யூடியூப் மூலம் இந்த அளவுக்கு சம்பாதிக்கலாமா? 24 வயது இளைஞரின் வாழ்க்கை மொத்தமா மாறிடுச்சு!!

உலகமே இன்று இணையத்தின் பிடியில் உள்ளது என சொன்னால் அது மிகையில்லை. உலக மக்களில் பலர் சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக, சமூக வலைத்தளங்களில் பலர் பிரபலமாக இருக்கின்றனர். ஒரு சிலர் சினிமா நடிகர், நடிகைகளை காட்டிலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளனர். இதன் மூலமாக, அத்தகையவர்களுக்கு கணிசமாக வருவாய் கிடைத்து வருகிறது. அவ்வாறு கிடைக்கும் வருவாயில் புதிய கார் & பைக்குகளை வாங்கியுள்ளவர்கள் பலரை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அந்த வரிசையில், கேரளாவில் சிறுவர்களின் சூப்பர்ஹீரோ போல் விளங்கும் யூடியூப்பர் ஒருவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரை வாங்கியுள்ளார். யார் அந்த கேரள யூடியூப்பர்? அவர் வாங்கியிருக்கும் ஃபார்ச்சூனர் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

youtuber buys used toyota fortuner

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதான முகமது நிஹாட். மிஸ்டர் தொப்பி என்கிற பெயரில் கேம் வீடியோக்களை அவ்வப்போது பதிவிடுவதன் மூலம் யூடியுப்பில் பிரபலமாக உள்ளார். குறிப்பாக, மலையாள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவரது வீடியோக்களை ஆர்வமாக பார்க்கின்றனர். இதன் காரணமாகவே, பலருக்கு இவரது உண்மையான பெயர் தெரியவில்லை, யூடியூப் சேனலின் தொப்பி பெயரில் தான் இணையத்தில் இவரை அழைக்கின்றனர்.

வெளிநாட்டு யூடியூப்பர்களை போன்று கேம் சம்பந்தமான வீடியோக்களை சுவாரஸ்யமானதாக வழங்குவதன் காரணமாக இவருக்கு குறிப்பாக சிறு வயது ரசிகர்கள் அதிகம். இவ்வாறு யூடியூப்பில் பிரபலமாக விளங்கும் முகமது நிஹாட் புதியதாக டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை வாங்கி உள்ளார். ஃபார்ச்சூனர் கார்களுக்கு இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

youtuber buys used toyota fortuner

இந்த டொயோட்டா காரை புத்தம் புதியதாக முகமது நிஹாட் வாங்கவில்லை. செகண்ட்-ஹேண்டில் வாங்கியுள்ளார். ஃபார்ச்சூனர் காரை செகண்ட்-ஹேண்டில் வாங்கவும் நிறைய பேர் விரும்புகின்றனர். ஃபார்ச்சூனர் காரை வாங்கியிருப்பதையும் முகமது நிஹாட் தனது யூடியூப் சேனலில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். எவ்வளவு விலைக்கு இந்த காரை இவர் வாங்கியுள்ளார் என்பது குறித்த விபரங்கள் இல்லை.

யூடியூப்பர் தொப்பியிடம் ஏற்கனவே டாடா நானோ கார் ஒன்று உள்ளது. அதற்கு அடுத்ததாக இவரது கேரேஜில் இணைந்துள்ள 2வது கார் இந்த செகண்ட்-ஹேண்ட் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 2009ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரையில் இந்த ஃபார்ச்சூனர் கார் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

youtuber buys used toyota fortuner

அதன்பின் கடந்த 12 வருடங்களாக எதனால் இந்த கார் பயன்படுத்தப்படவில்லை? அல்லது, இடையில் வேறொருவரின் கைக்கு இந்த கார் சென்றதா? என்கிற விபரங்கள் இல்லை. 2009- 2012 சமயத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு, இண்டர்கூல்டு, 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது. அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 343 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.20 லட்சம் என்கிற அளவில் இருந்தது. அந்த சமயத்தில் ஃபார்ச்சூனருக்கு போட்டியளிக்கும் விதமாக ஃபோர்டு எண்டேவியர் விற்பனையில் இருந்தது. ஆனால், சில வருடங்களுக்கு முன் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியதால் தற்போது எண்டேவியர் விற்பனையில் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை புத்தம் புதியதாக வாங்கவே பலரும் விரும்புகின்றனர். இருப்பினும் அதேநேரம், செகண்ட்-ஹேண்ட் கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாகவும் ஃபார்ச்சூனர் விளங்குகிறது. ஆதலால், இத்தகைய காரை இந்த கேரள யூடியூப்பர் வாங்கியிருப்பதில் பெரியதாக ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 16, 2024, 17:09 [IST]
English summary
Famous kerala youtuber buys used toyota fortuner check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X