கிரிக்கெட் வீரர் தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த‘குசும்புக்கார’ ரசிகை

Written By:

==இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கிரிக்கெட்டுக்கு பிறகு ரொம்பவும் பிடித்தது பைக் மற்றும் கார்கள் என்பது நமக்கு தெரிந்ததே. சொந்த ஊரான ராஞ்சிக்கு வரும்போதெல்லாம் தனது வாகனங்களில் ஏதாவது ஒன்றை தானே ஓட்டி அசத்துவார். சமீபத்தில் ராஞ்சியில் ஹம்மர் காரை இவர் ஓட்டிச் சென்ற போது அதனை ரசிகை ஒருவர் வழிமறித்துள்ளார். அது குறித்து விரிவாக காணலாம்.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை இந்த ஆண்டு துவக்கத்தில் திடீரென துறந்தார் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றுவிட்டாலும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சில நாட்களாக கொல்கத்தாவில் நடந்து வரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக பங்கேற்று விளையாடி வந்தார் தோனி.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

போட்டித்தொடர் முடிந்த பின்னர், கொல்கத்தாவிலிருந்து சொந்த ஊருக்கு விமானத்தில் திரும்பியுள்ளார். ராஞ்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்துள்ளார். இவருடன் விமானத்தில் பயணம் செய்த சக பயணியான பெண் ஒருவர், தோனியின் தீவிர ரசிகையாவார்.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது, தோனிக்கு மிகவும் விருப்பமான ஹம்மர் கார் அவரை வரவேற்க காத்திருந்தது. சொந்த ஊர் வந்தால், தானே வாகனத்தை ஓட்டிச் செல்லும் பழக்கம் உள்ள தோனி, அதனை ஓட்ட ஆயத்தமானார்.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

அப்போது அவரை பிந்தொடர்ந்து வந்த அந்த பெண் ரசிகை, எப்படியாவது தோனியுடன் செல்பி அல்லது ஆட்டோகிராஃப் வாங்கும் முயற்சியில் அவரின் காரை வழிமறித்துள்ளார். அப்போது தோனி டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

இதுகுறித்து அறிந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து அந்த ரசிகையை அப்புறப்படுத்தி தோனியின் காருக்கு வழி ஏற்படுத்த முயன்றனர். ஆயினும் அந்த தீவிர ரசிகை செய்த கலவரத்தில் அவருடைய கைப்பையை கீழே தவற விட்டுள்ளார்.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

இதிலிருந்து விடுபட நினைத்து காரை கிளப்பியபோது, அப்பெண்ணின் கைப்பை மீது தோனியின் ஹம்மர் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. ஆயினும் தோனி ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டு பிரச்சனை ஒன்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் கிளம்பிச்சென்றுள்ளார்.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

இதுபோன்ற சம்பவங்களை பிரபலங்கள் அடிக்கடி சந்தித்துவருவது சகஜம் தான் என்றாலும், அதிரடி ஆட்டக்காரரான தோனிக்கு மிகவும் தீவிரமான ரசிகைகள் வட்டம் உள்ளது. தோனி அவரது பள்ளித்தோழியான சாக்‌ஷியை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் அவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட ‘தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படம் கூட வெளியானது குறிப்பிடத்தக்கது.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

இன்றைய தேதி வரை 22 பைக்குகளும், 15-க்கும் மேற்பட்ட கார்களும் தோனியின் கேரேஜில் வீற்றிருக்கின்றன. கவாஸாகி, ஹார்லி டேவிட்சன், நார்ட்டன் என்று வெரைட்டியாக பைக்குகள் இருந்தாலும், முதன்முதலாக 4,500 ரூபாய்க்கு, தான் வாங்கிய யமஹா RD350 பைக் மீதுதான் தோனிக்கு பாசம் அதிகம்.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

அதேபோல் அவரின் கார்கள் லிஸ்ட்டும் நீளமானது. ஹம்மர், லேண்ட்ரோவர், போர்சே, ஃபெராரி, ஆடி என்று காஸ்ட்லி கார்கள் இருந்தாலும், ஆஃப் ரோடு எஸ்யூவி வாகனங்கள் மீது தோனிக்கு எப்போதும் அலாதி பிரியம் இருக்கிறது.

 தோனியின் ஹம்மர் காரை வழிமறித்த ரசிகை!

முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்க சென்ற தோணி, விமான நிலையத்திலிருந்து தனது ஹம்மர் காரில் மைதானம் சென்றார். பஸ்சில் சென்ற நியூசிலாந்து வீரர்கள் வாயை பிளந்தபடி அதை ரசித்து பார்த்தனர். அந்த போட்டோ ஏற்கனவே வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்போர்ட்ஸ் மாடாலான மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் படங்கள்: 

English summary
Fan blocks the path of MS Dhoni’s Hummer outside Ranchi airport
Story first published: Thursday, March 9, 2017, 17:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark