ஹோண்டா ஆக்டிவாவிற்கு இது எல்லாம் ரொம்பவே ஓவர்! லட்சம் பேர் வாங்கும் ஸ்கூட்டரில் இவர் மட்டும் தனியா தெரிகிறார்!

ஃபேன்சி நம்பர் பிளேட் (Fancy Number Plate) கலாச்சாரம் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. உலகளவில் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கு கோடிக்கணக்கில் செலவழித்து வந்தாலும், இந்த விஷயத்தில் நம் இந்தியர்கள் கொஞ்சம் கட்டுப்பாடு உடனே செயல்பட்டு வந்தனர். அதாவது, ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கு சில ஆயிரங்கள் வேண்டுமாயின் செலவழிக்க தயார், ஆனால் பல கோடிகளில் செலவழிக்க பெரும் பணக்காரர்கள் கூட தயாராக இல்லை. சில இலட்சங்களிலேயே விருப்பமான ஃபேன்சி நம்பர் பிளேட் இந்தியாவில் கிடைத்துவிடுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் ரூ.46 லட்சம் செலவு செய்து வாங்கியதுதான் தற்போது வரையில் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக இந்தியாவில் செலவு செய்யப்பட்ட அதிகப்பட்ச தொகை ஆகும். கடந்த ஆண்டில் நடைபெற்ற இந்த ஏலத்தில் '0007' என்கிற எண்ணை தனது லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காருக்காக வேணு கோபாலகிருஷ்ணன் வாங்கி இருந்தார்.

fancy number plate auction

இந்த ஃபேன்சி நம்பர் பிளேட் வாங்கிய ராசியோ என்னமோ, அதன்பின் தொடர்ச்சியாக புது, புது சொகுசு கார்களை தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் வாங்க ஆரம்பித்தார். இந்த நிலையில், வேணு கோபாலகிருஷ்ணனை போன்று பல லட்ச ரூபாய் செலவு செய்து இளைஞர் ஒருவர் தற்போது ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கி உள்ளார். இது கேரளாவில் அல்ல, வட இந்தியாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆகும்.

fancy number plate auction

இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், வேணு கோபாலகிருஷ்ணன் ஆவது தனது விலையுயர்ந்த லம்போர்கினி காருக்காக பல லட்சம் செலவு செய்து ஃபேன்சி நம்பர் பிளேட் வாங்கினார், ஆனால் நாம் பார்க்க போகும் இளைஞர் வெறும் ரூ.1 லட்சம் மதிப்பிலான தனது ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டருக்கு சுமார் ரூ.14 லட்சம் செலவு செய்து கவர்ச்சியான வாகன பதிவெண்ணை வாங்கியுள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் ஹமிர்புர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என பெயர் கொண்ட இந்த இளைஞர் '0001' என்கிற ஃபேன்சி வாகன எண்ணிற்காக ரூ.14 லட்சத்தை செலவு செய்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தினேஷ் குமார் செலவு செய்யவில்லை, ஹார்ட்வேர் & இரும்பை கொண்டு வணிகம் செய்துவரும் அவரது தந்தை சஞ்சீவ் குமார் செலவு செய்துள்ளார்.

இவ்வளவு செலவு செய்தும் ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவது இந்த தந்தை- மகனுக்கு அவ்வளவு எளிதாக ஒன்றும் இல்லை. ஹிமாச்சல் பிரதேச போக்குவரத்து துறையின் சார்பில் இணையம் வாயிலாக ஏலம் நடத்தப்பட்டது. ஏனெனில், இருவர் '0001' என்கிற ஃபேன்சி வாகன எண்ணை கேட்டனர்.

மற்றொரு ஏலக்காரர் ரூ.13 லட்சம் வரையில் வந்த நிலையில், அதனை காட்டிலும் ரூ.1 லட்சம் அதிகமாக ரூ.14 லட்சத்திற்கு கேட்டு '0001' ஃபேன்சி நம்பர் பிளேட்டை சஞ்சீவ் குமார் வாங்கியுள்ளார். ஹிமாச்சல பிரதேச போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்பட்டு இருப்பினும், இந்த ஏலம் குறித்த விபரங்கள் அரசாங்கம் சார்பில் பதிவு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான், இந்த விஷயம் உண்மைதானா என்பது எங்களுக்கும் சற்று சந்தேகமாக உள்ளது. இருப்பினும், ஹிமாச்சல் பிரதேசத்தில் செயல்படும் உள்ளூர் யூடியூப் சேனல் ஒன்று இந்த செய்தியை வீடியோ உடன் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், சஞ்சீவ் குமாரின் மகன் தினேஷ் குமார் தங்களது வெள்ளை நிற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சி தருகிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவா ஆனது இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் வாங்கப்படும் ஸ்கூட்டர் ஆகும். அதாவது, சாலையில் எப்போதுமே குறைந்தது ஒரு ஆக்டிவா ஸ்கூட்டரை ஆவது பார்க்க முடியும். ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவில் கூட தினேஷ் குமாரின் வெள்ளை நிற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பின்னால் கருப்பு நிறத்தில் ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்று நிற்பதை காணலாம். இந்த அளவிற்கு மக்கள் அதிக பேரால் பயன்படுத்தப்படும் வாகனத்திற்கு தான் ரூ.14 லட்சத்தில் ஃபேன்சி நம்பர் பிளேட் வாங்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 24, 2025, 16:18 [IST]
English summary
Fancy number plate worth 14 lakh rupees for honda activa scooter
மேலும்... #fancy number #auction #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X