போலி டோல்கேட் அமைத்து பண வசூல்! அங்க 110ரூபானா இங்க 20ரூபா போதும்! கவர்மெண்டே இப்போதான் கண்டுபிடிச்சிருக்கு!
இந்த உலகத்திற்கு காசு மிகவும் முக்கியமானது. பிறப்பு முதல் இறப்பு வரை என அனைத்திற்கும் காசு அத்தியாவசியனமானதாக உள்ளது. ஏன், கோவில்களில் கடவுளை விரைவில் தரிசிக்க வேண்டும் என்றால்கூட காசு கட்டாயம் இருந்தால் மட்டுமே முடியும். இது ஏங்க, இந்த நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேண்டும் என்றால் கூட காசு தேவை.
இந்த டோல்கேட் விஷயத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. ஒரு டோல்கேட்டில் இருந்து மற்றொரு டோல்கேட்டுக்கு 60 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்பது விதி ஆகும். இந்த விதி நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது வாகன உரிமையாளர்கள் பலரின் புகாராக இருக்கின்றது.

மேலும், சில டோல்கேட்டுகளில் பகல் கொள்ளைச் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த டோல்கேட்டுகளுக்கே ஒரு சிலர் விபூதி அடித்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, உண்மையான டோல்கேட்டிற்கு அருகிலேயே போலியான டோல்கேட்டை அமைத்து பல லட்ச ரூபாயை சிலர் கொள்ளை அடித்திருக்கின்றனர்.
இந்த மோசடி சம்பவம் குறித்த தகவலே தற்போது வெளியாகி நாட்டையே உலுக்கி இருக்கின்றது. பிரதமர் மோடி சொந்த மாநிலமான குஜராத்திலேயே அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த சம்பவத்தில் சில அரசியல் கட்சி பிரமுகர்களின் மகன் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதனை அவர்கள் நிராகரித்து இருக்கின்றனர்.

குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 27-இல் அமைந்துள்ளது வகாசியா சுங்கச்சாவடி. இதற்கு அருகிலேயே போலி டோல் பிளாசாவானது அமைக்கப்பட்டு இருக்கின்றது. டோல்கேட்டுக்கு அருகிலேயே தனியார் நிலம் ஒன்று இருக்கின்றது. இந்த ஆலைக்கு வருவது போலவே வாகனங்கள் உள் நுழையவிடப்பட்டு மலிவான கட்டணத்தில் வாகனங்கள் கடக்க உதவி செய்யப்பட்டு இருக்கின்றது.
அங்கு வாகனங்கள் சுலபமாக சென்று வருவதற்கு ஏதுவாக டோல்கேட்டின் முன் மற்றும் பின் பக்கத்தில் சாலையோரத்தில் தனி பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பாதையையே டோல்கேட்டைத் தவிர்க்க வாகனங்கள் பயன்படுத்தி இருக்கின்றன. டோல்கேட்டைக் காட்டிலும் 80 சதவீதம் குறைவான கட்டணமே இந்த பாதையை பயன்படுத்துவோரிடம் போலி டோல்கேட்டை அமைத்தவர்கள் வசூலித்திருக்கின்றனர்.
20 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு இருக்கின்றது. அதுவே, உண்மையான டோல்கேட் வாயிலாக ஓர் வாகனம் பயணிக்கும் எனில் வாகனத்தின் ரகத்தைப் பொருத்து ரூ. 110 முதல் 595 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு இருக்கும்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த விவகாரத்தில் ஐந்து பேருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றனர். அடையாளம் தெரியா நபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த விவகாரம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், பல லட்சக் கணக்கான ரூபாய் இதன் வாயிலாக மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், இந்த விவகாரம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டோல் பிளாசாக்களையே பலர் பகல் கொள்ளை மையம் என கருத்து தெரிவித்தும் வரும்நிலையில், டோல் பிளாசை மையப்படுத்தி மிகப் பெரிய மோசடி அரங்கேறி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. முன்பெல்லாம், டோல்கேட்டிலேயே அதிக கட்டணம் வசூலித்து மோசடிக்காரர்கள் மோசடிகளை நிகழ்த்தி வந்தனர். இப்போது போலி டோல்கேட்டை அமைத்து கட்டணத்தை குறைவாக வசூலித்து மோசடியில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றனர். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








