2 மாசத்துல இவ்வளவு லட்சம் பேர் பாஸ் வாங்கிட்டாங்களா? எத்தனை கார்ல யூஸ் பண்ணாங்க தெரியுமா?
இந்தியாவில் சுங்கசாவடிகளை கடந்து செல்ல தனி நபர் வாகனங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வருடாந்திர பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்றுடன் இந்த பாஸ் அறிமுகமாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை 25 லட்சம் பேர் இந்த பாஸை வாங்கியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சுங்கசாவடிகளை கடந்து செல்ல ஒவ்வொரு முறையும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியதுஇருக்கிறது. தற்போது 98சதவீத சுங்கசாவடியை பயன்படுத்தும் நபர்கள் ஃபாஸ்டேக் கார்டை பயன்படுத்த துவங்கிவிட்டனர். கார்டைமுன்னரே ரீசார்ஜ் செய்து வைத்து அந்த வாகனம் சுங்கசாவடியை கடந்து செல்லும் போது கார்டில் உள்ள பணம் கழிக்கப்படம் வகையில் இந்த தொழிற்நுட்பம் செயல்படுகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு முறையும் சுங்கசாவடியை கடந்து செல்ல அதிக பணம் செலுத்த வேண்டியது உள்ளது என மக்கள் பலர் புகாரளித்து வந்தனர். இதற்கான தீர்வை அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மத்திய அரசு தனி நபர் வாகனங்களுக்கான வருடாந்திர பாஸ் முறையை கொண்டு வந்தது.
இதன்படி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த பாஸ் விற்பனைக்கு வந்தது. இந்த பாஸை பெற வேண்டும் என்றால் ராஜ்மார்க் யாத்ரா ஆப் மூலம் வருடத்திற்கு ரூ3000 செலுத்தி பாஸை பெற வேண்டும். இது ஏற்கனவே உங்களிடம் உள்ள ஃபாஸ்டேக் கார்டில் இந்த பாஸை ஆக்டிவேட் செய்துவிடும். இந்த பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்டால் ஒரு வருடத்திற்கு 200 முறை சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும்.

ஒரு வருடத்திற்குள்குள் 200 முறைய பயன்படுத்திவிட்டால் ரூ3000 செலுத்தி இந்த பாஸை நீங்கள் மீண்டும் பெற வேண்டும் அதற்கு மீண்டும் ஒரு ஆண்டு வேலிடிட்டி கிடைக்கும். நீங்கள் ஒரு வருடத்திற்குள் 200 முறையை நீங்கள் பயன்படுத்தாவிட்டால் அது காலாவதியாகிவிடும். இந்த பாஸ் அறிமுகமாகி இன்றுடன் 2 மாதங்கள் ஆகும். நிலையில் தற்போது இந்த பாஸ் குறித்த முக்கியமானதகவல்களை அரசு வெளியிட்டுள்ளது.
2 மாதத்தில் 25 லட்சத்திற்குள் மேற்பட்டோர் இந்தபாஸை வாங்கிவிட்டதாக அரசு அறிவித்தள்ளது. இது மட்டுமல்ல இந்த பாஸை பயன்படுத்த 5.6 கோடி முறை வாகனங்கள் சுங்கசாவடியை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸை இந்தியா முழுவதும் உள்ள 1150 தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயன்படுத்த முடியும்.
இந்த பாஸை நீங்கள் ரூ3000 செலுத்தி வாங்கிவிட்டால் சுமார் 2 மணி நேரத்தில் இது ஆக்டிவேட் ஆகிவிடும். இதனால் பயணிகள் இடைஞ்சல் இல்லாத பயணத்தை பெற முடியும். இந்த பாஸை தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும், மாநில நெடுஞ்சாலைகள், அல்லது லோக்கல் சுங்கசாவடிகளில் பயன்படுத்த முடியாது.இதை சற்று அசெளகரியமாக மக்கள் கருதுகின்றனர்.
இதற்கு முக்கியமான காரணம் பாஸ் மூலம் ஒரு சுங்கசாவடியை கடந்து செல்ல வேண்டும் என்றால் ரூ15 வரை செலவாகிறது. ஆனால் சில லோக்கல் சுங்கசாவடிகளில் அதற்கும் குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. அதனால் அந்த சுங்கசாவடிகளில் நேரடியாக ஃபாஸ்ட்டேக் கார்டிலிருந்து கட்டணம்கழிக்கப்படும் பழைய நடைமுறையே தொடருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபாஸ்ட்டேக் கார்டுகள் வருடாந்திரா பாஸ் முறை நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனால் மக்கள் பலர் இதை வாங்கி பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவும் விலையை குறைக்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் தற்போது வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications