ரூ1.17 கோடிக்கு ஏலம் போன ஃபேன்ஸி நம்பர் பிளேட்! என்ன நம்பர் தெரியுமா?

ஹரியானா மாநிலத்தில் விஐபி நம்பர் பிளேட்டை ஒருவர் ரூ1.17 கோடிக்கு ஏலம் எடுத்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த நம்பர் பிளேட்டிற்கு ரூ50,000த்தில் ஆரம்பித்த ஏலம் கோடிக்கணக்கில் ஏறியது எப்படி? அப்படி எந்த நம்பிருக்கு இவ்வளவு அதிக போட்டி ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒவ்வொரு மாநில அரசும் வழங்கும் வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டில் ஃபேன்ஸி நம்பர் பிளேட்களை ஆன்லைன் மூலம் ஏலம் விடும். இதை விரும்பும் மக்கள் ஏலம்மூலம் எடுத்துக்கொள்ள முடியும். அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் நபர்களுக்கு தான் இந்த நம்பர் பளேட் கிடைக்கும்.

fancy number plate auction

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் HR88B8888 என்ற நம்பருக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆன் லைனில் இந்த ஏலம் துவங்கியது. இந்த நம்பருக்கு ஆரம்ப விலை ரூ50,000 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஏலத்தில் போட்டி வெகுவாக இரந்தது. காலையில் ஆரம்பிக்கப்பட்ட ஏலத்தில் மதியமே இந்த நம்பருக்க ரூ88 லட்சம் வரை ஏலம் கேட்கப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து விடாமல் ஏலத்தொகை அதிகரித்தது. இறுதியாக மாலை 5 மணிக்கு ரூ1.17 கோடி என்ற விலையில் ஏலம் இறுதியானது.

இந்த நம்பரில் எப்படி என்ன ஸ்பெஷல் என்றால் இந்த ஆர்டிஓ எண் 88 மேலும் வாகனத்தின் எண் 8888 என்பது மட்டுமல்லாமல் இதன் சிரீஸ் B என்பதால் இதுவும் கிட்டத்தட்ட எண் 8 போன்ற தோற்றத்தில் இருப்பதால் HRக்கு பிறகு வரிசையாக 888888 என்ற தோற்றத்தில் வரும் என்பதால் இந்த எண்ணை மக்கள் அதிகம் விரும்பினர்.இதனால் கடும் போட்டி நிலவியது.

fancy number plate auction

ஹரியானா மாநிலத்தில் இப்படியாக ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஏல விண்ணப்பம் துவங்கும். இந்த ஏலம் திங்கட்கிழமை காலை 9 மணி வரை நடக்கும். இந்த காலகடத்தில் ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்க முடியும். திங்கட்கிழமை காலை 9 மணிக்க சரியாக ஏலம் துவங்கும் புதன் கிழமை மாலை 5 மணிக்கு ஏலம் முடியும். இதற்குள் அதிக தொகை கேட்டவருக்கு நம்பர் ஒதுக்கீடு செய்யப்படும் அதன் காண அறிவிப்புகள் அன்று மாலையே வெளியிடப்படும்.

கடந்த வாரம் நடந்த ஏலத்தில் HR22W2222 என்ற எண் ரூ37.91 லட்சம் ஏலம் போயியுள்ளது. இப்படியாக பல முறை ஃபேன்ஸி நம்பர்கள் அதிக தொகைக்கு ஏலம் போன சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக கடந்த 2020 முதல் 2025 ஜூலை மாதம் வரை சண்டிகர் நகரில் அதிக அளவில் ஒற்றை நம்பர் ஏலம் நடந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தது. இது மட்டுமல்ல கடபந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம்ல ஒரு வர் ரூ15.44 லட்சத்தறி்கு ஒரு நம்பரை ஏலம் எடுத்த அதை வ்ர் ரூ55,585 மதிப்பிலான ஒரு ஸ்கூட்டருக்கு வாங்கியுள்ளார். ஸ்கூட்டர் விலையை விட அதன் நம்பர் பிளேட்டிற்கு அவர் செலுத்தும் விலை 28 மடங்கு அதிகம் ஆகும்.

இப்படியாக பல சம்பவங்கள் இதுவரை நடநப்துள்ளது. பல லட்சம் ரூபாயக்கு நம்பர் பிளேட்டை வாங்கி அதை சில ஆயிரம் செலவு செய்து வாங்கும் வாகனத்திற்கு பொருத்தும் சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது கோடி கணக்கில் ஒரு நம்பர் பிளேட் ஏலம் போயுள்ளது.இந்த நம்பர் பிளேட் எந்த வாகனத்திற்கு பொருத்தப்படுகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களுக்கும் நம்பர் பிளேட்டகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் இதில் ஆன்லைன் மூலம் ஏலம் விடும் நிகழ்வு ஒரு சில மாநில்களில் நடக்கிறது. தற்போது தமிழகத்திலும் அதை கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கிறது. விரைவில் தமிழகத்திலும் ஃபேன்ஸி நம்பர் ஏலம் ஆன்லைனில் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 27, 2025, 12:05 [IST]
English summary
Fancy number plate auction costliest registration india
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+