இந்தியர் உருவாக்கிய காரை பார்த்து எத்தனை பேர் ஏமாற போறாங்களோ... யூடியூப்-க்காக என்னவெல்லாம் செய்றாங்க பாருங்க!

லம்போர்கினி (Lamborghini), ஃபெராரி (Ferrari) போன்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை (Sports Cars) வாங்க முடியாதவர்களுள் சிலர் அவற்றை தங்களது விலை குறைவான காரில் இருந்து உருவாக்கி கொண்டுள்ளதை பார்த்திருக்கிறோம். அதாவது, பழைய காரில் நிறைய வேலைப்பாடுகளை மேற்கொண்டு அதனை விலையுயர்ந்த காரை போல் மாற்றி உள்ளனர். இவ்வாறான செயல்களில் பெரும்பாலும் யூடியூபர் (Youtuber)-கள் தான் ஈடுப்படுகின்றனர். அதையே தனது வீடியோக்களுக்கு கண்டெண்ட் (Content) ஆக பயன்படுத்தி, பார்வையாளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு, யூடியூபர் ஒருவர் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹாலிவுட் நடிகர்கள் (Hollywood Actors) வின் டீசல் (Vin Diesel) மற்றும் பால் வால்கர் (Paul Walker) இணைந்து நடித்த 'ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் 7' (Fast & Furious 7) திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த படத்தில் நிறைய ஸ்போர்ட்ஸ் கார்களை காட்டியிருப்பார்கள். அவற்றுள் பிரபலமானது 'லைகன்' (Lykan) என்கிற பெயரிலான ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

fast amp amp furious fame lycan hypercar

லெபனான் நாட்டை சேர்ந்த டபிள்யூ மோட்டார்ஸ் என்கிற நிறுவனம் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் கார் தான், லைகன் ஆகும். ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் 7 திரைப்படத்தில், வின் டீசலும், பால் வால்கரும் ஒன்றாக இணைந்து சிவப்பு நிறத்திலான லைகன் கார் ஒன்றை மிக பெரும் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்திற்குள் ஓட்டுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்றதான ஒரு காரை இந்திய யூடியூபர் ஒருவர் உருவாக்கி அசத்தி உள்ளார்.

தன்னா தாவல் என பெயர் கொண்ட இந்த யூடியூபர் இவ்வாறு இதற்குமுன்பும் லம்போர்கினி டெர்ஸோ மில்லேனியோ காரை காப்பியடித்து ஒரு காரை உருவாக்கி இருந்தார். அதுகுறித்த வீடியோக்களையும் தன்னா தாவலின் யூடியூப் சேனலில் பார்க்க முடிகிறது. அந்த காரை உருவாக்கிய சமயத்தில்தான் லைகன் காரின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு ஒரு காரை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் இவருக்கு தோன்றியுள்ளது.

fast amp amp furious fame lycan hypercar

ஆனால், மிகவும் குறைவான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட லைகன் காரை நேரில் பார்க்கும் வாய்ப்பு தன்னா தாவலுக்கு கிடைக்கவில்லை. இதனால், லைகன் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மை காரை பார்த்து அதேபோன்றதான காரை ஹோண்டா சிவிக் (Honda Civic) காரில் உருவாக்கியுள்ளார். அதாவது, அடிப்படையில் இது ஒரு ஹோண்டா சிவிக் கார் ஆகும்.

வெள்ளை நிறத்திலான ஹோண்டா சிவிக் காரில் இருந்து அடிப்படையான சேசிஸ் (Chasis) மற்றும் ஃப்ரேம் (Frame)-களை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை சுற்றிலும் லைகன் காரில் இருப்பதை போன்றதான பேனல்களை பொருத்தி உள்ளனர். லைகன் காரின் பேனல்களை வெளியில் வாங்குவது மிகவும் கடினம். அப்படியே கிடைத்தாலும் அவற்றிற்கு மிக பெரிய தொகையை விலையாக கூறுவர். இதனால், லைகன் காரின் பேனல்களை தங்களது சொந்த முயற்சியில் உருவாக்கி உள்ளனர்.

fast amp amp furious fame lycan hypercar

பேனல்களை பொருத்திய பின், சிறு சிறு அட்ஜெஸ்ட்மெண்ட்களும், சாண்டிங் (Sanding) வேலையும் நடந்துள்ளது. இறுதியாக, காருக்கு பிரைமர் (Primer) உடன் சிவப்பு நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்பக்கம் மட்டுமின்றி, உட்புறத்தையும் முடிந்தவரையில் லைகன் காரில் உள்ளதை போன்று மாற்றியுள்ளனர். இதில் சில வேலைப்பாடுகளை வீடியோவாக காட்சிப்படுத்தி தன்னா தாவல் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் பார்ப்பதற்கு இது லைகன் ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் கார் போன்று இருந்தாலும், இது அதன் அருகில் கூட வராது. ஏனெனில், மிகவும் குறைவான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட கார் என்பதால், அதனுள் மிகவும் பிரீமியம் தரத்திலான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும். இருப்பினும், இந்த யூடியூபரின் முயற்சிக்கு எங்களது பாராட்டுக்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 2, 2025, 15:36 [IST]
English summary
Fast and furious fame lycan hypercar replica made by indian youtuber
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X