3 மாசம் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஒரு முடிவை எடுக்கப்போகும் மத்திய அரசு! அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக வழங்கப்படும் மானியத்தின் மூன்றாம் கட்டம் குறித்த அறிவிப்பு வரப்போகும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எலெக்ட்ரிக் வாகன விரும்பிகள் மத்தியில் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறாது என மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். தற்போது இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்படுகிறோம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ஃபேம் என்ற மானியத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மானியத்தின் முதல் கட்டமாக நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியத்தை வழங்கி வந்தது. இதன் பிறகு இதன் இரண்டாம் கட்ட மானியம் அறிவிக்கப்பட்டது.

fame 3

இரண்டாம் கட்ட மானியம் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் வாகன உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு, இந்த மானியம் மூலம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம் ஏராளமான வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

மக்கள் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தினால் மாசு அளவு கணிசமான அளவு குறையும் இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறையும் என்ற காரணத்திற்காக இந்த ஃபேம் என்ற மானியத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ஃபேம் மானியத்தின் இரண்டாம் கட்ட திட்டங்கள் எல்லாம் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

fame 3

அதன் பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களில் விலை எல்லாம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை தொடர்வதற்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு அதன் கீழ் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் எல்லாம் மானியங்களை பெற்று வருகின்றன. இந்த தற்காலிக பட்ஜெட் என்பது ஃபேம் மானியத்தின் மூன்றாம் கட்ட மானியம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்த பட்ஜெட்டில் ஃபேம் 3 மானியம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற பேச்சும் தற்போது வாகன விரும்பிகள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

fame 3

இந்த மானியத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்காக மத்திய அரசு பெரிய அளவில் பட்ஜெட்டை ஒதுக்கினால் நிச்சயம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் குமாரசாமியிடம் இது குறித்து கேட்டபோது ஃபேம் 3 மானியம் குறித்து தற்போது மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும்,

ஃபேம் 3 மானியம் குறித்த விரிவான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விக்கு அதற்கான சாத்தியம் இல்லை என பதில் அளித்துள்ளார். இதனால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில் ஃபேம் மானியம் குறித்த தகவல் இல்லாமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேம் மானியம் என்பது கடந்த 2015ம் ஆண்டு முதன் முதலில் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது 2 ஆண்டுகளுக்காக கொண்டுவரப்பட்டு பின்னர் அது 2019ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் மானியத்தின் இரண்டாம் கட்ட அறிமுகப்படுத்தப்பட்டது முதல் கட்டத்தில் ரூபாய் 529 கோடி செலவிடப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் ரூபாய் 10 ஆயிரம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசின் மானியம் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது அதிகமான விலையில் இருப்பதால் இதன் விற்பனை குறைவாக இருக்கிறது. ஃபேம் 3 மானியம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது

More from DriveSpark

Article Published On: Tuesday, July 16, 2024, 23:36 [IST]
English summary
Fame 3 scheme implemented soon not included upcoming budget
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X