ரூ90 ஆயிரம் ஸ்கூட்டிக்கு ரூ1.12 கோடி செலவு செய்து ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்த தொழிலதிபர்!
வாகனங்களுக்கு ஃபேன்ஸியான நம்பர்பிளேட்களை வாங்க மக்கள் அதிகமாக விரும்பி வருகின்றனர். இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கின்றனர். தற்போது இந்தியாவில் போக்குவரத்து அலுவலகங்கள் எல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநில அரசு ஃபேன்ஸி நம்பர்களை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடுகின்றனர். அதன்படி அந்த நபர்களை விரும்புபவர்கள் அதிகப் பணம் கட்டி அந்த நம்பரை வாங்கத் தயாராக இருக்கின்றனர்.
இப்படியாகச் சமீபத்தில் ஒருவர் ஒரு நம்பர் பிளேட்டிற்காக ரூ1.12 கோடி செலவு செய்துள்ளார். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சம்லா மாவட்டத்திலுள்ள கோட்கேய் பகுதியில் போக்குவரத்து அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள ஃபேன்ஸி பதிவெண்கள் எல்லாம் சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடப்பட்டது. இந்த பதிவெண்களுக்கு ரூ1000 என்ற அடிப்படை விலையில் ஏலம் துவங்கப்பட்டது.

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக HP99-9999 என்ற பதிவெண் ரூ1,12,15,400 என்ற விலைக்கு ஏலம் போயுள்ளது. இது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு அதிக தொகைக்கு ஒரு ஃபேன்ஸி நம்பர் பிளேட் ஏலம் போனது குறித்து பலர் பேசி வருகின்றனர். இதை விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த நம்பர் பிளேட்டை அவர் எந்த வாகனத்திற்குப் பொருத்தப்போகிறார் என்பது தான். அவர் தான் வாங்கிய ஸ்கூட்டருக்கு இந்த நம்பர் பிளேட்டை பொருத்த முடிவு செய்துள்ளார்.
ரூ90 ஆயிரம் மதிப்பிலான வாகனத்திற்கு ரூ1.12 கோடி மதிப்பிலான நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார். இது தான் மிகப்பெரிய அச்சரியமான ஒரு விஷயமாகப் பேசப்படுகிறது. இந்த ஒரு நம்பர் பிளேட் மட்டும் அதிக லைக்கு ஏலம் போகவில்லை HP99-0009 என்ற எண் ரூ21.6 லட்சத்திற்கும், HP-990005 என்ற பதிவெண் ரூ20.1 லட்சத்திற்கும் ஏலம் போயுள்ளது. இந்த மூன்று எண்ணும் தான் அதிகமான ஏலம் போன டாப் 3 எண்களாகும்.
அந்த இடத்தில் HP-99-0003 என்ற எண் இருக்கிறது. இது ரூ10.5 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. HP-99-0004 என்ற எண்ரூ9.97 லட்சத்திற்கும், HP-99-0000 என்ற எண் ரூ5.43 லட்சத்திற்குள், HP-99-0007 என்ற எண் ரூ1.72 லட்சத்திற்கும் ஏலம் போயுள்ளது. இவை எல்லாம் தான் லட்சம் ரூபாயைத் தாண்டிய விலையில் ஏலம் போன எண்களாகும். அதில் அதிகமாக ஏலம் போன HP99-9999 என் எண்ணிற்குத் தான் அதிகபட்சமாக 26 பேர் போட்டியிட்டுள்ளனர். அடுத்ததாக இரண்டாவதாக அதிகம் ஏலம் போன HP99-0009 எண்ணிற்கு 10 பேர் போட்டியிட்டனர். மற்ற பதிவெண்ணிற்குக் குறைவான போட்டிகளே இருந்தது.
HP99-0006 மற்றும் HP99-0008 என்ற பதிவெண் ரூ75 ஆயிரத்திற்கும், HP99-0069, HP99-0099 என்ற பதிவெண் ரூ50 ஆயிரத்திற்கும், HP99-0111, HP99-0999, HP99-1111 மற்றும் HP99-7777 ஆகிய பதிவெண்கள் தலா ரூ15 ஆயிரத்திற்கும் ஏலம் போயுள்ளது.
இந்த கோட்கேய் பகுதி இமாச்சல பிரதேசத்தில் ஒரு முக்கியமான பகுதியாகும். இந்த பகுதி இமயமலை அடிவாரத்தில் உள்ள சுமார் 40 கிராமங்களை உட்படுத்திய பகுதியாக உள்ளது. இங்கு தான் அதிகமாக ஆர்ச்சிட் மலர்கள் பூக்கிறது. இந்த மலர்களின் விலை மிகவும் அதிகம். இந்த மலர் இந்தியாவில் இந்த பகுதியிலிருந்து தான் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால் அதிகமான செல்வந்தர்கள் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அதனாலேயே அவர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு அதிக விலை கொடுத்து நம்பர் பிளேட்களை வாங்கியுள்ளனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








