சினிமா ஸ்டார்கள் போட்டி போட்டு வாங்குறாங்க!! இந்த சொகுசு காரில் அப்படி என்ன தான் இருக்கு?

ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர் என்றால், அதில் மாற்று கருத்து இல்லை. ஏனெனில், அந்த அளவிற்கு ரேஞ்ச் ரோவர் கார்கள் கம்பீரமானவைகளாகவும், சொகுசு வசதிகள் மிக்கவையாகவும் விளங்குகின்றன. அதுமட்டுமின்றி, ரேஞ்ச் ரோவர் கார்கள் ஆற்றல்மிக்கவையும் கூட. இதன் காரணமாகவே, நம் இந்தியாவில் நிறைய பேர் ரேஞ்ச் ரோவர் கார்களை விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் நிறைய பேர் குறைந்தது ஒரு ரேஞ்ச் ரோவர் காரை ஆவது வைத்துள்ளனர். அவ்வாறு ரேஞ்ச் ரோவர் கார்களை வைத்திருக்கும் சினிமா & கிரிக்கெட் பிரபலங்கள் சிலரை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆலியா பட் & ரன்பீர் கபூர்: பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் திருமணம் முடிந்த தம்பதி. இவர்களிடத்தில் இரண்டு ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் கார்கள் உள்ளன. இந்த நட்சத்திர தம்பதியின் ஆட்டோபயோகிராபி கார்கள் இரண்டும் பெல்கிராவியா பச்சை நிறத்தில் உள்ளன. இவற்றில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு இன்லைன்-6 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

famous range rover car owner

ரோஹித் சர்மா: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன். இவரிடம் கருப்பு நிறத்தில் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது. தனது ரேஞ்ச் ரோவர் காருக்கு '0264' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டை ரோஹித் சர்மா பொருத்தியுள்ளார். 264 என்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனையாக ரோஹித் சர்மா அடித்த ரன்கள் ஆகும்.

பூஜா ஹெக்டே: பாலிவுட் சினிமாவிலும் நடிக்க துவங்கியுள்ள தென்னிந்திய திரைப்பட நடிகையான பூஜா ஹெக்டே பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை ரூ.4 கோடியில் சமீபத்தில் வாங்கினார். பூஜா ஹெக்டேவின் ஆட்டோபயோகிராபி கார் படுமி கோல்டு நிறத்தில் உள்ளது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், அதில் எந்த என்ஜின் உடன் நடிகை பூஜா ஹெக்டே வாங்கினார் என்பது தெரியவில்லை.

famous range rover car owner

கே.எல் ராகுல்: ரேஞ்ச் ரோவர் காரை வைத்துள்ள மற்றுமொரு பிரபலமான கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் ஆவார். இவரிடம் ரேஞ்ச் ரோவர் கார் பளபளப்பான கருப்பு நிறத்தில் உள்ளது. 3.0 லிட்டர் என்ஜின் உடன் ரேஞ்ச் ரோவர் காரை இவர் வைத்துள்ளார். இந்த என்ஜின் ஆப்ஷனுடன் ரேஞ்ச் ரோவர் காரின் விலை ஆனது ரூ.3.36 கோடியாக தற்சமயம் உள்ளது.

சோனம் கபூர்: நடிகை பூஜா ஹெக்டேவை போன்று, சோனம் கபூரும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் காரை வைத்துள்ளார். அடர் கிரே நிறத்தில் ரூ.3.76 கோடியில் சோனம் கபூர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கினார். சிலமுறை தனது ரேஞ்ச் ரோவர் காரில் சோனம் கபூர் விமான நிலையத்தில் காட்சி தந்துள்ளார். ஆனால், எந்த என்ஜின் ஆப்ஷனில் இவர் காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

famous range rover car owner

ஷாரூக்கான்: பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் ஷாரூக்கானிடம் ரேஞ்ச் ரோவர் கார் இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஷாரூக்கான் வைத்திருப்பது ரேஞ்ச் ரோவர் எஸ்வி லாங் வீல்பேஸ் வெர்சன் ஆகும். ஏறக்குறைய ரூ.4.4 கோடியில் ரேஞ்ச் ரோவர் காரை 3.0 லிட்டர் என்ஜின் உடன் ஷாரூக்கான் வாங்கினார். இவரது ரேஞ்ச் ரோவர் கார் சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன்: பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இந்தியா முழுவதும் அறியப்படுபவருமான அமிதாப்பச்சனிடமும் பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது. ஆனால், இவரிடம் இருப்பது இதுவரையில் நாம் பார்த்ததிலேயே விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் கார் ஆகும். இதனை சுமார் ரூ.5.76 கோடி என்கிற விலையில் அமிதாப்பச்சன் வாங்கியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவர்கள் மட்டுமின்றி, நடிகர் சல்மான் கான் உள்பட இன்னும் சில பாலிவுட் சினிமா நட்சத்திரங்களிடமும் ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன. நம் தமிழ் சினிமா ஸ்டார்களை பொறுத்தவரையில், நடிகர் விஜய்யிடம் ரேஞ்ச் ரோவர் கார் இருப்பது நமக்கு தெரியும். மற்றப்படி, வேறு யார் யாரிடம் உள்ளது என்பது குறித்த விபரங்கள் இல்லை. மற்ற லக்சரி கார்களை காட்டிலும் ரேஞ்ச் ரோவர் கார்கள் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் வித்தியாசமானவை என்பதால் இந்த தொகுப்பில் அவற்றை பார்த்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2024, 10:59 [IST]
English summary
Famous range rover car owners in india check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X