எல்லா டோல்கேட்லயும் யூஸ் ஆகாதா? ரூ3000 பாஸ் எடுத்தா இந்த டோல்கேட்களில் மட்டுமே யூஸ் பண்ண முடியும்!
இந்தியாவில் ஃபாஸ்ட்டேக் கார்டை பயன்படுத்தி சுங்ககட்டணம் செலு்த்தி வரும் கார் உரிமையாளர்களுக்கு வருடாந்திர பாஸ் கட்டணத்தை மத்திய அரசு அறிவித்தது.அதன் படி இந்த பாஸ் எடுத்தால் ஆண்டிற்கு 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும் என தெரிவித்திருந்தது. இப்படியாக இந்த பாஸை பயன்படுத்தி எந்தெந்த சாலைகளில் உள்ள சுங்கசாவடிகைகடந்து செல்ல முடியும் என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சுங்கசாவடிகளுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாக நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்த நிலையில் கார், வேன், ஜீப் போன்ற தனிநபர் வாகனங்களுக்காக மட்டும் தற்போது மத்திய அரசு வருடாந்திர பாஸ் முறையை அறிமுகப்படுத்துகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த பாஸ் வழங்கப்படவுள்ளது. இதை வாங்கிவிட்டால் ஆண்டிற்கு 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும். இந்த பாஸ் கட்டணம் ரூ3000 தான்.

இந்த பாஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் போதே இந்த பாஸ் குறித்த சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த பாஸ் வாங்கிட்டால் அதற்கு ஒரு ஆண்டு மட்டுமே வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த காலகட்டத்திற்குள் 200 சுங்கசாவடிகளை அந்த வாகன ஓட்டியால் கடக்க முடியும். ஒராண்டிற்குள் கடக்கவில்லை என்றாலும் அந்த பாஸின் வேலிடிட்டி தீர்ந்து போய் விடும்.
அதே நேரம் ஒராண்டிற்குள்ளாகவே இந்த 200 சுங்கசாவடிகளை கடந்துவிட்டால் அந்த வாகன உரிமையாளர் அடுத்து ரூ3000 செலுத்தி புதிய பாஸ் எடுத்துக்கொள்ளலாம். அந்த புதிய பாஸ் எடுத்தவருக்கு அது எடுக்கபபட்ட நாளில் இருந்து 1 ஆண்டு வேலிடிட்டி வழங்கப்படும். 1 ஆண்டு அல்லது 200 டிரிப் இதில் எது முதலில் வருகிறதோ அப்பொழுது இந்த பாஸ் காலாவதியாகிவிடும்.

சிலருக்கு இந்த பாஸ் அனைத்து சுங்கசாவடிகளிலும் செல்லுபடியாகுமா என்ற கேள்வி இருக்கிறது. இதற்கும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி இந்த பாஸை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் இதை பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.
நீங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளை கடக்கவேண்டும் என்றால் தற்போது எப்படி ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்கிறீர்களோ அதே போல தற்போதும் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொண்டால் அதில் உள்ள பணம் நீங்கள் மாநில நெடுஞ்சாலைகளை நடக்கும் போது கழிக்கப்படும். இந்த சுங்கசாவடிகளை கடக்கும் போது உங்களிடம் வருடாந்திர பாஸ் இருந்தாலும் அதில் இருந்து டிரிப் கணக்கு கழிக்கப்பட மாட்டாது.

இந்த வருடாந்திர பாஸை நீங்கள் ராஜ்மார்யாத்ரா ஆப்மூலம் வாங்க முடியும் என தெரிவித்துள்ளது. இந்த பாஸ் வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து வழங்கப்படும். ஒரு நம்பர் பிளேட்டிற்கு வாங்கிய பாஸை வைத்து மற்றொரு வாகனத்திற்கு பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அந்த கார்டு டி ஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வருடாந்திர பாஸ் முறையை ஃபாஸ்ட்டேக் கார்டில் அறிமுகப்படுத்துவது மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மக்கள் பலர் இதற்காக நீண்ட ஆண்டுகளாக காத்திருந்தனர். சுங்ககட்டணம் அதிகமாக கட்ட வேண்டும் என பலர் வேதனைபட்டு வந்த நிலையில் தற்போது இந்த பாஸ் முறையால் சுங்க கட்டணம் கடுமையாக குறைந்துள்ளது. இது நிச்சயம் வரவேற்க்கதக்கது தான்.


Click it and Unblock the Notifications









