ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்களில் ரூ.3,400 கோடி கார், கட்டங்கள் நாசம்!

Written By:

மயிர் கூச்செரிய செய்யும் கார் சாகச காட்சிகளுடன் மிக பிரம்மாண்ட முறையில் வெளியிடப்பட்டு வரும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசை திரைப்படங்கள் உலக அளவில் கார் பிரியர்களையும், சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இந்த திரைப்படங்களுக்காக பல கோடி ரூபாய் மதிப்புடைய கார்கள் விசேஷமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், மிக பிரம்மாண்ட முறையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

ரூ.3,400 கோடி கார், கட்டடங்களை நாசமாக்கிய ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்!

இந்த நிலையில், இதுவரை வெளிவந்துள்ள ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்களின் 7 பாகங்களிலும் படப்பிடிப்பின்போது சேதமடைந்த கார்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்பு குறித்து இங்கிலாந்தை சேர்ந்த Insurethegap என்ற இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்த திரைப் படங்களுக்காக சேதமடைந்த கார்கள், கட்டங்கள் மதிப்பு கிறுகிறுக்க வைக்கிறது.

ரூ.3,400 கோடி கார், கட்டடங்களை நாசமாக்கிய ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்!

ஆம், இதுவரை வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்களின் 7 பாகங்களிலும் நாசமான கார்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்பு ரூ.3,400 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.3,400 கோடி கார், கட்டடங்களை நாசமாக்கிய ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்!

இதுவரை வெளியான திரைப்படங்களின் படப்பிடிப்பின்போது, 142 சாதாரண வகை கார்கள் முற்றிலும் நாசமடைந்துவிட்டதாம். 169 கார்கள் பலத்த சேதமடைந்துள்ளனவாம். கார்கள் மட்டுமின்றி, சொகுசு பஸ், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் இதில் அடக்கம்.

ரூ.3,400 கோடி கார், கட்டடங்களை நாசமாக்கிய ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்!

இதுதவிர, நாயகன் மற்றும் வில்லனாக நடித்தவர்கள் பயன்படுத்திய விசேஷ வகையிலான 32 கார்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டனவாம். இதுதவிர, 31 கட்டடங்கள் படப்பிடிப்பின்போது முற்றிலும் சேதமடைந்துள்ளன. 53 கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

ரூ.3,400 கோடி கார், கட்டடங்களை நாசமாக்கிய ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்!

இந்த திரைப்படங்களில் கதாநாயகர்களால் 320 மில்லியன் டாலர்களுக்கு சேதமும், வில்லன்களால் 194 மில்லியன் டாலர்கள் சேதமும் ஏற்பட்டுள்ளதாம். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜேசன் ஸ்டேட்டம்தான் அதிக கார்களை நாசமாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.3,400 கோடி கார், கட்டடங்களை நாசமாக்கிய ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்!

மேலும், கடைசியாக வெளிவந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் -7 திரைப்படத்தில்தான் சேதமடைந்த கார்களின் மதிப்பு மிக அதிகமாம். இந்த திரைப்படத்தில் மட்டும் கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு கார்கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.3,400 கோடி கார், கட்டடங்களை நாசமாக்கிய ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்!

இந்த படத்தில் சேதமடைந்த லைக்கன் ஹைப்பர்ஸ்போர்ட் காரின் விலை மதிப்பு மட்டும் ரூ.22.06 கோடி என்பது குறிப்பிட்டு சொல்லப்பட்டு இருக்கிறது. இதேபோன்று, விசேஷமாக உருவாக்கப்பட்ட ஏராளமான கார்களும் இந்த திரைப்படத்தில் பலத்த பொருட்சேதத்தை உண்டாக்கியதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.3,400 கோடி கார், கட்டடங்களை நாசமாக்கிய ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்!

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரை வரிசையின் 8-ஆம் பாகம் The Fate of the Furious என்ற பெயரில் வரும் 14ந் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Fast & Furious Series Car And Buildings Damage Cost Details Revealed. Read in Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark