கோடிகணக்குல லாபம் கொட்டப்போகுது! ஃபேன்ஸி நம்பர் வாங்க இனி ஆன்லைன் ஏலம் தான்!

தமிழகத்தில் வாகனங்களுக்கான ஃபேன்ஸி நம்பர்களை இனி ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாகனங்களுக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்க வேண்டும் என்றால் ஆன்லைன் மூலம் நடக்கும் ஏலத்தில் பங்கேற்று தான் பெற முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் வாகனங்களுக்கான பதிவெண்ணை மாநில அரசுகள்கையாண்டு வருகிறது. புதிதாக ஒரு வாகனம் வாங்கும் போது அதற்கான பதிவெண்ணை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்து பெற வேண்டும். இதில் மக்கள் அவர்கள் வாங்கனங்களுக்கு அவர்கள் விரும்பிய நம்பரை வாங்க வேண்டும் என்றால் கூடுதல் தொகை குடுத்து வாங்க வேண்டும். தற்போது உள்ள நடைமுறைப்படி ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகத்திலும் நிர்ணயம் செய்யும் தொகையை செலுத்தி நம்பரை பெறலாம்.

Fancy Number Auction

இந்நிலையில் தமிழக அரசு தற்போது ஃபேன்ஸி நம்பர்களை வாங்க ஆன்லைன் ஏல முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி இதற்காக தமிழக அரசு மோட்டார் வாகன சட்டத்தில் தற்போது புதிய திருத்தங்களை செய்து புதிய வரைவுவை வெளியிட்டுள்ளது. இது போன்ற நடைமுறை தமிழகத்தில் புதிதல்ல பல மாநிலங்களில் இந்த நடைமுறை தான் அமலில் இருக்கிறது. குறிப்பாக கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நடைமுறை அமலில் உள்ளது.

இந்த சட்ட வரைவின்படி இனி தமிழகத்தில் ஃபேன்ஸி நம்பர்களுக்கான நிலையான கட்டண முறை மாற்றப்பட்டு ஏலம் முறையில் அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு மட்டுமே ஃபேன்ஸி நம்பர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான நுழைவு கட்டணம் ரூ2000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Fancy Number Auction

இந்த ஃபேன்ஸி நம்பரை வாங்க நினைப்பவர்கள் https://fancy.parivahan.gov.in என்ற தளம் மூலம் அப்ளை செய்து ஃபேன்ஸி நம்பரை தேர்வு செய்து அதற்கான ஏலத்தில் பங்கேற்க முடியும். இப்படியாக ஏலம் எடுத்தவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஏலம் எடுத்த முழு தொகையையும் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால் அந்த நம்பர் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்படாமல் மீண்டும் ஏலத்திற்கு வந்துவிடும்.

இப்படியாக ஏலத்திற்கான தொகை செலுத்தப்பட்ட பிறகு 30 நாட்களுக்குள் வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு வந்து அந்த நம்பரை வாகனத்திற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். 30 நாட்களை தாண்டியும் அந்த நம்பரை எந்த வாகனத்திற்கும் பதிவு செய்யவில்லை என்றால் அந்த நம்பர் குறிப்பிட்ட நபருக்கு ஒதுக்கீது செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டு மீண்டும் பொது ஏலத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fancy Number Auction

இந்த ஏல நடைமுறை கடந்த 18ம் தேதியே அமலுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தளத்தில் உள்ள தகவலின்படி தமிழகத்தில் எந்தெந்த ஆர்டிஓகளில் எந்தெந்த சிரியஸ்களில் எந்தெந்த நம்பர்கள் ஏலத்திற்காக இருக்கின்றன என்ற தகவல் மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு ஆர்டிஓவிலும் அடுத்த ஏலம் என்ற தகவல் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை. இது செய்யப்பட்ட பிறகு தான் ஏலம் எடுக்க முடியும். தற்போது பயனர்கள் தமிழகத்திலிருந்து பதிவு செய்வதற்கான ஆப்ஷனும் இன்னும் திறக்கவில்லை.

ஏலம் அறிவிக்கப்பட்ட பிறகு ஏல தேதியில் காலை 10 மணிக்கு ஏலம் எடுப்பதற்கான ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை ஏலத்திற்காக விண்ணப்பிக்க முடியும். மாலை 6 மணிக்கு மேல் விண்ணப்பித்ததில் யார் அதிக தொகைக்கு விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த எண் ஒதுக்கீடு செய்யப்படும். ஏலத்தின் போது ரூ2000 முதல் ரூ2 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்படும் இதை ரூ500 மடங்குகளில் ஏலம் கேட்கலாம் அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு நம்பர் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபேன்ஸி நம்பர் மீது மக்கள் அதிக மோகம் கொண்டுள்ளனர். இதனால் இதன் மூலம் அரசு அதிக வருவாயை ஈட்டி வருகிறது. மற்ற மாநிலம் போது இதை வெளிப்படை தன்மையுடன் ஆன்லைனில் ஏலம் நடத்துவது நிச்சயம் நல்ல வருமானத்தை தரும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 30, 2025, 17:20 [IST]
English summary
Fancy number auction ebidding system vehicles tamil nadu
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X