ஷோரூம்காரங்களுக்கு மச்சம்! எப்டியோ இவங்களை நேர்ல பாத்துட்டாங்க! இதெல்லாம் கோடிக்கணக்கான பேருக்கு வாழ்நாள் கனவு
இந்தியாவில் சொகுசு கார்களை அதிகளவில் வாங்குவது யார்? என்று கேட்டால், திரையுலகினர் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். அந்த அளவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தினந்தோறும் பல்வேறு சொகுசு கார்களை வாங்கி கொண்டே உள்ளனர். இதில், முக்கியமான நபர்கள் வாங்கும் கார்களை பற்றிய தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனடியாக கொண்டு வந்து விடுகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு பிரபலம் சொகுசு கார் வாங்கியிருப்பது பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
திரையுலகை பொறுத்தவரையில், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்தான் விலை உயர்ந்த கார்களை அதிகளவில் வாங்கி கொண்டுள்ளனர். ஆனால் ஒரு சில பாடகர்களும் அவ்வப்போது விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாய் மாறியுள்ளார் ஃபால்குனி பதாக் (Falguni Pathak).

மும்பை (Mumbai) நகரில் பிறந்தவரான ஃபால்குனி பதாக், இந்தியா முழுவதும் அறியப்படும் பாடகிகளில் ஒருவராக உள்ளார். இவருக்கு தற்போது 55 வயதாகிறது. கடந்த 37 வருடங்களாக அவர் பாடல்களை பாடி கொண்டுள்ளார். இவர் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) காரை வாங்கியுள்ளார்.
இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இதன் காரணமாக இந்திய திரையுலக பிரபலங்கள் மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. நடிகை கரீஷ்மா கபூர் (Karisma Kapoor) கூட சமீபத்தில் இந்த காரை வாங்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த வரிசையில்தான் தற்போது ஃபால்குனி பதாக் இந்த காரை வாங்கியுள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் 300டி 4மேட்டிக் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 269 ஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் 450 4மேட்டிக் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 381 ஹெச்பி மற்றும் 500 என்எம் டார்க் ஆகும். மறுபக்கம் இந்த காரின் 450டி 4மேட்டிக் வேரியண்ட்டில் பொருத்தப்பட்டிருப்பது 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆகும்.
இதன் பவர் அவுட்புட் 367 ஹெச்பி மற்றும் 750 என்எம் ஆகும். இந்த 3 இன்ஜின்கள் உடனும், 9ஜி-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. இது இன்ஜின் உருவாக்கும் சக்தியை, 4மேட்டிக் தொழில்நுட்பம் மூலமாக, காரின் 4 சக்கரங்களுக்கும் அனுப்புகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில், 9 ஏர்பேக்குகள், அடாஸ், 360 டிகிரி கேமரா, 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் இந்த காரின் ஆரம்ப விலை 97.85 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 1.15 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) இன்னும் கூடுதலாக வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) ஆகிய கார்கள் உடன், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் போட்டியிட்டு வருகிறது. இந்த கார்களுக்கு பதிலாக ஒரு காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








