இன்ஸ்டாகிராம் மொத்தமாக வாழ்க்கையை திருப்பி போட்டுடுச்சு! குடும்பத்துடன் விலையுயர்ந்த காரை வாங்கியது இவர்களா?
யூடியூப் (Youtube), இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரது வாழ்க்கை வேற லெவலுக்கு மாறியுள்ளது. அதன் மூலமாக, புதியதாக சொகுசு கார்களை வாங்கியவர்களும் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில், கேரளாவில் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவுகளை பதிவிட்டு பிரபலமாகிய தம்பதி புதியதாக ஜீப் (Jeep) நிறுவனத்தின் விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளனர். யார் அந்த கேரள தம்பதியினர் என்பதையும், அவர்கள் வாங்கியுள்ள ஜீப் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
அமெரிக்க கார் நிறுவனமான ஜீப் இந்தியாவில் தற்போதைக்கு 4 விதமான கார்களை விற்பனை செய்கிறது. அவற்றுள் விலை குறைவான கார்களுள் ஒன்று, மெரிடியன் (Meridian) ஆகும். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஜீப் காரான காம்பஸ் -இன் 6/7-சீட்டர் வெர்சனாக மெரிடியன் விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவான ஜீப் காராக மெரிடியனை சொன்னாலும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.38.80 லட்சம் வரையில் உள்ளன. இத்தகைய காரை வாங்கியிருக்கும் பிரபல கேரள இன்ஸ்டாகிராம் தம்பதி, அஜீஷ்- ஷோனிமா (Ajeesh- Shonima) ஆவர். அஜீஷூக்கு சகோதரர் ஒருவர் அகில் அசோக் என்பவர் உள்ளார்.
அஜீஷும், அகில் அசோக்கும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இரட்டை சகோதரர்கள் போன்று இருப்பர். ஆனால், அகில் அசோக் பெரியதாக இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் கிடையாது. அதுவே, அஜீஷ் தனது மனைவி ஷோனிமா உடன் நகைச்சுவையாக நடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடும் பதிவுகள் ஒவ்வொன்றும் பல ஆயிரம் லைக்குகளை பெறுகின்றன.

வேற்று மாநில மக்கள் மத்தியிலும் கவனத்தை பெறும் பொருட்டு அஜீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மல்லு கபுள் 2.0 (Mallu couple 2.0) என பெயர் வைத்துள்ளார். இவரது சகோதரர் அகில் அசோக்கிற்கும் திருமணமாகி விட்டது. சகோதரர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தங்களது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் ஜீப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூமுக்கு சென்று மெரிடியன் காரை டெலிவிரி பெற்றுள்ளனர்.
தங்களது வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுபவர், புதியதாக கார் வாங்கியதை மட்டும் விடுவாரா என்ன...? பிராண்ட்-நியூ ஜீப் மெரிடியன் காருடன் குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அஜீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அவற்றிற்கு தற்போதுவரையில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.

ஜீப் மெரிடியன் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், லாங்கிட்யூட், லாங்கிட்யூட் பிளஸ், லிமிடெட் (ஆப்ஷ்னல்), ஓவர்லேண்ட் என 4 விதமான வேரியண்ட்களில் இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்த கார் மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரில் பொருத்தப்படும் 2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜீப் மெரிடியன் காரின் விலைகளாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் 1 லட்ச ரூபாய் வரையில் அதிகமாக வரும். இவ்வளவு விலைமிக்க காரை அஜீஷ் தனியாளாக வாங்கினாரா அல்லது அவரது சகோதரரின் உதவியுடன் வாங்கினாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









