கூட வேலை பார்க்கும் தோழிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை! பிறந்தநாள் பரிசாக இருந்தாலும் நியாயம் வேண்டாமா?

கிம் கர்தாஷியன் (Kim Kardashian), பிரபல அமெரிக்கன் மாடலிங் (Modeling) பெண் ஆவார். மாடலிங் மட்டுமின்றி, ஃபேஷன் (Fashion), நடிப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எப்போதும் படு பிசியாக இருக்கக்கூடியவர். இதுமட்டுமின்றி, தொழிலதிபராகவும் கிம் கர்தாஷியன் உள்ளார். ஸ்கிம்ஸ் (SKIMS) என்கிற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை சகோதரி மற்றும் தோழிகள் உடன் இணைந்து கிம் கர்தாஷியன் நடத்தி வருகிறார். இந்த நிலையில், தனது தோழியின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் ஓர் பிரம்மாண்ட பரிசை வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார்.

கிம் கர்தாஷியனை போல, அமெரிக்காவில் டெஸ்லா (Tesla) எலக்ட்ரிக் கார்களும் பிரபலமானவை ஆகும். பல சினிமா பிரபலங்கள், பணக்காரர்களிடம் டெஸ்லா கார்கள் உள்ளன. குறிப்பாக, டெஸ்லாவின் லேட்டஸ்ட் அறிமுகமான சைபர்டிரக் (Cybertruck)-ஐ விவிஐபிகள் கூட போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இப்போது சம்பந்தமே இல்லாமல் சைபர்டிரக்கை பற்றி ஏன் கூறுகிறோம் என உங்களுக்கு கேட்க தோன்றலாம்.

kim kardashian gifts tesla cybertruck

கிம் கர்தாஷியன் தனது தோழிக்கு வழங்கியிருக்கும் அந்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு வேறு எதுவுமில்லை, டெஸ்லா சைபர்டிரக் வாகனம் ஆகும். கிம் கர்தாஷியனின் நெருங்கி தோழியாக இருப்பவர், ட்ரேசி ரோமுலஸ் (Tracy Romulus). நெருங்கிய தோழி மட்டுமல்ல, கிம் கர்தாஷியனின் நிறுவனங்களுக்கு முதன்மை பிராண்ட் அதிகாரி ஆவார். ஸ்கிம்ஸ் நிறுவனத்தின் தகவல்தொடர்பு நிர்வாக பிரிவின் துணை தலைவராக உள்ளார்.

இதனாலேயே கிம் உடன் எப்போதும் நெருக்கமாக இருக்கும் ட்ரேசி ரோமுலஸின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த பிரம்மாண்ட பரிசு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த பரிசை ட்ரேசிக்கே தெரியாமல், சர்பிரைஸ் (Surprise) பரிசாக கிம் கர்தாஷியன் வழங்கியுள்ளார். அதாவது, தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பெறுவதற்காக கிம் கர்தாஷியனின் வீட்டிற்கு ட்ரேசி ரோமுலஸ் வந்துள்ளார்.

kim kardashian gifts tesla cybertruck

ட்ரேசி தன்னை தேடி வருவதை அறிந்ததும், அவரை வெளியிலேயே நிறுத்திய கிம், ட்ரேசியை வீட்டிற்கு வெளியே பார்க்க சொல்லியுள்ளார். கிம் காட்டிய திசையை பார்த்த ட்ரேசிக்கு பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சிவப்பு நிறத்திலான ரிப்பன் கட்டப்பட்ட புத்தம் புதிய டெஸ்லா சைபர்டிரக் ஒன்று வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர், இருவரும் சைபர்டிரக்கின் அருகே சென்று பார்வையிட்டனர். அப்போதும் ட்ரேசி இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதில் இருந்து ட்ரேசி எந்த அளவிற்கு சர்பிரைஸ் ஆகிவிட்டார் என்பதை அறிய முடிகிறது. அமெரிக்காவில், டெஸ்லா சைபர்டிரக்கின் விலை ஏறக்குறைய 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.85.20 லட்சம் ஆகும்.

ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் என இரு விதமான வெர்சன்களில் அமெரிக்காவில் சைபர்டிரக் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ரியர்-வீல்-டிரைவ் வெர்சனின் விலை 60,990 டாலர்களாகவும், ஆல்-வீல்-டிரைவ் வெர்சனின் விலை 79,990 டாலர்களாகவும் உள்ளது. இவை இரண்டு இல்லாமல், சைபர்பீஸ்ட் (Cyberbeast) வெர்சனிலும் சைபர்டிரக் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதில் எந்த வேரியண்ட் (Variant)-இல் சைபர்டிரக்கை கிம் கர்தாஷியன் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமா பிரபலங்களும், பணக்காரர்களும் அவர்களது மனதிற்கு பிடித்தவர்களுக்கு விலையுயர்ந்த வாகனங்களை பரிசளித்து இருப்பதை இதற்குமுன் பலமுறை பார்த்துள்ளோம். இருப்பினும், டெஸ்லா சைபர்டிரக் ஒருவருக்கு பரிசளிக்கப்பட்டு இருப்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். ஏனெனில், இந்தியாவில் விற்பனையில் இல்லாத இந்த டெஸ்லா எலக்ட்ரிக் வாகனத்திற்கு அமெரிக்காவிலும் டிமாண்ட் அதிகமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 24, 2024, 15:15 [IST]
English summary
Famous american model gifts tesla cybertruck to her friend
மேலும்... #tesla #electric car #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+