சாதாரண மாருதி காரில் வந்து இறங்கியது இவ்ளோ பெரிய ஆளா... ஒட்டுமொத்த ஏர்போர்ட்டும் ஒறஞ்சு போயிருச்சு...
நடிகர், நடிகைகள் என்றால், பெரும்பாலும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களைதான் பயன்படுத்துவார்கள். ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான், பெரும்பாலான நடிகர், நடிகைகளின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களில் வலம் வரும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை கூட இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. அப்படி இருக்கும்போது பிரபலமான நடிகர் ஒருவர் மாருதி சுஸுகி (Maruti Suzuki) காரில் விமான நிலையத்திற்கு வந்தார் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மைதான்.

மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர்களில் (Bollywood Actor) ஒருவர், ஃபர்தீன் கான் (Fardeen Khan). இவர் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) காரில், மும்பை விமான நிலையத்திற்கு (Mumbai Airport) வந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலை 12.74 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இது சற்று அதிக விலையாக தோன்றலாம். ஆனால் பாலிவுட் நடிகர்களுக்கு இது மிகவும் சாதாரணமான ஒரு விலையாகவே இருக்கும். எனவேதான் நடிகர் ஃபர்தீன் கான் மாருதி சுஸுகி ஜிம்னி காரில் விமான நிலையத்திற்கு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
மாருதி சுஸுகி ஜிம்னி காரில் பொருத்தப்பட்டிருப்பது 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் K15B சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவர் மற்றும் 136 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் நடிகர் ஒருவர் மாருதி சுஸுகி ஜிம்னி காரை பயன்படுத்தி கொண்டிருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான் இருக்கிறது. இது இந்திய சந்தையில் மஹிந்திரா தார் (Mahindra Thar) எஸ்யூவி உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.
ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள், மாருதி சுஸுகி ஜிம்னி காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். ஜிம்னி எஸ்யூவியானது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








