வெறும் ரூ15 செலவில் சுங்கசாவடியை கடக்கலாம்! ஆகஸ்ட் 15ல் வருகிறது புதிய பாஸ்!

இந்தியா முழுவதும் நாளை முதல் ஃபாஸ்ட்டேக் பயனாளர்கள் தங்கள் வருடாந்திர பாஸை அப்ளை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ரூ3000 கட்டணம் செலுத்தி இந்த பாஸை வாங்கினால் 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல பாஸ் வழங்கப்படும். இதை எப்படி பெறுவது?எப்படி எங்கெல்லாம் பயன்படுத்துவது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சுங்கசாவடிகளில் அதிகமாக பணம் செலுத்த வேண்டியது இருப்பதாகவும், இதனால் தங்கள் பயண செலவுகள் அதிகமாக இருப்பதாகவும் நீண்ட நாட்களாக வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தி இருந்து வருகிறது. சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது.

FASTag Annual Pass

இந்நிலையில் மத்திய அரசு தனி நபர் வாகன ஓட்டிகளுக்கான சுங்கசாவடியை கடந்து செல்லும் வருடாந்திர பாஸ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நாளை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இதை மக்கள் வாங்க முடியும் என தெரிவித்துள்ளது. இதை வாங்க ரூ3000 கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே மக்கள் வைத்திருக்கும் ஃபாஸ்ட்டேக் கார்டில் இதை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

இதற்காக ஃபாஸ்ட்டேக் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போனில் ராஜ்மார்க் யாத்ரா என் செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் அதன் மூலம் உங்கள் வாகன பதிவெண் அல்லது ஃபாஸ்ட்டேக் கார்டு எண்ணை பதிவு செய்து இதில் இந்த பாஸை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அல்லது மத்திய சாலை போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் இதை ஆக்டிவேட் செய்ய முடியும்.

FASTag Annual Pass

இதற்காக ரூ3000 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பணத்தை யூடிஐ, கார்டு, அல்லது நெட்பேங்கிங் முறையில் பணம் செலுத்த முடியும். இப்படியாக பாஸ் வாங்கிவிட்டால் பாஸ் வாங்கிய தேதியில் இருந்து அடுத்த 365 நாட்கள் இந்த பாஸ் ஆக்டிவேட்டில் இருக்கும். அதற்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடியை 200 முறை கடந்து செல்ல முடியும். அப்படி பார்த்தால் ஒரு முறைக்கு ரூ15 என கணக்கு வருகிறது.

தற்போது உள்ள நடைமுறையில் சிங்கிள் ட்ரிப் என்றால் அதற்கு ஒரு தொகையும், ரிட்டன் ட்ரிப் என்றால் அதற்கு குறைவான தொகையும் ஃபாஸ்டேக் கார்டில் இருந்து கழிக்கப்படும். இது24 மணி நேரத்திற்குள் ரிட்டன் வந்தால் மட்டுமே கழிக்கப்படும். ஆனால் இந்த பாஸில் ரிட்டனிற்காக குறைவான தொகை என கணக்கு கிடையாது. ஒவ்வொரு முறை கடக்கும் போதும் அது ஒரு டிரிப்பாக கணக்கில் எடுத்துக்கொண்டு மொத்தம் உள்ள 200 டிரிப்பில் இருந்து கழிக்கப்படும்.

அதே போல 200 டிரிப் 1 ஆண்டிற்குள் முடிந்துவிட்டால் மீண்டும் ரூ3000 பணம் செலுத்தி இந்த பாஸை புதுப்பித்துக்கொள்ள முடியும். நீங்கள் பணம் செலுத்திய தேதியில் இருந்து அடுத்த 1 ஆண்டிற்கு இந்த பாஸ் ஆக்டிவேட்டில் இருக்கும். ஒருவேளை ஒராண்டாகியும் இந்த பாஸை 200 டிரிப் பயன்படுத்தாமல் இருந்தால் ஓராண்டிற்கு பிறகு பாஸ் காலாவதியாகிவிடும். மீண்டும் புதிய பாஸ் தான் எடுக்க வேண்டும்.

இந்த பாஸை தனிநபர் வாங்களான கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். கமர்ஷியல் பயன்பாட்டில் உள்ளவாகனங்களுக்கு இந்த பாஸ் கிடையாது. இவர்கள் தற்போது வழக்கம் போல் பயன்படுத்தும் முறையையே பின்பற்ற வேண்டும். இதனால் இனி தனிநபர் பாஸ் வாங்கிய பிறகு பயண செலவு குறையும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கசாவடியில் இனி அதிக பணம் செலவு செய்து பயணிக்க வேண்டிய தேவை மக்களுக்கு வெகுவாக குறையும். இதனால் குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். இது நிச்சயம் மக்களுக்கு பெரிய அளவில் பலன் தரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 14, 2025, 11:15 [IST]
English summary
Fastag annual pass launch august 15 details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+