இன்னும் 8 மாசம் தான் இவி கார்களுக்கு மானியத்தை எல்லாம் நிறுத்தறப்போறாங்க? உடனே வாங்குனா பணம் மிச்சமாகும்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு மானியங்களை வழங்கி வருகிறது. அதன்பட தற்போது வழங்கப்படும் மானியம் வரும் 2026ம் ஆண்டுமார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட மானிய திட்டம் எப்படி இருக்கும்? இதுவரை எப்படி இருந்தது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மாசு இல்லாத வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசுகள் முயற்சி செய்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க இந்தியா கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த 4 ஆண்டுகள் அதாவது 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் அமலில் இருந்தது.

Fame 4

இந்த ஃபேம் திட்டத்திற்காக அப்பொழுது மத்திய அரசு ரூ795 கோடியை ஒதுக்கியிருந்தது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் கூடுதலாக ரூ100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியங்கள் வழங்கப்பட்டு வந்தது.

இதன்பிறகு கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் ஃபேம் 2 திட்டம் அமலுக்கு வந்தது. இதற்காக 5 ஆண்டுகள் ஒதுக்கப்பட்டு ரூ10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அல்லாமல் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியத்தை வழங்கி அதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனத்தின் விலை கணிசமாக குறைக்கப்பட்டது.

Fame 4

இந்த திட்டத்தின்படி எலெக்ட்ரிக் டூவீலர், 3 வீலர், கார்கள், பஸ்கள் என அனைத்து விதமான வாகனங்களுக்கும் மானியங்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 31 முதல் ஃபேம் 2 மானியங்கள் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அந்த நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் இருந்ததால் இஎம்பிஎஸ் என்ற பெயரில் தற்காலிய மானியங்கள் அறிவிக்கபட்டிருந்தன.

ஃபேம் 2 திட்டத்தின்படியே இந்த தற்காலிக மானியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மானியங்கள் வழங்கப்பட்டது. அதன்பிறகு புதிய அரசு பதவியேற்றவுடன் இந்த ஃபேம் 3 மானியத்திற்கு பெயரை மாற்றியது. இந்த ஃபேம் 3 பிஎம்- இ டிரைவ் என்ற பெயரில் எலெக்ட்ரிக் டூவீலர், 3 வீலர், எலெக்ட்ரிக் ஆம்புலன்ஸ், எலெக்ட்ரிக் பஸ்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது.

Fame 4

இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைகிறது. இந்த திட்டத்திற்கு பிறகு அடுத்த திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது உள்ள திட்டத்தை விட அடுத்த கட்ட திட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை இலக்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள திட்டத்தில் 24,79,120 எலெக்ட்ரிக் டூவீலர்கள், 1,10,596 எலெக்ட்ரிக் ரிக்ஷா, 2,05,392 எலெக்ட்ரிக் 3 வீலர்கள், 14,028 எலெக்ட்ரிக் பஸ்கள், 72,300 எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முடிவதற்கும் இத்தனை வாகனங்கள் இந்த திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட திட்டத்தில் மானியம் வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் கனரக வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்படுவதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக லைட் மைல் டெலிவரிக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் வாகனங்கள் மீது அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை வரும் 2026ம் ஆண்டுடன் நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்த வரிவான விபரங்கள் எதுவும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குவது போல் சிஎன்ஜி, ஹைபிரிட் போன்ற வாகனங்களுக்கும் மானியம் வழங்கினால் இந்தியாவில் அந்த செக்மெண்டும் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 6, 2025, 21:00 [IST]
English summary
Fame 4 is the next phase of the electric vehicle scheme know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X