புது கார் வாங்க ப்ளூ கலர் உடையில் சென்ற குடும்பம்! எழுதி வெச்சுக்கோங்க! இனி எல்லாரும் இததான் பண்ண போறாங்க!

புதிய கார்களை (New Cars) வாங்குவது என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான சந்தோஷங்களில் ஒன்றாகும். பல வருட கடின உழைப்பின் பலன் அது. எனவே புதிய கார்களை டெலிவரி (Delivery) எடுக்கும் நிகழ்ச்சிகளை ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் கொண்டாடுகின்றனர். இந்த வரிசையில் ஒரு குடும்பம் செய்துள்ள காரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீல (Blue) நிற ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) காரை டெலிவரி எடுப்பதற்காக அவர்கள் அனைவரும் நீல நிற உடையில் சென்றுள்ளனர். இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த குடும்பம் கேரள (Kerala) மாநிலத்தை சேர்ந்தது ஆகும்.

Volkswagen Virtus

4 உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம், நீல நிற உடையில் சென்று, நீல நிற ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை டெலிவரி எடுத்ததை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் செடான் (Sedan) ரக கார் ஆகும்.

மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஹோண்டா சிட்டி (Honda City), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) ஆகிய கார்களுடன், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் போட்டியிட்டு வருகிறது. இது சற்று பிரீமியமான கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை.

Family Wears Blue Colour Dress To Take Delivery Of A Blue Volkswagen Virtus

முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை இந்த காரின் முக்கியமான வசதிகள் ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

இதில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும். அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

மற்றொன்று 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 150 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் ஆரம்ப விலை (Price) 11.48 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் சற்று கூடுதலாக வரும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அனேகமாக இந்த குடும்பத்திற்கு நீல நிறம் மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் அவர்களது வீட்டின் வெளிப்புறம் கூட நீல நிறத்தில்தான் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இவர்களை பின்பற்றி இன்னும் பலரும், எந்த கலரில் கார் வாங்குகிறார்களோ அதே கலர் உடையில் டெலிவரி நிகழ்ச்சிக்கு செல்லலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 29, 2023, 17:55 [IST]
English summary
Family wears blue colour dress to take delivery of a blue volkswagen virtus video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+