சலூன் தொழிலை நல்லா கத்துக்கிட்டவர் இன்று பென்ஸ் காருக்கு ஓனர்! மனைவி, குடும்பத்துடன் ஷோரூமில் கொண்டாட்டம்!
இந்தியாவின் பிரபலமான சிகை அலங்கார நிபுணர்களுள் ஒருவர், அலீம் ஹகீம் (Aalim Hakim) ஆவார். நடிகர் சல்மான் கான், விராட் கோலி போன்ற பல பிரபலங்களுக்கு இவர் முடி அலங்காரம் செய்பவராக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில், அலீம் ஹகீம் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்தின் புதிய சொகுசு கன்வெர்ட்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அலீம் ஹகீமும், அவரது மனைவியும் ரூ.1.2 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்இ கேப்ரியோலெட் (CLE Cabriolet) காரை ஷோரூமில் இருந்து டெலிவரி பெற்றுள்ளனர். இதற்கு முன்னர், பி.எம்.டபிள்யூ சிஇ-02 (BMW CE-02) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அலீம் ஹகீம் வாங்கி இருந்தார்.

சல்மான் கானின் ஹேர் ஸ்டைலிஸ்ட் அலீம் ஹகீம் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்இ கேப்ரியோலெட் காரை டெலிவரி பெறும் வீடியோ அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அலீம் ஹகீமும் அவரது மனைவி ஷானோ ஹக்கீமும் அவர்களது இரண்டு மகன்களுடன், மும்பையில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஷோரூமுக்கு, அவர்களது மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் சொகுசு எம்பிவி காரில் வந்து புதிய சிஎல்இ கேப்ரியோலெட் காரை டெலிவிரி பெற்றுள்ளனர்.
அலீம் ஹகீம் மற்றும் அவரது மனைவிக்கு ஷோரூமில் ரெட் கார்ப்பெட் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரை டெலிவிரி பெறும்போது தனது மனைவியின் காலில் இருந்து ஒரு ரோஜாவை எடுத்து அவரிடம் அலீம் ஹகீம் கொடுத்து சர்பிரைஸ் செய்துள்ளார். பிறகு, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்இ கேப்ரியோலெட் காருக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு முடித்ததும், குடும்பத்தினர் உடன் புத்தம் புதிய காரை அலீம் ஹகீம் டெலிவிரி பெற்றார்.

பெரிய பெட்டி ஒன்றில் வைத்து இவரது புதிய சிஎல்இ கேப்ரியோலெட் கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. தம்பதியினர் காருக்கு முன்னால் ஒருவரையொருவர் முத்தமிட்டு, கொண்டாட்டத்துடன் காரை டெலிவிரி பெற்றுள்ளனர். இறுதியாக, அலீம் ஹகீமின் மனைவி காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்து, காரின் சிவப்பு நிற கன்வெர்ட்டிபிள் மேற்கூரையை மூடிக்கொண்டு, ஷோரூமில் இருந்து காரை ஓட்டிச் சென்றார்.
அலீம் ஹகீம் வாங்கிய கார், மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்இ காப்ரியோலெட் என்கிற ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த இரண்டு கதவுகள் மட்டுமே கொண்ட கன்வெர்டிபிள் காரை இவர் சாடின் கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார். காரில் 19 அங்குல ஏஎம்ஜி-ஸ்டைல் மல்டி-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிஎல்இ கேப்ரியோலெட் காரின் உட்புறத்தில் சிவப்பு நிற லெதர் இன்டீரியர் உள்ளது.

சிஎல்இ கேப்ரியோலெட் காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 258 bhp ஆற்றலையும், 400 என்.எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
0-இல் இருந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தை இந்த காரில் வெறும் 6.6 வினாடிகளில் எட்டிவிடலாம். ஏற்கனவே கூறியதுபோல், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில், அலீம் ஹகீம் ஒரு புதிய பி.எம்.டபிள்யூ சிஇ-02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் வாங்கி இருந்தார். இப்போது போல் அப்போதும் தனது குடும்பத்துடன் பி.எம்.டபிள்யூ ஷோரூமுக்கு வந்து ஸ்கூட்டர் டெலிவரியை இவர் கொண்டாடினார்.

பி.எம்.டபிள்யூ சிஇ-02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தற்போதைய விலை ரூ.4.5 லட்சம் ஆகும். இது 11 kW எலக்ட்ரிக் மோட்டாருடன் வருகிறது. இது 0-50 கி.மீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும் மற்றும் அதிகபட்சமாக 95 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். இதன் 3.9 kWh பேட்டரி பேக் ஆனது அதிகப்பட்சமாக 108 கி.மீ தூரத்திற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்லக்கூடியது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.1.2 கோடி மதிப்பில் பென்ஸ் காரை வாங்கியுள்ளார் என்றால், முடி திருத்துபவரான அலீம் ஹகீம் தனது தொழிலில் எந்த அளவிற்கு செழிப்பானவராக உள்ளார் என்பதை அறியலாம். இந்த புதிய காரை வாங்கி இருப்பதினால், கஸ்டமர்களுக்கு சிகை அலங்காரம் செய்ய இனி புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்இ கேப்ரியோலெட் காரில்தான் இவர் செல்வார் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









