லாரி ஸ்டேரிங் சக்கரத்தை பிடித்த கைகள், இன்று லம்போர்கினி மீது! சோசியல் மீடியா தான் எல்லாத்தையும் கொடுக்குது!

லம்போர்கினி (Lamborghini) கார்களை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். ஆனால், நம்மில் பலரது நிலைமை எப்படியாவது ஒரு லம்போர்கினி காரை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்கிற நிலையில்தான் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இருந்து இணையத்தளத்தின் உதவியினால் இன்று லம்போர்கினி கார் ஒன்றை ஓட்டி பார்த்துள்ள லாரி (Lorry) டிரைவரை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இவரது பெயர், ராஜேஷ் ஆகும். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் இந்தியா முழுவதும் லாரி ஓட்டுவதற்கு அனுமதி பெற்ற மற்றும் அனுபவமிக்க லாரி டிரைவராக உள்ளார். இதன் மூலம், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ராஜேஷ், சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமான பின்பு, அதன் மூலம் இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமாகினார்.

famous indian lorry driver drives lamborghini huracan luxury car

குறிப்பாக, இந்தியாவில் லாரி டிரைவர்களின் வாழ்க்கையை பற்றி அறிய ஆர்வம் காட்டுவர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமாக இருக்கும் ராஜேஷை பொது வெளியில் பார்க்கும்போது சிலர் எளிதாக அடையாளம் கண்டுவிடுகின்றனர். நீண்ட தொலைவிற்கு லாரி ஓட்டி செல்லும்போது ஓய்வுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ பல மணிநேரத்திற்கு லாரியை ஓரங்கட்ட வேண்டியிருக்கும்; இது சில சமயங்கள் சில நாட்கள் அளவிற்கு கூட நீளும்.

அத்தகைய நேரங்களில் லாரி டிரைவர் ராஜேஷ் அருகில் உள்ள பகுதிகளுக்கு சுற்றி பார்க்க செல்லும்போது அவரை சிலர் அடையாளம் கண்டு செல்ஃபி (Selfie), வீடியோ எடுத்துக் கொள்கின்றனர். ராஜேஷும் ரசிகர்களுடன் எடுத்துக் கொள்ளும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவது உண்டு. அவ்வாறு ராஜேஷ் தற்போது ஒரு வீடியோவை தனது யுடியூப் (Youtube) சேனலில் வெளியிட்டு உள்ளார்.

famous indian lorry driver drives lamborghini huracan luxury car

அதில், லம்போர்கினி ஹூராகென் கார் ஒன்றை ராஜேஷ் ஓட்டி பார்க்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. வாழ்க்கையில் முதல்முறையாக இவ்வாறான சூப்பர் காரை நேரில் பார்ப்பதாக கூறியப்படி ஜாலியாக ராஜேஷ் ஹூராகென் காரை ஓட்டி பார்த்துள்ளார். லாரியின் ஸ்டேரிங் சக்கரத்தை பிடித்த கைகள் லம்போர்கினி காரின் ஸ்டேரிங் சக்கரத்தை பிடித்து ஓட்டியுள்ளன.

பச்சை நிறத்தை ஜொலிக்கும் இந்த லம்போர்கினி ஹூராகென் கார் ராஜேஷின் நண்பர் ஒருவருடையது ஆகும். பிரபலமானவர்கள் வாழ்வில் சுவாரஸ்யமான விஷயங்கள் எப்போது நடக்கும் என்றே சொல்ல முடியாது என்பதுபோல, ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்த ராஜேஷை பார்க்க அவரை இணையத்தில் பின்தொடர்பவர்களுள் ஒருவர் தனது லம்போர்கினி ஹூராகென் காரில் வந்துள்ளார்.

famous indian lorry driver drives lamborghini huracan luxury car

லாரி டிரைவர் ராஜேஷை கண்டதும், ராஜேஷ் தனது லம்போர்கினி காரை ஓட்ட வேண்டும் என அந்த நண்பர் விரும்பியுள்ளார். இவ்வளவு விலையுயர்ந்த காரை ஓட்டுவதற்கு முதலில் தயங்கிய ராஜேஷ், பின்னர் அந்த நண்பர் எவ்வாறு இந்த காரை ஓட்டுவது என்பதை விளக்குகிறேன் என கூறியதும் ஹூராகென் காரை ஓட்ட முன்வந்துள்ளார்.

காருக்குள் நுழைந்ததும் இருவருக்கு தேவையான போதுமான இடவசதி கிடைக்குமா என தயங்கிய ராஜேஷ், பின்னர் இந்த காரில் இருவர் அமர்வதற்கு இருக்கை வசதிகள் உள்ளன என கார் ஓனர் கூறிய பின் சவுகரியமாக அமர்ந்து காரை ஓட்டியுள்ளார். அப்போதும்கூட முதலில் டிரைவர் சீட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் அமரவே முற்பட்ட லாரி டிரைவர் ராஜேஷை காரின் உரிமையாளர் டிரைவர் இருக்கைக்கு தள்ளி காரை ஓட்ட வலியுறுத்தி உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லம்போர்கினி ஹூராகென் போன்ற விலையுயர்ந்த காரை ஓட்டி பார்க்க எவரொருவரும் விரும்புவோம். இருப்பினும், திடீரென லம்போர்கினி கார் ஒன்றை கொடுத்து ஓட்டு என சொன்னால் எவரொருவருக்கும் கொஞ்சம் தயக்கம் இருக்கதானே செய்யும். இருப்பினும், லாரி டிரைவர் ராஜேஷை அவரது நண்பர் தனது ஹூராகென் காரை ஓட்டும்படி தொடர்ந்து வற்புறத்தியது இவர்கள் இருவர் இடையேயான பிணைப்பை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 17, 2025, 21:45 [IST]
English summary
Famous indian lorry driver drives lamborghini huracan luxury car in assam check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X