வருடாந்திர பாஸ் வழங்கியதால் இவ்வளவு கோடி நஷ்டமா? எல்லாம் நம்ம வரிப்பணம் தான்!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் வருடாந்திர பாஸ் முறை அமலுக்கு வந்துள்ளது. இதை மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த பாஸ் முறையால் மத்திய அரசுக்கு வரவேண்டிய பணம் குறைந்துள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கான கணக்கீடு வெளியாகியுள்ளது. சுங்கசாவடிகளை நடத்தி வரும் நிறுவனங்களுக்கு இந்த தொகை நஷ்ட ஈடாக வழங்கப்படவுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்ட்ம் 15ம் தேதி முதல் சுங்கசாவடிகளை கடந்து செல்ல தனிநபர் கமர்ஷியல் அல்லாத வாகனங்களுக்கு வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 200 சுங்கசாவடிகளை ஒரு வருடத்திற்கு கடந்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸை பெற ரூ3000 கட்டணம் செலுத்தவேண்டும். இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1150 சுங்கசாவடிகளில் இதை பயன்படுத்த முடியும்.

Fastag Annual Pass

இந்த வருடாந்திர பாஸ் முறை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மக்கள் பலர் இந்த பாஸை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த பாஸ் அறிமுகமான 5 நாட்களிலேயே 5 லட்சம் பேர் இந்த பாஸை வாங்கிவிட்டனர். இந்நிலையில் சுங்கசாவடிகளில் உள்ள வசூலை வைத்து சுங்கசாவடிகள் தனியார்களுக்கு ஏலம் விடப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.மத்திய அரசுக்கு பெரும் தொகையை கொடுத்து இந்த தனியார் நிறுவனங்கள் சுங்கசாவடியை ஏலம் எடுக்கின்றன. இதில் வசூலாகும் தொகையை அவர்கள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு ஈடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான நஷ்டஈட்டை வழங்கும் மெக்கானிசத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள காண்ட்ராக்டர்களுக்கு அடுத்த 3 மாத்திற்கு இந்த நஷ்டஈடு கணக்கீடு செய்யப்படு வழங்கப்படும்.

Fastag Annual Pass

3 மாதத்திற்கு பிறகு ஒப்பந்தம் மாறும்போது இந்த பாஸ் முறை குறித்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும். அதன் பிறகு அந்த தொகை மட்டுமே வழங்கப்படும் நஷ்ட ஈஐ வழங்கப்படாது. தற்போத உள்ள டிரெண்ட் படி பார்த்தால் மத்திய அரசு ரூ4200-ரூ4500 கோடியை நஷ்டஈடாக வழங்க வேண்டிய சூழ்நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நஷ்டஈடு என்பது ஒரு சுங்கசாவடியில் எத்தனை வாகனங்கள் பாஸை பயன்படுத்தி கடந்துள்ளனர். என்பதை கணக்கிட்டு அந்த வாகனம் பாஸ் இல்லாமல் பயணித்தால் எவ்வளவு பணம் வழங்கியிருக்கவேண்டும் என்பதை கணக்கிட்டு அதில் ஒரு முறை கடந்தால் ஏற்கனவேபாஸ் மூலம் வழங்கப்படும் ரூ15ஐ கழித்து மீதம் உள்ள பணம் நஷ்ட ஈடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை வாகனங்கள் கடந்துள்ளது என்பதை மத்திய அரசின் என்பிசிஐ போர்ட்டல் மூலம் வழக்கம் போல வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fastag Annual Pass

தற்போது உள்ள நிலவரப்படி சுங்கசாவடிகளில் மொத்தம் ஆகும் கலெக்ஷனில் பயணிகள்ரக கார்கள் தான். 35-40 சதவீத வருவாயை தருகின்றன. இந்த பாஸ் முறையில் நடப்பு நிதியாண்டில் சுங்கசாவடி வருமானத்தில் பெரும் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ72,931 கோடி சுங்கசாவடி மூலம் வருவாயாக ஈட்டப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஓட்டிகள் நீண்ட ஆண்டுகளாக சுங்கசாவடி கட்டணம் குறித்து மிகப்பெரிய அளவில் கவலைகளை சந்தித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு நல் வாய்ப்பாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் இதை பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகம் ஆகும். கமர்ஷியல் வாகனங்களுக்கும் இது போன்ற பாஸ் முறை அமலுக்கு வந்தால் நிச்சயம் அதுவும் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2025, 11:20 [IST]
English summary
Fastag annual pass authorities face rs4500 crore burden icra
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X