தங்கத்தை அறுவடை செய்றவரா இருப்பாரோ.. பென்ஸ் காரை டெலிவரி எடுத்த விவசாயி! விலையை கேட்டதும் ஆடி போயிட்டாங்க!!
மிக மிக விலை உயர்ந்த பென்ஸ் (Benz) காரை விவசாயி ஒருவர் டெலிவரி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. ஏனெனில் விவசாயி டெலிவரி எடுத்திருக்கும் அந்த கார் மாடலின் ஒற்றை யூனிட்டே ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்படி என்ன கார் மாடல் அது என்று தானே கேக்குறீங்க, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் (Mercedes Benz G Wagen)-தான் அது ஆகும்.
ஜி கிளாஸ் (G Class) என்கிற பெயரிலும் இந்த கார் மடால் அறியப்படுகின்றது. பென்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். பிரமாண்ட தோற்றம் கொண்ட இந்த ஆடம்பர கார் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்றதாகக் காட்சியளிக்கின்றது.

மிக முக்கியமாக, என்ன மாதிரியான கரடு-முரடான பாதையாக இருந்தாலும் இது சமாளித்துவிடும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரின் விலை மிக மிக அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, எவ்வளவு மோசமான சாலையில் பயணித்தாலும் இந்த காரில் அசௌகரியமான டிராவல் உணர்வே ஏற்படாது.
இத்தகைய ஓர் ஆடம்பர காரையே மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றார். அதேவேளையில், இந்த கார் அவருடைய மகனால் வாங்கப்பட்டு, விவசாயிக்கு பரிசாக வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், டெலிவரியையும் அவரையே பெற செய்திருக்கின்றார் விவசாயியுடைய மகன்.
இந்தியாவின் பெரும் செல்வந்தர்களின் பிரியமான கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான வாகனமாக இது வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்த காரை அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
சொல்லப்போனால் இந்த வாகனத்தை தங்களுடைய செக்யூரிட்டி வாகனமாக அம்பானி குடும்பம் பயன்படுத்தி வருகின்றது. இத்தகைய வாகனத்தையே தன்னுடைய விவசாயி தந்தைக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். இந்தியாவில் இந்த கார் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஜி400டி (G400d) மற்றும் ஜி63 ஏஎம்ஜி (G63 AMG) ஆகியவையே அவை ஆகும். இந்த கார் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை என்னமோ 2.55 கோடி ரூபாய் மட்டுமே ஆகும். ஆனால், ஆன்-ரோடில் அதன் விலை ரூ. 3 கோடியைத் தாண்டும். இந்த விலைக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகளையும், சிறப்பம்சங்களையும் வாரி வழங்கி இருக்கின்றது பென்ஸ்.
பன்முக கன்ட்ரோல்கள் மற்றும் லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், 64 வண்ணங்களில் மின்னும் வசதிக் கொண்ட ஆம்பியன்ட் லைட், ஸ்லைடிங் வகை சன்ரூஃப், 3 ஜோன்கள் கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல், பர்மெஸ்டர் சவுண்டு சிஸ்டம், அதிக லக்சூரியான டிராவல் அனுபவத்தை வழங்கும் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பணக்கார்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்று வரும் சொகுசு கார் மாடல்களில் பென்ஸ் ஜி வேகன்-ம் ஒன்றாகும். பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே விவசாய குடும்ப பின்புலத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிரா தொழிலதிபரும் இந்த காரை வாங்கி இருக்கின்றார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் முக்கிய இலக்கை எட்டியதன் காரணமாக இந்த காரை வாங்கியதாகவும், அதை அவருடைய வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








