ரூ3,000 குடுத்து ஃபாஸ்டேக் பாஸ் வாங்க போறீங்களா? இது தெரியாம வாங்காதீங்க!
இந்தியாவில் ஃபாஸ்டேக் கார்டுகளுக்கான வருடாந்திர பாஸ் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இனி வாகன ஓட்டிகள் சுங்கசாவடிகளில் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியதில்லை ஒரு சுங்கசாவடியை வெறும் ரூ15 செலவில் கடந்து விட முடியும். வரும் 15ம் தேதி இந்த கார்டு விற்பனைக்கு வரும் நிலையில் இது குறித்து நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து காணலாம் வாருங்கள்.
தற்போது வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் கார்டு மூலம் சுங்கசாவடிகளை கடந்து வருகின்றனர். இனி தனியார் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு வருடாந்திர பாஸை வரும் 15ம் தேதி முதல் வாங்கிக்கொள்ள முடியும் இதை வைத்து 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும். ஒராண்டிற்குள் இதை அவர்கள் செய்ய வேண்டும். அப்படி என்றால் ஒரு சுங்க சாவடிக்கு ரூ15 செலுத்தினால் போதும் என்ற நிலை வரப்போகிறது.

யார் எல்லாம் வாங்கலாம்?
ஃபாஸ்ட்டேக் வருடாந்திர பாஸ் கார்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்தாலும் அதை தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே வாங்க முடியும், கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு வாங்கலாம். கமர்ஷியல் வாகனங்கள் இந்த பாஸை வாங்க முடியாது. இதற்க ஒரு முறை கட்டணமாக ரூ3000 செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும்.
எப்படி வாங்குவது?
ஃபாஸ்ட்டேக் கார்டை வருடாந்திர பாஸாக மாற்ற முடியும். இதற்கு Rajmarg yartra என்ற ஆப் மூலமோ அல்லது NHAI OR MORTH வெப்சைட்கள் மூலம் வாங்க முடியும். இதில் நீங்கள் உங்கள் வாகனத்தின் நம்பரோ அல்லது ஃபாஸ்ட்டேக் ஐடியோ கொடுத்து அதில் இந்த வருடாந்திர பாஸை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இதற்கு ரூ300 கட்டணம், யூபிஐ, டெபிட்கார்டு, நெட்பாங்கிங் மூலமாக செலுத்த முடியும். வரும் 15ம் தேதி தான் இதை ஆக்டிவேட் செய்ய முடியும். ஆக்டிவேட் ஆனதும் அதற்கான எஸ்எம்எஸ் நீங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு வரும். இப்படியாக வாங்கப்படும் பாஸை மாற்ற முடியாது. அதை திரும்ப கொடுத்து பணத்தை பெற முடியாது.

இதை அனைத்து சுங்கசாவடிகளிலும் பயன்படுத்தலாமா?
இந்த வருடாந்திர பாஸ் என்பது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாநில அரசு நடத்தும் சுங்கசாவடிகள், முனிசிபல் கார்பரேஷன் நடந்தும் சுங்கசாவடிகள், ஆகியவற்றில் பயன்படுத்த முடியாது. இந்த சுங்கசாவடிகளை கடக்கும்போது நடப்பு முறையில் உள்ள அதே வழி முறை பின்பற்றப்படும்.தேசிய சுங்கசாவடிகளில் பயணிக்கும் போது மட்டும் இந்த பாஸ் மூலம் வழங்கப்படும் 200 சுங்கசாவடிகள் கடப்பு என்ற எண்ணிக்கையில் குறைக்கப்படும்.
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இது அலுக்கும் வரும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இறத்கான ஏற்பாடுகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன. இதை வாங்க மக்கள் பலர் காத்திருக்கிறார்கள். ஒரே நாளில் கோடிகணக்கான மக்கள் இந்த பாஸை வாங்கிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த சுங்கசாவடி பிரச்சனை நீண்ட ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மக்கள் குறைந்த விலையில் வாகனங்களில் பயணம் செய்ய முடியும். தற்போது ஆயிரக்கணக்கில் சுங்கசாவடிக்காக கட்ட வேண்டிய கட்டணம் நூற்றுக்கணக்கில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








