நைட்டுல மின்னும்.. இதுக்கு மின்சாரம் கூட தேவைப்படாது... நாம நினைச்சத விட இந்த காரு ரொம்ப அழகா தெரியுது!
இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடலாக மஹிந்திரா தார் (Mahindra Thar) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக காராகும். வரவேற்பு இந்த காருக்கு மிக அதிகம் என்பதால், இதை புக் செய்துவிட்டு காத்திருப்போரின் பட்டியலும் மிக அதிகமாகவே நாட்டில் இருக்கின்றது.
அந்த அளவிற்கு மவுசு கொண்ட ஓர் எஸ்யூவி ரக காரே தார் ஆகும். சொல்லப் போனால் ஒரு சிலர் வருடக் கணக்கில் எல்லாம் காத்திருந்து இந்த காரை டெலிவரி பெற்றிருக்கின்றனர் என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஓர் தகவல் ஆகும்.

இத்தகைய சூப்பரான எஸ்யூவி காருக்கே இளைஞர் ஒருவர் சிறப்பு சேர்க்கும் அந்த காருக்கு இதுவரை யாரும் பயன்படுத்திடாத லுமிலோர் வகை பெயிண்டை பயன்படுத்தி இருக்கின்றார். அதாவது, பிரதிபலிக்கும் திறன் கொண்ட பெயிண்டைக் கொண்டு மஹிந்திர தார் காரை அவர் அலங்கரித்து இருக்கின்றார்.
இந்த லைட்டின் சிறப்பே இரவில் ஒளிருவதுதான். இதுவே இதன் தனி சிறப்பாகும். கூர்மையான நகம் கொண்ட ஓர் கொடூரமான மிருகம் ஓங்கி அடித்தால் ஏற்படக் கூடிய கீரல்களைக் குறிக்கும் நக வடுக்களின் தோற்றத்திலேயே இரவில் பிரதிபலிக்கும் நிற பூச்சை தார் காரில் அதன் உரிமையாளர் பயன்படுத்தி இருக்கின்றார்.
இதுதவிர, 'எக்ஸ்ப்ளோர் தி அன்சீன் 2.0' எனும் ஆங்கில வார்த்தைகளையும் இரவில் பிரதிபலிக்கும் லுமிலோர் பெயிண்டைக் கொண்டு அக்காரில் அவர் எழுதி இருக்கின்றார். மேலும், பானெட்டிலும் அந்த ஒளிரும் பெயிண்டைக் காண முடிகின்றது. இந்த நிற பூச்சால் மஹிந்திரா தார் காருக்கு இரவிலும் கண்கவரும் தன்மைக் கிடைத்திருக்கின்றது.
இதற்காகவே பல ஆயிரங்களைச் செலவு செய்து தார் உரிமையாளர்கள் அந்த நிறத்தைச் சேர்த்திருக்கின்றார். பொதுவாக, இந்த லுமிலோர் ஹெல்மெட் மற்றும் வாகனங்களில் சிறப்பு நிறத்தில் பயன்படுத்தப்படும். அவை ஸ்டிக்கராகவும் வாகனங்களில் ஒட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. சாலையில் வாகனங்களின் இருப்பைக் கண்டறிவதற்காக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட தனித்துவமான பெயிண்ட் (அல்லது) ஸ்டிக்கரே இந்த லுமிலோர் தொழில்நுட்பம் ஆகும்.
இதுமட்டுமில்லைங்க இந்த காரின் முகப்பு லுக்கையும் அவர்கள் மாற்றி அமைத்திருக்கின்றனர். அந்தவகையில் ஜீப் விராங்க்ளர் கார்களில் பயன்படுத்தக் கூடிய கிரில்லே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால், மிகவும் அழகிய தோற்றம் அக்காரின் முகப்பு பகுதிக்கு கிடைத்திருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்த தார் எஸ்யூவி காரை ரூ. 10.98 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அதிக பாதுகாப்பு திறன்மிக்க காராகவும் இது காட்சியளிக்கின்றது. அந்தவகையில், தார் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது. இரண்டு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் டெசன்ட் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களும் இந்த தார் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன. இத்துடன் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதுபோன்று அதிக ஆப்ஷன்கள் மற்றும் அதிக சிறப்புகள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லுமிலோர் வகை பெயிண்டைப் பயன்படுத்துவதனால் பன்முக நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றது. குறிப்பாக, இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் லைட்டுகள் வேலை செய்யாமல் போகும் எனில், அந்த நேரத்தில் நம்முடைய வாகனத்தின் சாலை இருப்பைக் கண்டுபிடிக்க இந்த பிரதிபலிக்கும் லைட் மிகுந்த உதவியாக இருக்கும். ஆகையால், இந்த பெயிண்ட் பாதுகாப்பை உறுதிச் செய்யக் கூடிய ஒன்றாகக் கருதப்படுகின்றது.


Click it and Unblock the Notifications