மாருதி கார் வாங்கினாலே கத்தி ஆர்ப்பாட்டம் போடுபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு குடும்பம்!!
லம்போர்கினி (Lamborghini) கார்களை யாருக்கு தான் பிடிக்காமல் போகும். நம் அனைவருக்குமே எதாவது ஒரு லம்போர்கினி கார், கனவு வாகனமாக இருக்கிறது. ஆனால், லம்போர்கினி கார் கனவை பெரும் பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்களும் தான் நிஜமாக்குகின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு விலைமிக்கவை ஆக லம்போர்கினி கார்கள் விளங்குகின்றன. இதனால், லம்போர்கினி கார்களை வாங்குபவர்களின் உடை அலங்காரமே அவர்களது பொருளாதார நிலையை வெளிக்காட்டக் கூடியவைகளாக இருப்பது வழக்கம். அதாவது, நன்கு டிப்-டாப்பாக கோர்ட் ஷூட் அணிந்தப்படி லம்போர்கினி காரை கஸ்டமர்கள் டெலிவிரி பெறுவர்.
ஆனால், இங்கு ஒருவர் மிகவும் எளிமையான உடையில் விலையுயர்ந்த லம்போர்கினி காரை டெலிவிரி பெற்றுள்ளார். இவர் மட்டுமில்லை, புத்தம் புதிய லம்போர்கினி காரை டெலிவிரி பெறும்போது இவரது குடும்பத்தினர் அனைவருமே எளிமையான உடையில்தான் இருந்தனர். இதைவிட நம்மை ஆச்சிரியப்படுத்துவது கார் டெலிவிரி செய்யப்பட்ட இடம் ஆகும்.
லம்போர்கினி ஷோரூம் பணியாளர்களால் இந்த கஸ்டமரின் வீட்டிற்கே வந்து கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, லம்போர்கினி, ஃபெராரி (Ferrari) போன்ற விலையுயர்ந்த கார்களை வாங்குபவர்களுக்கு பெரும்பாலும் அவர்களது வீட்டிற்கே சென்று கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வகையில்தான், இந்த லம்போர்கினி கார் கஸ்டமருக்கும் ஹோம் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.
இந்த கஸ்டமரின் வீட்டில் ஒரு கட்டிடத்திற்கு கீழ் பார்க்கிங் பகுதியில்தான் கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது என்றாலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரை நிறுத்தும் அளவிற்கு இந்த பார்க்கிங் பகுதி சிறந்த நிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே இந்த லம்போர்கினி கார் டெலிவிரி செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன.
இன்னும் சொல்லப் போனால், இந்த கார் டெலிவிரி ஆனது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்தது ஆகும். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளதால், அதனை பற்றி தற்போது பார்க்கிறோம். பெங்களூருவில் வசிக்கும் இந்த எளிமையான பணக்கார குடும்பத்தார் வாங்கியிருப்பது லம்போர்கினி நிறுவனத்தின் ஸ்டெர்ராடோ (Sterrato) என்கிற ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

பெங்களுருவில் ஒரேயொரு லம்போர்கினி கார் ஷோரூம் மட்டுமே உள்ளதால் நிச்சயமாக அதன் மூலமாகவே ஸ்டெர்ராடோ காரை இந்த குடும்பத்தினர் வாங்கி இருப்பர். இவர்கள் வாங்கியுள்ள லம்போர்கினி ஸ்டெர்ராடோ கார் ஆனது மோனோசெரஸ் நிறத்தில் உள்ளது. இந்த லம்போர்கினி சூப்பர் கார் ஆனது தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை.
இந்தியாவில் விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்பு வரையில் ஸ்டெர்ராடோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை கடைசியாக ரூ.5.44 கோடியாக இருந்தது. ஸ்டெர்ராடோ காரை உலகளவில் கடந்த 2022ஆம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து 2023 ஜூன் மாதத்திற்கு பிறகு இந்த சூப்பர் காரை புக் செய்த கஸ்டமர்களுக்கு லம்போர்கினி டெலிவிரி கொடுக்க ஆரம்பித்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லம்போர்கினி கார் ஒன்றை டெலிவிரி பெறும்போது யாராக இருந்தாலும் துள்ளி குதிப்பர். ஆனால், இந்த குடும்பத்தினர் சாதாரணமாக இருப்பதை பார்த்தால், இவர்களிடம் ஏற்கனவே பல விலையுயர்ந்த லம்போர்கினி கார்கள் இருக்க கூடும் அல்லது இந்த குடும்பத்தினர் காரை டெலிவிரி பெறும்போது வேறு ஏதேனும் சொந்த பிரச்சனையில் இருந்திருப்பர்.


Click it and Unblock the Notifications









