எலெக்ட்ரிக் டூ-வீலர் வாங்கினால் ரூ10,000 மானியம்! ரெடியாகிடுச்சு மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ஃபேம் என்ற மானியத்தை வழங்கி வந்த நிலையில், இந்த மானியம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்துவரும் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஃபேம் மானியத்தின் மூன்றாம் பகுதி அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அதற்காக திட்டங்களை மத்திய அரசு தற்போது வகுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் இது அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு விதமான ஊக்கங்களை வழங்கி வருகின்றன. எலெக்ட்ரிக் கார் வாங்குபவர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளையும் வழங்கி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லாத போக்குவரத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

fame 3

புவி வெப்ப மயமாதலை தடுக்க இது மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை ஊக்குவிப்பதற்காக ஃபேம் என்ற மானியத்தை மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த ஃபேம் மானியத்தின் இரண்டாம் பகுதி கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் மார்ச் மாதமே இந்தியாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் தற்காலிகமாக ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இது கிட்டத்தட்ட ஃபேம் இரண்டாம் பகுதி மானியம் எப்படி வழங்கப்பட்டதோ அதேபோலவே இந்த மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

fame 3

இந்நிலையில் இந்த இடைக்கால மானியமும் ஜூலை மாதம் வரை தான் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு புதிய அரசு அமைந்த உடன் ஃபேம் மானியத்தின் மூன்றாம் பகுதி குறித்து அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விதிமுறைகளை தயாரித்து மத்திய அரசு ரெடியாகி உள்ளதாக நமக்கு தகவல் வெளியாகி உள்ளன. இதில் உள்ள சில அம்சங்கள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன.

அதன்படி ஃபேம் மூன்று மானியத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை அதிகமாக பொது போக்குவரத்திலும் எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் 3-வீலரில் அதிக கவனம் செலுத்தி மானியம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

fame 3

ஏற்கனவே வழங்கி வந்த ஃபேம் 2 மானியத்தில் அனைத்து விதமான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஃபேம் 3 மானியத்தை பொருத்தவரை தற்போது அதிகமாக பொது போக்குவரத்து வாகனமாக எலெக்ட்ரிக் பஸ்களுக்கு அதிக மானியமும் இதுபோக எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் த்ரீ வீலர்களுக்கு மானியமும் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுவரை எலெக்ட்ரிக் கார்களுக்கு மானியம் வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது.

இதன்படி எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு ரூபாய் 10 ஆயிரமும், 3 வீலர்களுக்கு ரூபாய் 50,000 வரையிலும் மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மானியம் என்பது வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரிக்கு ஒரு கிலோ வாட்டிற்க்கு ரூபாய் 5000 விதம் வழங்கப்படும். இந்த மானியம் பெறுவதற்கு குறிப்பிட்ட வாகனம் மற்றும் அந்த வாகனத்தை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான தகுதி நிர்ணயம் செய்யப்படுகிறது. இது குறித்த தகவல் பின்னர் வெளியிடப்படும்.

இந்த ஃபேம் 3 மானியத்தை பெற வேண்டும் என்றால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட சான்று பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். இது புதுமையாக வழங்கப்படும் சான்றாக இருக்கும். இந்த சான்று குறித்த தகவல் எல்லாம் பின்னர் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஃபேம் 3 மானியத்தில் மொத்தம் 3,72,215 கார்களும் 3,33,387 டூவீலர்களும், 38,828 3-வீலர்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஃபேம் 2 மானியத்தில் 7000 எலெக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேம் 3 மானியம் அமலுக்கு வரும்போது இன்னும் கூடுதலான எலெக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்கப்பட முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 1, 2024, 7:00 [IST]
English summary
Fame 3 scheme launch rs 10000 crore budget full details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X