விண்வெளிக்கு ஒரு ஜாலி டூர்... அமேஸான் நிறுவனத்தின் அட்டகாச திட்டம்!

By Saravana

டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க், ஸ்பெஸ்எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு செலுத்தக்கூடிய மறு பயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கி சோதனைகள் செய்து வருகின்றனர். மேலும், எலான் மஸ்க் ஹைப்பர் லூப் என்ற அதிவேக தரைவழி போக்குவரத்து சாதனத்தையும் உருவாக்கி வருவது குறித்தும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் தகவல்களை படித்திருப்பீர்கள்.

எலான் மஸ்க் போன்றே விண்வெளி துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட மற்றொருவர் உங்களுக்கெல்லாம் அதிகம் பரிட்சயமான அமேஸான் இணையதள நிறுவனத்தின் அதிபர் ஜெப் பெசோஸ் ஆவார். ஆம், இவரும் புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தை துவங்கி, அதன் மூலமாக விண்வெளிக்கு சென்று பத்திரமாக பூமிக்கு திரும்பும் ராக்கெட்டை உருவாக்கி சோதனைகள் செய்து வருகிறார். இந்த நிலையில், புளு ஆரிஜின் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்ன தெரியுமா? விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்துடன் இந்த திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார்.

 ஸ்தாபிதம்

ஸ்தாபிதம்

2000வது ஆண்டில் புளூ ஆரிஜின் நிறுவனத்தை ஜெஃப் பெஸோஸ் நிறுவினார். அதிலிருந்து விண்வெளி சுற்றுலா என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் அவரது புளூ ஆரிஜின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

நோக்கம்

நோக்கம்

விண்வெளி வீரர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் விண்வெளி பயண அனுபவத்தை ருசிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த விண்வெளி சுற்றுலா திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார்.

பிரத்யேக ராக்கெட்

பிரத்யேக ராக்கெட்

விண்வெளி சுற்றுலா திட்டத்திற்காக புளு ஆரிஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்டு என்ற பெயரில் பிரத்யேகமான ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 29ந் தேதி ஒரு நியூ ஷெப்பர்டு ராக்கெட் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. விண்ணில் 93.5 கிமீ உயரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் பத்திரமாக பூமியில் தரை இறங்கியது.

சோதனைகள் தொடர் வெற்றி

சோதனைகள் தொடர் வெற்றி

கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த சோதனையை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 23ந் தேதி ஒரு சோதனை நடத்தப்பட்டது. இது அவசர சமயத்தில் ராக்கெட்டை தரை இறக்கி பயணிகளை மீட்பதற்கான சோதனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 22ந் தேதி மறறொரு முறை சோதனை செய்யப்பட்டது. இந்த முறை விண்ணில் 101.7 கிமீ உயரம் வரை சென்று திரும்பியது.

இரண்டு ராக்கெட்டுகள்

இரண்டு ராக்கெட்டுகள்

இதுவரை இரண்டு நியூ ஷெப்பர்டு ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது ராக்கெட்டை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு ராக்கெட்டை தயாரிப்பதற்கு 9 முதல் 12 மாதங்கள் பிடிக்கிறது என்று புளு ஆரிஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இடவசதி

இடவசதி

இந்த ராக்கெட்டின் கேப்சூல் எனப்படும் பயணிகள் செல்வதற்கான இடத்தில் 6 பேர் வரை செல்ல முடியும். அவசர சமயத்தில் ராக்கெட்டிலிருந்து இந்த கேப்சூல் எனப்படும் பயணிகள் அமர்ந்திருக்கும் அறையை தனியாக பிரிந்து பத்திரமாக தரை இறக்க முடியும்.

நாசாவிடம் ஒப்படைப்பு

நாசாவிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் இந்த ராக்கெட் தயாரிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. மேலும், நியூ ஷெப்பர்டு ராக்கெட்டின் தொழில்நுட்பங்கள் மற்றும் திட்ட மாதிரிகள் தற்போது நாசாவிடம் சமர்ப்பிக்கப்பபட்டு உள்ளன.

ராக்கெட் சிறப்பு

ராக்கெட் சிறப்பு

இந்த ராக்கெட்டை செங்குத்தாக மேலே செலுத்த முடியும் என்பதுடன், செங்குத்தாகவே தரை இறக்க முடியும். இதன் மூலமாக, பயணிகள் மிகவும் சவுகரியமான உணர்வை பெற முடியும். ஆனால், விண்வெளிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

முதலீடு

முதலீடு

புளூ ஆரிஜின் நிறுவனத்தின் தொழில்நுட்பம், ராக்கெட் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக 500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு உதவியில்லாமல், தனியார் முதலீட்டு திட்டத்தின் அடிப்படையில் இந்த திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

 விண்வெளி டூர் எப்போது?

விண்வெளி டூர் எப்போது?

நியூ ஷெப்பர்டு ராக்கெட் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதையடுத்து, அடுத்த ஆண்டு விண்வெளிக்கு பொதுமக்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் சேவை துவங்குவதற்கு புளூ ஆரிஜின் திட்டமிட்டிருக்கிறது.

ஆர்வம்

ஆர்வம்

விண்வெளி டூர் செல்வதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருப்பதாக புளு ஆரிஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 அமேஸான் தலைவரும் ஆர்வம்

அமேஸான் தலைவரும் ஆர்வம்

நீங்களும் விண்வெளிக்கு டூர் செல்வீர்களா என்ற கேள்விக்கு, நிச்சயமாக, நானும் விண்வெளிக்கு டூர் செல்ல ஆவலாக இருக்கிறேன் என்று அமேஸான் இணையதள நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are more interesting facts about Blue Origin, it's space travel, and other cool must knowns.
Story first published: Saturday, March 12, 2016, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X