நாளை சன் டிவியில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சினிமா!

உலகின் மிகப் பிரபலமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சினிமாவின் மூன்றாம் பாகமான டோக்கியோ டிரிஃப்ட் நாளை சன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது. நாளை பிற்பகல் 3 மணிக்கு கார் சாகசங்கள் நிறைந்த இந்த திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த படத்தில் வரும் கார் சேஸிங் காட்சிகள் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்.

பெரும்பாலான கார் சேஸிங் காட்சிகள் ஜப்பானிய சாலைகளிலும், சில காட்சிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சாலைகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. கிறிஸ் மார்கன் எழுதிய இக்கதையை ஜஸ்டின் லின் இயக்கியிருக்கிறார். பால் வாக்கர், வின் டீசல் உள்ளிட்ட வழக்கமான நடிகர்கள் இல்லாமல் லூகாஸ் பிளாக், பாவ் வாவ், நத்தலி கெல்லி உள்ளிட்ட புதிய நடிகர்களை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால், படத்தின் இறுதியில் வின் டீசல் அடுத்த பாகத்துக்கு இணைப்பு கொடுக்கும் விதத்தில் தோன்றியிருக்கிறார்.

கார் பந்தய வீரராக முனையும் கதாநாயகனின் வீரதீரத்தையும், கார்களின் வேகத்தையும் இந்த படத்தில் கண்டு ரசிக்கலாம். த்ரில்லை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டு வரும் இந்த படங்கள் முதலில் 1939ல் வெளியானது. அடுத்து 1955ம் ஆண்டில் இரண்டாம் படம் வெளியானது. இதே வரிசையில் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் பாகம் 1 கடந்த 2001ல் வெளியானது. வரும் மேமாதம் இந்த படத்தின் 6ம் பாகம் வெளியாக உள்ளது.

பட வரிசை

பட வரிசை

பாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் பட வரிசையில் இரண்டாம் பாகம் 2003ம் ஆண்டும், மூன்றாம் பாகம் 2006ம் ஆண்டும், நான்காம் பாகம் 2009ம் ஆண்டிலும், ஐந்தாம் பாகம் 2011ம் ஆண்டிலும் வெளியானது. மே மாதம் 6ம் பாகம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நாளை சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் படம் 2006ம் ஆண்டு வெளியான டோக்கியோ டிரிஃப்ட் மூன்றாம் பாகம்.

நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களில் பால் வால்க்கர், வின் டீசல், மிச்செல் ரோட்ரிகிஷ் மற்றும் ஜோர்டானா புரூஸ்டெர் ஆகிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆனால், டோக்கியோ டிரிஃப்ட் படத்தில் இவர்களுக்கு பதில் லூகாஸ் பிளாக், பாவ் வாவ், நத்தலி கெல்லி உள்ளிட்ட புதிய நடிகர்கள் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

கார்களுக்கு முக்கியத்துவம்

கார்களுக்கு முக்கியத்துவம்

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படங்களின் சேஸிங் காட்சிகளில் ஒவ்வொரு படத்திலும் சில கார்கள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையாக தோன்றியிருக்கும். அடுத்து வரும் படங்களில் இந்த தகவல்களை காணலாம்.

 ஃபோர்டு மஸ்டாங்

ஃபோர்டு மஸ்டாங்

மூன்றாம் பாகத்தில் ஃபோர்டு மஸ்டாங் ரேஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் பயன்படுத்தப்பட்ட காரில் நிசான் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

 மிட்சுபிஷி லான்சர்

மிட்சுபிஷி லான்சர்

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் மூன்றாம் பாகமான டோக்கியோ டிரிப்ட் படத்தில் மிட்சுபிஷியின் பெர்ஃபார்மென்ஸ் செடான் காராக வர்ணிக்கப்படும் மிட்சுபிஷி லான்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 405 எச்பி பவரை வெளிப்படுத்தும் எஞ்சின் கொண்டது. இதுதவிர, செவர்லே மான்டே கார்லோ, ஃபோக்ஸேவேகன் வேன், நிசான் சிலிவா எஸ்-15, மஸ்தா ஆர்எக்ஸ்-7 மற்றும் நிசான் 350இசட் உள்ளிட்ட கார்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கார் டிரிஃப்ட் வல்லுனர்கள்

கார் டிரிஃப்ட் வல்லுனர்கள்

இந்த படத்தின் கார் டிரிஃப்ட்டிங் காட்சிகளை எடுப்பதற்கு பிரபல கார் டிரிஃப்ட் மன்னர்களான கெய்ச்சி சூச்சியா, ரைஸ் மில்லென் மற்றும் சாமுவெல் ஹூபினெட்டே ஆகியோர் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இதில், சில முக்கிய காட்சிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஹாத்ரோன் மாலின் பார்க்கிங் பகுதியில் எடுக்கப்பட்டது.

கார் சேஸிங்

கார் சேஸிங்

இந்த படத்தில் வரும் கார் சேஸிங் காட்சிகள் நிச்சயம் அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் படமாகக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2013, 14:11 [IST]
English summary
Tamil leading Television channel Sun Tv to screen," The Fast and the Furious 3" (Tokyo Drift) Hollywood film tomorrow. The film is a 2006 Japanese-American illegal street racing action film directed by Justin Lin and written by Chris Morgan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+