லாரி டிரைவராக ஆரம்பித்த வாழ்க்கை... இந்த நாளுக்காக எத்தனை கஷ்டங்களை பொறுத்துக்கிட்டு இருந்திருப்பாரு!!

ராஜேஷ் ரவானி (Rajesh Rawani), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போன்று உங்களில் சிலருக்கு தோன்றலாம். குறிப்பாக, லாரி டிரைவர்கள் (Lorry Drivers) ஆக இருப்பவர்களுக்கும், லாரி டிரைவர்களின் வாழ்க்கை முறையை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக காணோளிகளை பார்ப்பவர்களுக்கும் ராஜேஷ் ரவானி என்கிற பெயர் கேள்விப்பட்டது போன்று இருக்கும்.

ஏனெனில், ராஜேஷ் ரவானி என்பவரும் லாரி டிரைவர் ஆவார். லாரி டிரைவர் என்பதை தாண்டி, சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபராக ராஜேஷ் ரவானி விளங்குகிறார். அதாவது, லாரி ஓட்டும்போது அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகியவர், ராஜேஷ் ரவானி ஆவார்.

lorry driver rajesh rawani buys tata tipper ac

சாதாரண மக்களின் வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து லாரி டிரைவர்களின் வாழ்க்கை முறையானது வேறுப்பட்டது ஆகும். ஏனெனில் வருடத்தில் பாதி நாட்களுக்கும் மேல் அவர்கள் குடும்பத்தை விட்டு லாரியில் தொலைத்தூர பகுதிகளுக்கு சென்று வாழ்கின்றனர். சரக்குகளை நீண்ட தொலைவிற்கு அப்பால் உள்ள பகுதியில் சேர்த்துவிட்டு வருவதற்குள் பல நாட்கள் ஆகும் என்பதால், அது வரையில் லாரி டிரைவர்களும், அவர்களுடன் செல்பவர்களும் லாரியிலேயே வாழ்க்கை நடத்துகின்றனர்.

இது வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து வித்தியாசமானதாக உள்ளதால், அதனை மொபைல் போனில் வீடியோவாக காட்சிப்படுத்தி பதிவிடும்போது அது இணையத்தில் கவனத்தை பெறுகிறது. அதன் மூலம் கூடுதல் வருவாயை பெற்று இன்று பணக்காரராக மாறியிருப்பவர் தான் ராஜேஷ் ரவானி ஆவார். பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது.

lorry driver rajesh rawani buys tata tipper ac

சமீப காலத்தில் ராஜேஷ் ரவானி எந்த அளவிற்கு பணக்காரர் ஆகியுள்ளார் என்றால், சமீபத்தில்தான் இவர் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரை வாங்கியதை நமது செய்தித்தளத்தில் கூட பார்த்து இருந்தோம். மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடர்ன் எஸ்யூவி (SUV) ரக காரான ஸ்கார்பியோ-என் காரின் கார்பன் எடிசன் (Carbon Edition) காரை லாரி டிரைவர் ராஜேஷ் ரவானி வாங்கி இருந்தார்.

இந்த நிலையில், சொந்தமாக இவர் தனது முதல் லாரியை தற்போது வாங்கி உள்ளார். லாரி டிரைவராக இருந்து, லாரி உரிமையாளராகி இருக்கும் ராஜேஷ் ரவானி வாங்கி இருப்பது, பிராண்ட்-நியூ டாடா டிப்பர் (Tata Tipper) லாரி ஆகும். ரூ.27 லட்சம் மதிப்பிலான இந்த லாரியின் முக்கிய சிறப்பம்சமே இதில் ஏசி வசதி வழங்கப்படுவது ஆகும்.

lorry driver rajesh rawani buys tata tipper ac

மகன் உள்பட சிலருடன் டாடா ஷோரூமுக்கு சென்று புத்தம் புதிய டிப்பர் லாரியை டெலிவிரி (Delivery) பெறுவதை ராஜேஷ் ரவானி தனது யுடியூப் (Youtube) சேனலில் வெளியிட்டு உள்ளார். டிப்பர் லாரியில் ஏசி வசதி வழங்கப்பட்டாலும், இந்த வகை லாரியில் முழுமையான கேபினை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் வழங்குவது இல்லை.

லாரியை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப கேபினை தனியாக செலவழித்து உருவாக்கி கொள்ள வேண்டும். பெரும்பாலான லாரிகள் மார்க்கெட்டில் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், ராஜேஷ் ரவானி வாங்கி இருக்கும் லாரி ஆனது ஏசி வசதியை கொண்டது என்பதை வெளிக்காட்டும் வகையில் டிரைவருக்கான கேபின் மட்டும் வழங்கப்பட்டுள்ளதை காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லாரி டிரைவராக நீண்ட நாட்களுக்கு குடும்பத்தை விட்டு கடுமையாக உழைக்கும் எவரொவருக்கும் சொந்தமாக லாரி ஒன்றை வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அந்த வகையில், பிரபலமான லாரி ராஜேஷ் ரவானி தனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கிக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும், முதல் லாரியையே ஏசி வசதி உடன் வாங்கி பிரம்மிக்க வைத்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, August 29, 2025, 15:08 [IST]
English summary
Famous lorry driver rajesh rawani buys his first lorry as tata tipper ac
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X