இவி வாங்கும்போது இது ரொம்ப முக்கியம்! இது தெரியாம காசை குடுத்து ஏமாந்துடாதீங்க!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது குறிப்பாக டூவீலரில் ஸ்கூட்டர் செக்மெண்டில் மக்கள் பலர் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்ய துவங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதை சார்ஜ் செய்ய ஆகும் நேரம் தான். பெட்ரோல் ஸ்கூட்டர்களில் ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு சென்றால் விரைவாக எரிபொருளை நிரப்பி விடலாம்.
ஆனால் சார்ஜிங் செய்வதில் இருக்கும் சிக்கல் அதிக நேரம் ஆவது தான். தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு சார்ஜ் ஏற்ற குறைந்தது 4 மணி நேரமாவது ஆகிறது. சில ஸ்கூட்டர்கள் 8 மணி நேரம் சார்ஜிங்கிற்காக எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனையை சமாளிக்க வேகமாக சார்ஜ் ஏற்றும் வகையில் சார்ஜர்கள், அல்லது பேட்டரியை ஸ்வாப் செய்யக்கூடிய தொழிற்நுட்பம் இந்த பிரச்சனைக்க தீர்வளிக்கப்போகிறது. அதன்படி இந்த இரண்டு தொழிற்நுட்பத்தில் எது பெஸ்ட் என காணலாம்.

ஃபாஸ்ட் சார்ஜிங் நன்மைகள்: இந்தியாவில் வேகமாக சார்ஜிங் தேவை அதிகரித்து விட்டது. தற்போது விற்பனையாகும் பல கார்கள் சார்ஜிங் அப்ஷன் உடன் மட்டுமே வருகிறது வேகமாக சார்ஜ் ஏற்றுவது பல பிரச்சனைகளுக்க தீர்வாக இருக்கிறது. இந்த சார்ஜர்கள் வீடு, பணியாற்றும் இடம், பொது சார்ஜிங் ஸ்டேஷன் என அனைத்து இடங்களிலும் வந்துவிட்டால் தற்போது இவி பயன்படுத்தும் வாிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஃபாஸ்ட் சார்ஜிங் பிரச்சனைகள்: ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரியின் ஆயுள் தான் லித்தியம் அயான் பேட்டரிகளில் வேகமாக சார்ஜ் ஏற்றும் போது அதன் ஆயுள் குறையும், பேட்டரி சூடாக வாய்ப்புள்ளது. இதனால் இந்த பிரச்சனைகளை தவிர்க்க பலர் மெதுாக சார்ஜ் ஏற்றும் சார்ஜர்களை பயன்படுத்துகின்றனர்.

பேட்டரி ஸ்வாப்பிங் நன்மைகள்: பேட்டரியை ஸ்வாப்செய்யும் தொழிற்நுட்பத்தில் பேட்டரியை ஒருசர்வீஸாக எடுத்தால் வாகனத்தின் விலை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் பேட்டரிக்கான வாரண்டி குறித்த கவலையும்இல்லை. பேட்டரியை விரைவாக ஸ்வாப்பிங் ஸ்டேஷனில் ஸ்வாப் செய்துவிட்டு சென்றுவிட முடியும். பல தனியார் நிறுவனங்கள் தற்போது பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை நடத்தி வருகின்றனர்.
பேட்டரி ஸ்வாப்பிங் பிரச்சனைகள்: பேட்டரி ஸ்வாப்பிங்கிள் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதற்கான கட்டமைப்பை உருவாக்க ஆகும் செலவு தான். மேலும் பேட்டரி ஸ்வாப்பிங் முறையில் இயங்கும் வாகனங்கள் ஃபிக்ஸட் பேட்டரி வாகனங்களுக்கு இணையான பெர்ஃபார்மென்ஸை பெற முடியாது. மேலும் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையான பேட்டரியை தயாரிப்பதால் பேட்டரி வடிவமைப்பிற்கிடையே ஸ்டாண்டர்டைஷேஸன் இல்லை என்பதால் குறிப்பிட்ட ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை தேடி அலைய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேட்டரி ஸ்வாப்பிங் தொழிற்நுட்பம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் எல்லாம் சேர்ந்து தற்போது குழப்பத்தில் இருந்தாலும் எதிர்காலத்தில் இதில் ஏதாவது ஒரு தொழிற்நுட்பம் தான் பயன்படுத்தப்படும். அதில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழிற்நுட்பம் தான் எதிர்காலத்தில் பிரபலமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









