போலியான அபராத செல்லான் மூலம் ரூ16 லட்சத்தை சுருட்டிய கும்பல், நீங்களும் பலிகடா ஆகிடாதீங்க!

போலியான அபராத செல்லான்கள் மூலம் சைபர் கிரைம் கும்பல் ஒன்று இந்தியாவில் ரூபாய் 16 லட்சத்தை கொள்ளையடித்துள்ளது. 4400 செல்போன்களில் போலியான ஆப்களை பதிவிறக்கம் செய்ய வைத்து இந்த கொள்ளையை அந்த கும்பல் அரங்கேற்றியுள்ளது. உங்கள் வாகனத்திற்கு அபராதம் செலுத்த சொல்லி மெசேஜ் வந்தால் அதை எப்படி கையாள்வது சரியாக அபராதம் செலுத்துகிறோமா அல்லது இது நம் மீதான கொள்ளை தாக்குதல் முயற்சியா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் சாலையில் விதிமுறைகளை மீறும் போது அவர்களுக்கு தானியங்கியாக அபராதம் விதிக்கும் தொழில்நுட்பம் என்பது நடைமுறையில் இருக்கிறது. முன்னர் ஆங்காங்கே போலீசார் நின்று வாகனங்களை நிறுத்தி அபராதங்களை வசூல் செய்வார்கள். இன்று தானியங்கி கேமராக்களை பொருத்தி அந்த கேமராக்களை வாகனத்தின் நம்பர் பிளேட் உள்ளிட்ட விபரங்களை எடுத்து தானியங்கியாக அபராதம் விதிக்கிறது.

fake traffic e-challan

இப்படியாக அபராதம் விதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் ஆன்லைன் மூலமே அவர்களது அபராதத்தை செலுத்திக் கொள்ள முடியும். இதற்கான அறிவிப்புகளையும் அரசே செய்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சைபர் கிரைம் செய்யும் கும்பல் ஒன்று சமீபத்தில் இந்தியாவில் குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தில் போலியான அபராத செல்லான்களை அனுப்பி அபராதம் வசூல் செய்து அந்த பணத்தை கொள்ளை அடித்துள்ளது.

குஜராத், கர்நாடக மாநிலத்தில் சில மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பரிவாகன் சேவா மற்றும் கர்நாடகா போலீஸ் ஆகியோர் பெயரில் வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜில் தங்கள் வாகனம் சாலையில் விதிமுறையை மீறி செயல்பட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அபராதத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் எனவும், ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்றால் அதில் வழங்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தது.

fake traffic e-challan

ஒரு சில நபர்கள் இதை உண்மை என நம்பி அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்கள். அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் அது போலியான செல்போன் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதை சிலர் நம்பி பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்துள்ளார்கள். இப்படியாக ஓப்பன் செய்யும்போது அந்த ஆப் அவர்களது செல்போனில் உள்ள சில தகவல்களை திருடி சென்றுள்ளது. முக்கியமாக otp மெசேஜ்களை திருடியுள்ளது.

இது மூலம் இதுவரை 16 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஆங்காங்கே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புகார்களை ஒன்றாக சேர்த்து பார்க்கும் போது இதை எல்லாம் ஒரே கும்பல் தான் செய்துள்ளது தெளிவாக தெரிகிறது. இது செய்தவர்களை டிராக் செய்து பார்த்தபோது இவர்கள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

fake traffic e-challan

உங்களுக்கும் இதுபோன்ற அபராத செல்லான்கள் வருகிறது என்றால் அதை நீங்கள் கவனமாக கையாள வேண்டும். முதலில் தேவை இல்லாத ஆப்ஸ்களை ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்வதை நிறுத்த வேண்டும். முக்கியமாக நம்பகத்தன்மை நிறைந்த தளத்திலிருந்து ஆப்களை டவுன்லோட் செய்யலாம். இது போன்ற போலி ஆப்கள் நம்பகத் தகுந்த தளங்களில் இருக்காது. மேலும் உங்கள் செல்போனை எப்பொழுதும் அப்டேட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தேவையில்லாத விஷயங்களை தவிர்க்க முடியும்.

இதுபோகதா சில இடங்களில் உங்கள் வாகனத்தின் பதிவு எண், நீங்கள் என்ன விதமான சட்ட விதிமுறை மீறலில் ஈடுபட்டீர்கள், அதற்கான ஆதாரம் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். இதையெல்லாம் சரிபார்க்க பின்பு அபராதத்தை செலுத்த முயற்சி செய்யுங்கள். இந்த தகவல் எதுவுமே இல்லை என்றால் அது போலியான அபராத செல்லானாக கூட இருக்கலாம் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

முடிந்த அளவுக்கு ஆன்லைன் மூலம் அபராத தொகையை செலுத்தும்போது இதில் அனுபவம் உள்ள நபர்களை உடன் வைத்திருப்பது நல்லது. அல்லது நீங்கள் அரசாங்க வெப்சைட்டுக்கு நேரடியாக சென்று செல்லான்களை செலுத்துவது நல்லது மற்ற செல்போன் ஆப்கள் மற்றும் நம்பகத் தகுந்த தன்மை அற்ற விஷயங்கள் மூலம் அபராத செல்லான் தொகையை செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழில்நுட்பம் வளர வளர அதன் பின்னால் இருக்கும் ஆபத்துகளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் தான் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அபராத செல்லான்கள் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது கவனமாக இருக்க வேண்டும். நிச்சயம் இதில் அனுபவம் வாய்ந்த நபர்களை உடன் வைத்து செய்வது பாதுகாப்பான விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2024, 11:06 [IST]
English summary
Fake traffic e challan scam india tips
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X