21 வயதில் ரூ. 5 கோடி காருக்கு சொந்தக்காரரான உபி இளைஞர்.. திறமைக்கு கிடைச்ச பரிசு!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் அனுராக் திவிவேதி. இவரே ரூ. 5 கோடி மதிப்புள்ள சொகுசு மற்றும் அதீத திறனை வெளியேற்றக் கூடிய லம்போர்கினி உருஸ் எஸ் எஸ்யூவி ரக காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அவரும் தற்போது உறுதி செய்திருக்கின்றார். தன்னுடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாகவே இந்த விலையுயர்ந்த கார் கொள்முதல் பற்றிய தகவலை அவர் உறுதிப்படுத்தினார். தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சென்று காரை டெலிவரி பெறும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

திவிவேதி யார் என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கக் கூடும். அதேவேளையில், கிரிக்கெட் பிரியர்களுக்கு கட்டாயம் இவரை தெரிந்திருக்கும். கிரிக்கெட் விளையாட்டைக் கணிப்பதில் கை தேர்ந்த நபராக திவிவேதி இருக்கின்றார். அந்தவகையில், டிரீம் 11 மற்றும் மை 11 சர்க்கிள் போன்ற ஃபேன்டஸி கிரிக்கெட் தளங்களில் தன்னுடைய துள்ளியமான கணிப்பை வெளிப்படுத்தியே இவர் வருமானம் ஈட்டி வருகின்றார்.

Anurag dwivedi buys lamborghini urus

இந்த நிலையிலேயே மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர வகை காரான லம்போர்கினி உருஸ் எஸ் எஸ்யூவி-யை அவர் வாங்கி இருக்கின்றார். இதுதவிர அவரிடத்தில் ஏற்கனவே சில விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், அவரிடத்தில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 (Land Rover Defender 130), பிஎம்டபிள்யூ இசட் 4 (BMW Z4) போன்ற கார்களும் பயன்பாட்டில் உள்ளன.

இதுதவிர, மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் (Mercedes Benz E-Class), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7-Series) மற்றும் ஃபோர்டு என்டீயோவர் (Ford Endeavour) போன்ற சொகுசு கார்களையும், மஹிந்திரா தார் (Mahindra Thar), மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) போன்ற வழக்கமான கார் மாடல்களையம் அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இதுதவிர அவரிடத்தில் ஓர் பழைய சைக்கிள் ஒன்றும் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இவை அனைத்தைக் காட்டிலும் தற்போது வாங்கி இருக்கும் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி எஸ் காரே அதிக விலைமிக்கதாகக் காட்சியளிக்கின்றது. மேலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாகவும் அது காட்சியளிக்கின்றது.

இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 666 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிமீ வேகம் ஆகும். அதேவேளையில், இந்த காரால் வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும்.

இதன் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டவை. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக லம்போர்கினி நிறுவனம் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி இருக்கின்றது. மேலும், இந்த காரில் உயரத்தை மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் வாயிலாக கூடுதல் சௌகரியமான ரைடு அனுபவத்தை அதன் பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும். கூடவே மூன்று விதமான ரைடிங் மோட்களும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், சபியா (மணல்), நெவே (பனி) மற்றும் டெர்ரா (சகதி) ஆகிய மோட்களே வழங்கப்பட்டு உள்ளன. மோட்களுக்கு ஏற்ப அந்தந்த நிலபரப்பில் மிக சிறப்பான இயக்கத்தை அவை வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப காலமாக சொகுசு மற்றும் ஆடம்பர ரக கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே திவிவேதி லம்போர்கினி உருஸ் எஸ் காரை வாங்கி இருக்கும் சம்பவம் தற்போது இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. உலகின் அதிக திறனை வெளியேற்றக் கூடிய எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 18, 2024, 11:35 [IST]
English summary
Fantasy cricket guru anurag dwivedi splurges rs 5 crore on lamborghini urus
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+