வீர முத்துவேல் இவரை ஞாபகம் இருக்கா... சந்திரயான் 3 திட்ட இயக்குநர் இந்த காரையா பயன்படுத்திட்டு இருக்காரு!!
உலக நாடுகளுக்கு மத்தியில் நிலவின் தென் துருவத்தில் யார் முதலில் கால் தடம் பதிக்கப் போகிறார்கள் என்கிற போட்டி நிலவி வந்தநிலையில், முதல் ஆளாக நமது இந்தியா நிலவின் தென் துருவத்தில் வெற்றி கரமாக விக்ரம் லேண்டரை களமிறக்கி சாதனைப் புரிந்தது.
இந்தியாவின் இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அவசரகதியாக சந்திரயான் 3 விண்கலத்திற்கு போட்டியாக ரஷ்யாவும் ஓர் விண்கலத்தை அனுப்பியது. ஆனால், அந்த விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலும் நிலவில் தரையிறங்கும் முன் விழுந்து நொறுங்கி சேதமடைந்தது.

ஆகையால், இப்போது வரை நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்க முதலும் மற்றும் கடைசி நாடாகவும் இந்தியாவே இருக்கின்றது. இந்த சந்திரயான் 3ன் வெற்றிக்கு பின்னால் வீர முத்துவேல் எனும் தமிழரே இருக்கின்றார். இவரே சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குநர் ஆவார்.
இவர் என்ன மாதிரியான காரை பயன்படுத்தி வருகின்றார் என்கிற தகவலே தற்போது இணையத்தின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இவர் மட்டும் இல்லைங்க இஸ்ரோவின் சில புகழ்பெற்ற விஞ்ஞானிகள் என்ன மாதிரியான காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பி வீர முத்துவேல்: சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குநரான இவர் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) செடான் காரையே பயன்படுத்தி வருகின்றார். மிகப் பெரிய விஞ்ஞானியானி இவ்ளோ சாதாரணமான காரையா பயன்படுத்தி வருகின்றார் என நம்மையே ஆச்சரியப்பட செய்திருக்கின்றார்,வீர முத்துவேல்.
இந்தியாவில் இந்த கார் ரூ. 9.30 லட்சம் தொடங்கி ரூ. 12.45 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த அளவு பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எளிமையான சியாஸ் காரையே முத்துவேல் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், இந்த ஒற்றை மோட்டார் தேர்வில் மட்டுமே சியாஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த மோட்டார் 103 எச்பி மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த மோட்டாரில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் பட்ஜெட் விலையைக் கொண்டிருந்தாலும் மாருதி சுஸுகி அதில் ஏராளமான பிரீமியம் தர அம்சங்களை வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால் சில முக்கிய பிரபலங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீதர பனிக்கர் சோம்நாத்: இவரே இஸ்ரோவின் இப்போதைய சேர்மேன் ஆவார். இவரின் தலைமையிலேயே சந்திரயான் 3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது. இவர் இந்திய அரசியல்வாதிகளின் பிரியமான காராக கருதப்படும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவை பயன்படுத்தி வருகின்றார். இன்னோவா க்ரிஸ்டா இப்போது டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அதேவேளையில், இதன் பெட்ரோல் மோட்டார் தேர்வு இன்னோவா ஹைகிராஸ் எனும் மாடலாக விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி பெட்ரோல் தேர்வில் 2.4 லிட்டர் மோட்டாரும், டீசல் தேர்வில் 2.7 லிட்டர் எஞ்ஜினும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் பெட்ரோல் மோட்டார் 166 எச்பி பவரையும், 245 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
அதேவேளையில், இதன் டீசல் ஆப்ஷன் 150 எச்பி மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா ரூ. 19.99 லட்சம் தொடங்கி ரூ. 26.05 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய சற்று அதிக விலைக் கொண்ட காரையே இஸ்ரோவின் சேர்மேனான ஸ்ரீதர பனிக்கர் சோம்நாத் பயன்படுத்தி வருகின்றார்.

கே சிவன்: இஸ்ரோவின் முன்னாள் சேர்மேன் இவர் ஆவார். சந்திரயான் 2 இவரின் மேற்பார்வையிலேயே விண்ணிற்கு அனுப்பப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இந்த திட்டம் தோல்வியை தழுவியது. அப்போது இவர் அழுததை பார்த்து இந்த நாடே சோகத்தில் மூழ்கிவிட்டது. இந்த திட்டத்தில் தோல்வியை இவர் தழுவினாலும், அதற்கு முன்னதாக பல்வேறு சாதனைகளை இவர் புரிந்திருக்கின்றார் என்பதை இந்தியா மறந்துவிடாது.
இந்த விஞ்ஞானி அதிக சொகுசு வசதிகள் நிறைந்த பிஎம்டபிள்யூ 320டி காரை பயன்படுத்தி வருகின்றார். இது இந்தியாவில் பன்முக எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், சிவன் பயன்படுத்துவது 320டி எனும் டீசல் எஞ்ஜின் கொண்ட தேர்வாகும். இந்த தேர்வில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்ஜின் 190 எச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிலேயே இந்த மோட்டார் இயங்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 50 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இத்தகைய காஸ்ட்லியான சொகுசு காரையே கே சிவன் பயன்படுத்தி வருகின்றார்.

முத்தையா வனிதா: மஹிந்திரா கேயூவி100 என்கிற மிக மிக எளிமையான காரையே இந்த சைன்டிஸ்ட் பயன்படுத்தி வருகின்றார். லூனார் திட்டத்தின் மிக முக்கியமான நபர் இவர் ஆவார். இத்தகைய மிகப் பெரிய விஞ்ஞானியே மிகவும் எளிமையான கார் மாடலான கேயூவி100 மாடலை பயன்படுத்தி வருகின்றார். இதன் ஆரம்ப விலையே ரூ. 6.18 மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ரித்து கரிதல் ஸ்ரீவஸ்தவா: பி வீர முத்துவேலைப் போலவே இவரும் இந்தியாவின் ஃபேமஸ் செடான் கார் மாடலான மாருதி சியாஸ் காரையே பயன்படுத்தி வருகின்றார். இவரை இந்தியாவின் ராக்கெட் பெண் என செல்லமாக அழைக்கின்றனர்.. சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்க கடினமாக உழைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது காலத்தால் அழிக்க முடியாத ஒன்று. இதுமட்டுமில்லைங்க இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டல் மிஷன், மங்கல்யான் உள்ளிட்ட திட்டங்களிலும் இவர் முக்கிய பங்கினை ஆற்றியிருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விஞ்ஞானிகள் இல்லை எனில் இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி விஷயத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றே கூறலாம். இவர்களின் கடின உழைப்பும், அதி திறனுமே இஸ்ரோவின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. மேலும், வரும் நாட்களில் இன்னும் பல்வேறு சாதனைகளை அது புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









