எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!

நடிகர்கள் புதிய கார் வாங்குவது டிரெண்டாக மாறிவரும் சூழலில், கன்னட நடிகை ஒருவர் அதிநவீன ஃபோக்ஸ்வேகன் காரை வாங்கி உள்ளார். யார் அந்த நடிகை? அவர் வாங்கியுள்ள ஃபோக்ஸ்வேகன் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமீப காலமாக சினிமா நடிகர், நடிகைகள் புதியதாக கார் வாங்குவதை அதிகளவில் பார்க்க முடிகிறது. குறிப்பாக, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போட்டியாளர்கள் உடனடியாக புதியதாக ஒரு காரை வாங்கி, மீண்டும் விளம்பரம் தேடி கொள்ள முயற்சிக்கின்றனர். அவர்கள் வாங்கும் கார்கள் அவர்களது பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு உள்ளன.

serial actress buys volkswagen virtus

அதாவது, ஒரு சிலர் கோடிகளில் விலைமிக்க மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ காரை வாங்குகின்றனர். ஒரு சிலரோ, தங்களால் முடிந்த அளவுக்கு மஹிந்திரா, ஹூண்டாய் காரை வாங்குகின்றனர். இந்த வரிசையில், மாடர்ன் ஃபோக்ஸ்வேகன் காரை வாங்கிய கன்னட சீரியல் நடிகை ஒருவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

கன்னட கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'மாங்கள்யம் தந்துனா னேனா' என்கிற சீரியல் தொடரின் மூலம் கர்நாடகாவில் பிரபலமாகி இருப்பவர் நடிகை பிரஜ்னா பட். அத்துடன், 'ஒலாவே மந்த்ரா 2' என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இருப்பினும், மாங்கள்யம் தந்துனா னேனா சீரியல் தொடரின் மூலமாக மகளிர் மத்தியில் புகழின் உச்சியில் இருக்கும் பிரஜ்னா பட் புதியதாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஜிடி பிளஸ் காரை வாங்கியுள்ளார்.

தனது கணவர் நாகாஸ்ரீட் பட் உடன் காரை டெலிவிரிக்கு பெற ஷோரூமுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரஜ்னா பட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கேண்டி வெள்ளை, ரெஃபிளக்ஸ் சில்வர், அடர் கருப்பு பேர்ல், லாவா நீலம் என மொத்தம் 8 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில், லாவா நீல நிறத்தில் விர்டுஸ் காரை பிரஜ்னா பட் வாங்கியுள்ளார். விர்டுஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஃபோக்ஸ்வேகனின் மாடர்ன் செடான் ரக கார் ஆகும். ஸ்கோடா நிறுவனத்துடன் இணைந்து சமீப காலத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உருவாக்கிய கார்களுள் இதுவும் ஒன்றாகும். முன்பு விற்பனையில் இருந்த ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் காருக்கு பதிலாக விர்டுஸை 2022 மார்ச் மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

serial actress buys volkswagen virtus

டைனாமிக் லைன் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் என 2 விதமான வேரியண்ட் லைன்களில் விர்டுஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில், விர்டுஸ் ஜிடி கார் ஆனது பெர்ஃபார்மன்ஸ் லைனில் அடங்குகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், விலையுயர்ந்த ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை சீரியல் நடிகை பிரஜ்னா பட் வாங்கி உள்ளார். இந்தியாவில் விர்டுஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.56 லட்சத்தில் இருந்து ரூ.19.41 லட்சம் வரையில் உள்ளன.

பிரஜ்னா பட் வாங்கி இருக்கும் விர்டுஸ் ஜிடி காரின் விலை ரூ.17.60 லட்சம் என கூறப்படுகிறது. விர்டுஸ் ஜிடி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ஃபோக்ஸ்வேகன் காரில் தாராளமாக 5 பேர் வரையில் அமர்ந்து பயணம் செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.17.60 லட்சத்தில் புதியதாக கார் வாங்குவது மிடில்-கிளாஸ் மக்களுக்கு வேண்டுமாயின் கடினமான விஷயமாக இருக்கலாம். ஆனால், பிரபலமான சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைக்கு பெரிய விஷயமாக இருக்காது. நடிகை பிரஜ்னா பட்டின் அழகிற்கு இணையாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஜிடி கார் எலெகன்ஸான தோற்றத்தை கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2024, 8:00 [IST]
English summary
Famous serial actress takes delivery of volkswagen virtus gt check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+