தீபாவளியை விடுங்க! கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு இதை கிஃப்ட் பண்ணலாம்!
இந்தியாவில் தற்போது பாஸ்ட் டேக் கார்டுகள் அமலில் இருக்கும் நிலையில் பாஸ்ட் டேக் கார்டுகளில் பயன்படுத்துவதற்காக ஓராண்டுக்கான பாஸூம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. இதை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இனி இதை நீங்கள் உங்களுக்கு பிடித்த நபருக்கு பரிசாக வாங்கி கொடுக்கலாம் என்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. முன்பு அவரவர் செல்போனிலேயே இதை வாங்கிக் கொள்ள முடியும் என்று இருந்த ஆப்ஷன் தற்போது மாற்றப்பட்டு இதை மற்றவர்களுக்கு பரிசளிக்கும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. முன்பு நேரடியாக பணமாக வசூலிக்கப்பட்டு வந்த சுங்க கட்டணங்கள் பின்பு பாஸ்ட் டேக் முறையில் மாற்றப்பட்டது. தற்போது 98 சதவீதமான வாகனங்களில் பாஸ்ட் டேக் கார்டுகள் செயல்பாட்டில் இருக்கிறது. இதனால் பெரும்பாலானோர் பாஸ்ட் டேக் கார்டு முறையிலேயே சுங்க கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக வருதாந்திர பாஸ் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த பாஸை 3000 செலுத்தி வாங்கினால் 200 சுங்கச்சாவடிகளை சுலபமாக கடந்து செல்ல முடியும்.இந்த வகையில் புதிய பாஸ்ட் டேக் கார்டு வருடாந்திர பாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் மக்கள் பலர் இந்த காலை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். மூன்று மாதத்திலேயே லட்சக்கணக்கானோர் இதை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது இதை பரிசளிக்கும் ஆப்ஷனும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுவரை இந்த காலை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களை தங்கள் ராஜ்மார்க் யாத்ரா வாங்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது இதை நீங்கள் மற்றவர்களுக்கு பரிசளிக்கும் வகையிலும் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் ராஜ்குமார் பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்தி வாங்கும்போது நீங்கள் யாருக்கு பரிசளிக்க விரும்புகிறீர்களோ அவர்களது வாகன எண் மற்றும் அவர்களது செல்போன் நம்பரை உள்ளீடு செய்ய வேண்டும் உள்ளீடு செய்த பிறகு அதற்கான பேமென்ட் நீங்கள் செலுத்தினால் நேரடியாக அந்த வாகனத்திற்கு பாஸ்ட் டேக் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும் ஆனால் அதற்கு முன்பு ஒரு ஓடிபி மூலம் சரிபார்ப்பும் செய்ய வேண்டும்.

இந்த வரிசை பெரும் நபருக்கு நீங்கள் வழங்கிய செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும் அதை நீங்கள் பதிவு செய்துவிட்டால் பாஸ்ட் டேக் கார்டு அவரது அக்கவுண்டில் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும் இதற்காக அதிகபட்சம் 2 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளப்படும் இதனால் ஒரே குடும்பத்தில் பலர் வாகனங்களை உபயோகிக்கும் போது ஒரே நபர் அனைத்து வாகனங்களுக்கான கட்டணத்தையும் செலுத்த இது வசதியாக இருக்கும்.
இது மட்டுமல்லாமல் சில நிறுவனங்கள் பரிசாகவும் வழங்க இது வசதியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை அவருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்தி அதில் வருடாந்திர பாஸை ஆக்டிவேட் செய்து விட்டால் ஒருமுறை ஆக்டிவேட் செய்து விட்டால் அது ஒரு வருடத்திற்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இதற்கு நீங்கள் ரூபாய் 3000 கட்டணம் செலுத்த வேண்டும். இப்படி கட்டணம் செலுத்தினால் 200 ட்ரிப் வரை பயன்படுத்த முடியும்.
ஒரு ஆண்டிற்குள் 200 ட்ரிப் பயன்படுத்தினால் இது காலாவதி ஆகிவிடும் அல்லது ஒரு ஆண்டு தாண்டிவிட்டாலும் கலாவதியாகி விடும் எது முதலில் வருகிறதோ அப்போதுதான் இதன் காலாவதி தேதியில் வரும். ஒருவேளை நீங்கள் ஓராண்டிற்குள் 200 டிரிப்களையும் முடித்து விட்டால் உடனடியாக வேறொரு பாஸை வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் வாங்கியதில் இருந்து ஒரு ஆண்டு காலம் வரை அந்த காலாவதி தேதியுடன் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அவரவர் மட்டுமே பாஸ்ட்டேக் கார்டு வருடாந்திர பாஸ் வாங்க முடியும் என்ற சூழ்நிலை தற்போது மாறி அதை பரிசளிக்கலாம் என வந்துள்ளது. நிச்சயம் பாராட்டத்தக்கது தான் இந்த தீபாவளியை குறிவைத்து பலர் இதை செய்திருப்பார்கள் தற்பொழுது தீபாவளி இல்லை என்றாலும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பொங்கல் பரிசுகளை வழங்க இதை பலர் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது நிச்சயம் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








