தேர்தல் நேரத்துல எலெக்ட்ரிக் வாகனம் வாங்குனாதான் விலை குறையுமா?
எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக வழங்கப்பட்டு வரும் ஃபேம் 2 மானியம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 500 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேம் 2 மானியம் என்றால் என்ன? எதற்காக இது நீட்டிக்கப்பட்டுள்ளது? என்ற விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக ஃபேம் என்ற மானியத்தை மத்திய அரசு வழங்கி வந்தது. முதல் கட்டமாக ஃபேம் மானியம் நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஃபேம் 2 என்ற மானியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நேரடியாக வாகன தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வாகன விலை குறைக்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் டூவீலர்கள், 3 வீலர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் இந்த ஃபேம் மானியம் என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஃபேம் 2 மானியத்திற்கான தேதி என்பது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி தேதி என முன்னரே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி நெருங்குகிறது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த ஃபேம் மானியத்தை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஃபேம் 2 மானியத்தின் மூன்றாம் கட்ட மானியமாக ஃபேம் 3 என்ற மானியத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதற்கிடையில் பாராளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் இந்த காலகட்டத்தில் மானியங்களை அறிவிப்பது அதை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாதது என்பதால் அடுத்த ஜூலை 31ஆம் தேதி வரை இதே ஃபேம் 2 மானியத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் எவ்வளவு மானியங்களை பெறுகிறதோ ஜூலை 31 ஆம் தேதி வரை அதே அளவிலான மானியங்களை பெறும்.
ஜூன் 31 ஆம் தேதிக்கு பிறகு ஃபேம் 3 என்ற மானியம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட அமலுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ஃபேம் 3 மானியத்தின் படி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியங்கள் என்பது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ரூபாய் 10,500 கோடியை நிதியாக ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இடைக்காலத்திற்காக நான்கு மாதத்திற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கி உள்ள நிலையில் இந்த 500 கோடியை ஃபேம் 3 மானியத்திற்கான பட்ஜெட்டில் இருந்து கழித்து மீதமுள்ள பட்ஜெட்டிற்கு மட்டும் ஃபேம் 3 மானியத்தை அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு மட்டுமல்லாமல் அதற்கான கட்டுமான வசதிக்கும் சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேம் 2 மானியத்தின்படி கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வரை மொத்தம் 5,422 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 12,16,350 வாகனங்களுக்காக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள ஃபேம் 3 மானியத்தின் படி 5 லட்சம் எலெக்ட்ரிக் 3 வீலர்கள், 10 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்கள். 55,000 எலெக்ட்ரிக் பயணிகள் கார்கள், 7000 எலெக்ட்ரிக் பஸ்களுக்கு மானியங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கான டிரெண்ட் அதிகமாக உள்ளது. 24 சதவீதம் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 81,963 எலெக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 11 மாதத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகரிப்பால் இந்தியாவில் உள்ள காற்று மாசு என்பது வெகுவாக குறையும். இதற்காக மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த பல்வேறு ஊக்கங்களை செய்து வருகிறது. இதனால் இப்படியான மானியங்களை வழங்கி மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஊக்கப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications









