பிரபாஸின் கல்கி படம் ஹாலிவுட்டுக்கு சளைச்சது கிடையாது - பறக்கும் கார் கதை எல்லாம் ரொம்ப பழைசாயிடுச்சு!!

கார் ஓட்ட யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்? அதுவும் பறக்கும் கார் என்றால் சொல்லவா வேண்டும்... பறக்கும் கார்கள் தற்போதைக்கு நிஜ உலகில் எட்டா கனியாகவே உள்ளன. ஆனால், எதிர்காலத்தில் பறக்கும் கார்கள் நிஜமாகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், பறக்கும் கார்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், சில ஹாலிவுட் திரைப்படங்கள் பறக்கும் கார்களை கிராஃபிக்ஸ் மூலமாக திரையில் நம் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளன. இதை ஏன் நாங்கள் இப்போது கூறுகிறோம் என்றால், நடிகர் பிரபாஸின் நடிப்பில் திரைக்கு வந்துள்ள கல்கி 2898AD திரைப்படத்தின் புஜ்ஜி வாகனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சரி, ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டப்பட்ட 10 பிரபலமான பறக்கும் கார்களை பற்றி இனி பார்க்கலாம்.

hollywood movies with flying cars

ஏ.எம்.சி மடடோர் கூபே - தி மேன் வித் தி கோல்டன் கன்: ஹாலிவுட்டில் 1960களில் வெளிவந்த 007 ரக திரைப்படங்களுள் ஒன்று தி மேன் வித் தி கோல்டன் கன் ஆகும். பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை கொண்ட இந்த படத்தில் கற்பனைக்கு எட்டாத அறிவியல் சார்ந்த விஷயங்கள் நிறைய காட்டப்பட்டு இருந்தன. அதில் ஒன்று, இந்த பறக்கும் கார் கான்செப்ட் ஆகும். 1960களில் வெளிவந்த திரைப்படம் என்பதால் பெரியதாக எந்த அலங்காரமும் இல்லாமல், சாதாரண கார் ஒன்றில் இறக்கைகளை பொருத்தி காட்டி இருந்தனர்.

hollywood movies with flying cars

தி ஈகிள் 5 - ஸ்பேஸ்பால்ஸ்: 1987ஆம் ஆண்டில் வெளிவந்த ஸ்டார் வார்ஸ் ரகத்தை சேர்ந்த விண்வெளி காமெடி திரைப்படம். ஈகிள்-5 என்கிற பெயரில் பறக்கும் கார் ஒன்றை இந்த படத்தில் காட்டியிருப்பார்கள். அதாவது, இந்த பறக்கும் கார் ஆனது பூமியை தாண்டி விண்வெளியில் கூட பறக்கும் விதத்தில் காட்டியிருப்பார்கள். குறிப்பாக, சிறுவர், சிறுமியர்களை டார்க்கெட் செய்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

hollywood movies with flying cars

பிலிப்பின் பறக்கும் கார் - ஃப்ளப்பர்: இந்த திரைப்படத்தின் பெயர் நிறைய பேருக்கு ஞாபகத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதில் வரும் பச்சை நிறத்திலான பபிள்-கம் முட்டை போன்ற கதாபாத்திரத்தை உங்களில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தி ஆப்செண்ட்-மைண்டட் புரோஃபெஸ்ஸர் என்கிற திரைப்படத்தின் ரீ-மேக்காக 1997ஆம் ஆண்டில் வெளிவந்த ஃப்ளப்பர் திரைப்படத்தில் ஹீரோ ராபின் வில்லியம்ஸ் ஓர் பறக்கும் காரை வடிவமைப்பார். அதற்கு பபிள்-கம் போன்றதான அந்த கற்பனை கதாபாத்திரம் உயிர் கொடுப்பது போன்று காட்டியிருப்பார்கள்.

hollywood movies with flying cars

ஃப்ளையிங் கார்ஸ் ஆஃப் டோட்டல் ரீகால்: 1990ஆம் காலக்கட்டங்களில் வெளிவந்த அர்னால்ட் திரைப்படங்களை போன்று ஓர் ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்கிற முயற்சியில் 2012இல் இந்த படம் திரைக்கு கொண்டுவரப்பட்டது. அட்வான்ஸான ஆயுதங்களை கொண்டு சண்டை போடுவது போன்றதான காட்சிகள் இந்த படத்தில் நிறைய இடம்பெற்றுள்ளன. இந்த படத்திலும் ஒரு பறக்கும் காரை சேஸிங் காட்சி ஒன்றில் காட்டியிருப்பார்கள்.

hollywood movies with flying cars

தி ஃப்ளையிங் கார்ஸ் ஆஃப் தி ஃபிஃப்த் எலிமெண்ட்: இந்த திரைப்படம் முழுவதுமே எதிர்கால உலகம் எவ்வாறு இருக்கும் என்பதே ஆகும். ஆதலால், பறக்கும் கார்களை சர்வ சாதாரணமாக நிறைய காட்சிகளில் காட்டியிருப்பார்கள். பெரிய, பெரிய கட்டிடங்கள், அதற்கு இடையே புகுந்து செல்லும் பறக்கும் கார்கள் என இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு எதோ வேறொரு புதுமையான உலகத்திற்குள் சென்றது போன்று இருக்கும்.

