எத்தனை பணக்காரர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருப்பாரு... BMW கார் வாங்கும் அளவுக்கு பணம் கொட்டுது போல!!

பி.எம்.டபிள்யூ (BMW) கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது. வாங்கினால் பிஎம்டபிள்யூ காரை மட்டும் தான் வாங்குவது என்கிற கொள்கை உடன் இருப்பவர்களும் இருக்கின்றனர். அத்தகையவர்கள் மூலமாகவே, இந்தியாவின் 2வது மிக பெரும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்துக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்கள் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 22 விதமான பிஎம்டபிள்யூ கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த 22 பிஎம்டபிள்யூ கார்களில் விலை குறைவானது, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (X1) என்கிற லக்சரி எஸ்யூவி கார் ஆகும்.

kerala architect buys bmw x1

குறைவான விலையின் காரணமாகவே, இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விற்பனையில் எக்ஸ்1 காரின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. விலை குறைவான பிஎம்டபிள்யூ கார் என்றவுடன் சில இலட்சங்களில் விலையை எதிர்பார்க்க வேண்டாம். எக்ஸ்1 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.50.80 லட்சத்தில் இருந்து ரூ.53.80 லட்சம் வரையில் உள்ளன.

இத்தகைய விலை குறைவான பிஎம்டபிள்யூ காரை தான் தற்போது ஒரு பிரபலமான கட்டிட கலை நிபுணர் வாங்கியுள்ளார். இவரது பெயர், விவேக் பிபி (Vivek PP) ஆகும். கேரளாவின் கோழிக்கோட்டில் 'டீ எர்த்' (de Earth) என்கிற பெயரில் கட்டிட கலை நிறுவனத்தை நடத்திவரும் விவேக், குறிப்பாக பழமையான டிசைனையும், இன்றைய கால மாடர்ன் டிசைனையும் கலந்து கட்டிடங்களை வடிவமைப்பதில் கைத்தேர்ந்தவராக உள்ளார்.

kerala architect buys bmw x1

கம்பெனியின் பெயருக்கு ஏற்ப, இயற்கை வளங்களை பாதிக்காத வண்ணம், இயற்கை சூழலோடு விவேக் பிபி தனது கட்டிட கலை டிசைன்களை கஸ்டமர்களுக்கு வழங்குகிறார். இதற்காக ஒரு குழுவை நியமித்து பிஸ்னஸ் செய்துவரும் விவேக் பிபி அதன் மூலம் கிடைத்த வருவாயில் தற்போது பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

மனைவி, மகன் மற்றும் மகள் உடன் ஒரே மாதிரியாக கருப்பு நிற உடையில் சென்று, பளபளப்பான கருப்பு நிறத்திலான எக்ஸ்1 காரை கட்டிட கலை நிபுணர் விவேக் பிபி டெலிவிரி பெறுவதை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளது. ஷோரூமில் குடும்பத்துடன் கேக் வெட்டி மகிழ்ச்சியாக புதிய எக்ஸ்1 காரை விவேக் பிபி டெலிவிரி பெற்றுள்ளார்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் என்ஜின் உடன் எக்ஸ்1 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.50.80 லட்சமாகவும், டீசல் என்ஜின் உடன் சற்று அதிகமாக ரூ.53.80 லட்சமாகவும் உள்ளது. தற்சமயம் மொத்தம் ஐந்து விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பிஎம்டபிள்யூ எஸ்யூவி கார் கிடைக்கிறது.

அல்பைன் வெள்ளை, பிளாக் சாப்பையர் மெட்டாலிக், எம் போர்டிமா ப்ளூ மெட்டாலிக், ஸ்டோர்ம் பே மெட்டாலிக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் மெட்டாலிக் என்பன அந்த ஐந்து கலர் ஆப்ஷன்கள் ஆகும். இதில், பிளாக் சாப்பையர் மெட்டாலிக் கலர் ஆப்ஷனில் தனது புதிய எக்ஸ்1 காரை பிரபல கட்டிட கலை நிபுணர் விவேக் பிபி வாங்கி உள்ளார்.

5 இருக்கைகளை மட்டுமே கொண்ட லக்சரியான எஸ்யூவி காரான பிஎம்டபிள்யூ எக்ஸ்1 -இல் பொருத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 136 பிஎஸ் மற்றும் 230 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், 2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 360 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரள கட்டிட கலை நிபுணர் விவேக் பிபி எந்த என்ஜின் உடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை வாங்கியுள்ளார் என்கிற விபரத்தை பெற முடியவில்லை. இவ்வாறான விலையுயர்ந்த கார்களை எல்லாம் பெரும்பாலானோர் டீசல் என்ஜின் உடன் வாங்கவே விரும்புகின்றனர். புதிய கார் வந்த ராசி விவேக் பிபி-க்கு மேலும் வளர்ச்சி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2025, 23:20 [IST]
English summary
Famous architect vivek pp buys brand new bmw x1 luxury car
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+