ரோட்டுல சும்மா போயிட்டு இருந்தவங்களுக்கு வம்படியா கூப்பிட்டு ஹெல்மெட்டை வழங்கிய நடிகர்! கொடை வள்ளலா இருப்பாரோ!

சினிமாக்களில் மோசமான வில்லன்களாகவும், காமெடியன்களாகவும் காட்சிப்படுத்தப்படும் ஒரு சிலர் நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களாக இருக்கின்றனர். ஏன் ஒரு சிலர் கடவுளையே மிஞ்சும் வகையில் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டு, அதன் ஆரோக்கியத்திற்காக அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மிக சிறந்த உதாரணமாக பலர் இருக்கின்றனர்.

அவர்களில் ஒருவராக தொலைக்காட்சி ஆங்கரும், நடிகருமான பாலா உள்ளார். அவர் தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன்னுடைய நலனை மட்டும் பார்க்காமல், ஏழை மற்றும் எளிய மக்களின் நலனுக்காகவும் செலவு செய்துக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர் செய்து வரும் உதவிகள் சிறிதுதான்.

Sonu sood provides free helmets

ஆனால், அதைப் பெற கூடியவர்களுக்கு அது மிக மிக பெரியது ஆகும். பாலா போக்குவரத்து வசதியே இல்லாத மலை மற்றும் குக்கிராமங்களுக்கு உதவும் விதமாக ஆம்புலன்ஸ்களையே வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக, பிறர் யாரின் உதவியும் இன்றி இந்த சமூக அக்கறை செயலில் அவர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்.

இவரைப் போலவே இன்னும் பல நல்லுல்லம் கொண்டவர்கள் இருக்கின்றனர். சொல்லப்போனால் வெளியுலகிற்கே தெரியாத வண்ணம் பலர் உதவிகளை இல்லாதப்பட்டோருக்கு செய்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, எந்தவொரு விளம்பரப்படுத்தலும் இன்றி உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தகையோரில் ஒருவர் என்றே நடிகர் அஜித்தை ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர்.

Sonu sood hand out helmets

இந்த நிலையிலேயே சாலையில் ஹெல்மெட்டே இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திரையில் வில்லனாகக் காண்பிக்கப்படும் ஓர் நடிகர், இலவசமாக வழங்கி அசத்தி இருக்கின்றார். அவர் வேறு யாரும் இல்லைங்க பிரபல நடிகரான சோனு சூட்-டே ஆவார். இவருடன் மஹாராஷ்டிரா ஏடிஜிபி-யும் இணைந்தே தலைக்கவசம் இல்லாமல் சாலையில் வலம் வந்தோருக்கு ஹெல்மெட்டுகளை வழங்கி இருக்கின்றார்.

இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரைப் பாதுகாப்பதில் தலைக் கவசம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இத்தகைய ஓர் பொருளையே பிரபல நடிகர் இலவசாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தற்போது வழங்கி இருக்கின்றார். இவர் இதுபோன்ற பொதுமக்களுக்கு தாமாக முன் வந்து உதவி புரிவது முதல் முறையல்ல.

இதற்கு முன்பு அவர் பல்வேறு உதவிகளை ஏழை மற்றும் எளிய மக்களுக்கு செய்து இருக்கின்றார். குறிப்பாக, அவர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டு வரப்பட்ட லாக்-டவுண் காலத்தில் ஆற்றிய சமூக நல பணிகள் ஏராளமானவை. பேருந்து மற்றும் அடிப்படை வசதி என பலவற்றை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் செய்துக் கொடுத்தார்.

இந்நிலையிலேயே மஹாராஷ்டிரா காவல்துறை உடன் இணைந்து ஹெல்மெட் இல்லாமல் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச ஹெல்மெட்டை வழங்கினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் ஹெல்மெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துக் காணப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இதுதவிர, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். வீட்டில் உங்களுக்கானவர் உங்கள் வருகை நோக்கிக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால், பத்திரமாக வீடு போயி சேர ஹெல்மெட்டைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதுமட்டுமில்லைங்க, நாம் சரியாக சென்றாலும், நம்மை போல மற்றவர்களும் சரியாகவே வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆகையால், விபத்து எப்போது வேண்டுமானாலும் அரங்கேறலாம். நம்மை நாம்தான் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கடைசியாக, இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் நான் மிகுந்த பெருமைக் கொள்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் கூறியதைப் போல் இந்தியாவில் ஹெல்மெட்டைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. ஒரு சிலரே குடும்பத்திற்கு தன்னுடைய தேவை இருப்பதை உணர்ந்து ஹெல்மெட் மற்றும் பிற பாதுகாப்பு கவசங்களை அணிந்து பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இருசக்கர வாகன ஓட்டி மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்பவர் என இருவரும் தலைக்கவசம் அணிந்து பயணிப்பது கட்டாயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 6, 2023, 16:33 [IST]
English summary
Famous actor sonu sood gives helmets to bikers in maharashtra
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+