hollywood movies with flying cars

ஸ்பின்னர்ஸ் - பிளேட் ரன்னர்: கிளாடியேட்டர் திரைப்படங்கள் மூலமாக உலகம் முழுவதும் கவனத்தை பெற்ற ரிட்லி ஸ்காட்டின் இயக்கத்தில் 1980ஆம் காலக்கட்டத்தில் வெளிவந்த சயின்ஸ்-ஃபிக்சன் திரைப்படம் பிளேடர் ரன்னர். இந்த திரைப்படத்தில் ஸ்பின்னர்ஸ் என்கிற பெயரில் பறக்கும் கார்களை காட்டியிருப்பார்கள். 1980ஆம் காலக்கட்டத்தில் சிறந்த கிராஃபிக்ஸ் தரத்தில் வெளிவந்த திரைப்படங்களுள் ஒன்று இது எனலாம்.

hollywood movies with flying cars

நியூ ஸ்பின்னர்ஸ் - பிளேட் ரன்னர் 2049: கல்கி 2898AD திரைப்படத்தை போன்று எதிர்கால கதை களத்தை கொண்ட திரைப்படம் இதுவாகும். மேலே கண்ட பிளேடர் ரன்னர் திரைப்படத்தின் 2ஆம் பாகமாக கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின் திரைக்கு வந்தது. 1980களில் வெளிவந்த படத்திலேயே பறக்கும் கார்களை தாறுமாறாக காட்டிய ரிட்லி ஸ்காட் 2017ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தில் இன்னும் அட்வான்ஸாக, பறக்கும் கார்களின் வடிவமைப்பை இன்னும் நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகவும் காட்டியிருப்பார்.

hollywood movies with flying cars

தி ஸ்பேஸ் கார் - எஃப்9: ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர். இந்த வரிசையில் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 திரைப்படத்தில் ஒரு காட்சியில் டெஜ் மற்றும் ரோமன் என்கிற கதாபாத்திரங்கள் தங்களது பறக்கும் ராக்கெட் காரில் பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்று அங்கு பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோளில் ஒரு கருவியை செயலிழக்க செய்வார்கள்.

hollywood movies with flying cars

லேண்ட் ஸ்பீடர் - ஸ்டார் வார்ஸ் 4: ஏ நியூ ஹோப் : ஸ்டார் வார்ஸ் திரைப்படங்கள் என்றாலே அட்வான்ஸான ஆயுதங்களும், கருவிகளும், வாகனங்களும் படம் முழுக்க இருப்பது வழக்கம். ஏ நியூ ஹோப் திரைப்படம் ஆனது டாடூயின் என்கிற கற்பனை உலகத்தை கதைக்களமாக கொண்டது ஆகும். அந்த உலகத்தில் லுக் என பெயர் கொண்ட ஹீரோ உருவாக்குவதே லேண்ட் ஸ்பீடர் என்கிற வாகனம் ஆகும். ஆனால், இந்த பறக்கும் காரை தரையில் இருந்து சில அடி உயரம் வரையில் மட்டுமே பறக்கக்கூடியதாக அவர் உருவாக்கியிருப்பார்.

hollywood movies with flying cars

தி ஃப்ளையிங் டெலோரியன் - பேக் டூ தி ஃப்யூச்சர்: பறக்கும் காரை கொண்ட திரைப்படங்கள் எனும் வரும்போது பேக் டூ தி ஃப்யூச்சர் என்கிற டைம் டிராவல் திரைப்படம் முன்னிலை வகிக்கிறது. டாக் பிரவுன் என்கிற விஞ்ஞானி கதாபாத்திரம் DMC காரை கொண்டு டைம் டிராவல் மெஷினை கண்டுப்பிடிப்பது போன்று காட்டியிருப்பார்கள். அதாவது, அந்த DMC கார் உள்ளே அமர்ந்திருப்பவர்களை வேறு காலத்திற்கு கொண்டு செல்லும். 2 பாகங்களாக வெளிவந்த இந்த திரைப்படத்தில் 2ஆம் பாகத்தில் தான் டைம் டிராவல் மிஷனை அதிகமாக காட்டியிருந்தனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியாவில் கூட சில திரைப்படங்கள் பறக்கும் கார் காட்சிகளை கொண்டு வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றுள் கிராஃபிக்ஸ் பெரியதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஆனால், 1970, 80ஆம் காலக்கட்டத்தில் வெளிவந்த ஹாலிவுட் சயின்ஸ்-ஃபிக்சன் திரைப்படங்களில் கூட பறக்கும் கார்களை அவ்வளவு அற்புதமாக, ரியால்ட்டியாக காட்டியுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 27, 2024, 23:59 [IST]
English summary
Famous science fiction hollywood movies with flying cars check all details here
மேலும்... #flying car #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X