்து 1 வருடம் வரையில் கூட ஆகிறது. இந்த கார்களின் விலைகள் மிக அதிகமாக கோடிகளில் நிர்ணயிக்கப்படுவதால், எல்லாராலும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்க முடிவதில்லை.

இருப்பினும், பலர் தங்களது கார்களை ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் போன்று மாற்றிக் கொண்டுள்ளனர். இருந்தாலும், அவை உண்மையான ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் அளவிற்கு இருந்ததா என கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், உண்மையான ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் தரம் வேற லெவலானது. அதற்கு இணையாக மாற்றிக் கொள்ள முடியாவிடினும், சிலர் தங்களது சந்தோஷத்திற்காக ரோல்ஸ்-ராய்ஸ் கார் போன்று தங்களது காரை மாற்ற முயற்சிக்கின்றனர்.
சீனாவில் நிறைய போலி ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை பார்த்துள்ளோம். அதேபோல், நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானில் ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் போன்று ஒரு கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கஸ்டமைஸ்டு காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதனுள் பயணிகள் படுத்து உறங்குவதற்கு தனித்தனியாக அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால், நடமாடும் விடுதியாக இந்த கார் காட்சியளிக்கிறது. இதுதொடர்பான வீடியோ ஓவர்சீஸ் பாகிஸ்தானி என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், பாகிஸ்தானில் ஓர் சாலையோர மெக்கானிக் கடையில் உருவாக்கப்பட்ட போலி ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் காரை காணலாம். வீடியோவின் துவக்கத்தில், மெக்கானிக் ஷாப்பில் இந்த போலி பாண்டோம் கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது காட்டப்படுகிறது.
இந்த காரின் முன்பக்கம் கிட்டத்தட்ட உண்மையான பாண்டோம் காரை போலவே உள்ளது. ஆனால், காரின் பக்கவாட்டு பகுதிக்கு சென்றால்தான், இது உண்மையான பாண்டோம் கார் கிடையாது என்பது நமக்கு தெரியவருகிறது. இந்த காரின் நீளம் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் அதிகரித்துள்ளது.

காரின் பின்பக்கத்தில் மொத்தம் 4 சக்கரங்கள் உள்ளன. கூடுதல் நீளத்தால், காரின் எடை அதிகமாகி உள்ளதால், காரின் பின்பக்கத்தில் இவ்வாறு 4 சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான பகுதியில்தான் நிறைய கஸ்டமைசேஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
நீளத்தை போல், காரின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரிய கட்டிடத்தை காரில் கொண்டு செல்வது போன்று இந்த கார் உள்ளது. காரின் தரைப்பகுதி முழுவதும் மரப்பலகையால் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன்மீது எழுப்பப்பட்டுள்ள கட்டிடம் ஆனது உலோகத்தால் செய்யப்பட்டதாக உள்ளது. இந்த காரில் இருக்கும் சக்கரங்கள் கூட ரோல்ஸ்-ராய்ஸ் கார்களுக்கு உண்டான டிசைனில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கும் காரை காப்பியடித்து உருவாக்கப்பட்ட கார்கள் பலவற்றை இதற்குமுன் பார்த்துள்ளோம். ஆனால், இந்த குறிப்பிட்ட போலி கார் பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. ஆதலால், இந்த காரை திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதற்காக உருவாக்கி இருப்பார்கள் என நினைக்கிறோம். கூடுதல் எடையை ஏற்றும் அளவிற்கு இந்த காரின் சேசிஸ் வலிமையானதாக உள்ளதா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









