டோல்கேட் தலைவலி இனி இல்லை! வருடத்திற்கு இனி ரூ3000 கட்டினால் போதும்!

இந்தியாவில் சுங்க சாவடிகளை கடந்து செல்ல வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட்15ம் தேதி முதல் இந்த வருடாந்திர பாஸ் முறை நடைமுறைக்கு வரப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதை மக்கள் எப்படி பெறுவது. இது எப்படி பயன்படும்என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வாகன உரிமையாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தலைவலி என்றால் அது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கசாவடிகளில் உள்ள கட்டணங்கள் தான். அடிக்கடி வாகனம் உபயோகம் செய்யும் மக்களுக்கு ஒவ்வொரு முறையும் சுங்க கட்டணம் செலுத்துவது மிகுந்த தலைவலியாக மாறுகிறது. அவர்களுக்கான போக்குவரத்து செலவும் அதிகமாகிறது.

இந்நிலையில் மத்திய அரசு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் சுங்க சாவடியை கடந்து செல்வதற்கான வருடாந்திர பாஸ் முறையை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதன் படி ஆண்டிற்கு ரூ3000 என்ற கட்டணத்தில் இந்த பாஸ் அறிமுகமாகவுள்ளது. இந்த பாஸ் கமர்ஷியல் வாகனங்களுக்கு பொருந்தாது தனி நபர் வாகனங்கள் மட்டுமே இந்த பாஸ் முறையை பயன்படுத்த முடியும்.

FASTag Annual Pass

ஒரு முறை ரூ3000 செலுத்தி இந்த பாஸை வாங்கிவிட்டால் அந்த வாகனம் 200 சுங்க சாவடிகளை கடந்து செல்ல முடியும். இதற்க ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது. அப்படி பார்த்தால் சராசரியாக ஒரு சுங்க சாவடியை கடந்து செல்ல ரூ15 செலவு செய்ய வேண்டும். இது சாதாரண சுங்கசாவடி கட்டணத்தை விட பல மடங்கு குறைவாக இருக்கும்.

தற்போது ஒவ்வொரு சுங்க சாவடிகளிலும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பாஸை வாங்கிவிட்டால் எந்த சுங்கசாவடியை கடந்தாலும் ஒரே மாதிரியாக ரூ15 தான் செலவாகும். இதை பயன்படுத்த 365 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஒருவேளை 365 நாட்களுக்குள் ஒருவர் 200 டிரிப்பை முடித்துவிட்டால் அவர் அடுத்து ரூ3000 கட்டணம் செலுத்தி பாஸ் வாங்க வேண்டும்.

FASTag Annual Pass

அல்லது ஒரு ஆண்டு கால அவகாசத்திற்குள் 200 டிரிப்களை முடிக்கவில்லை என்றாலும் ஒரு ஆண்டு அவகாசம் முடியும் போது இது காலாவதியாகிவிடும். இந்த பாஸ் கமர்ஷியல் அல்லாத தனி நபர் வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். கமர்ஷியல் வாகனங்கள் தற்போது உள்ள நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த 200 டிரிப் என்பது சிங்கிள் கிராஸிங் டிரிப்பிற்காக மட்டுமே கணக்கிடப்படும். அப்படி என்றால் நீங்கள் டபுள் டிரிப் செல்லும் போது 2 முறை கடந்ததாக கணக்கீடு செய்யப்படும். அதனால் நீங்கள் டபுள் கட்டணம் ரூ30 செலவு செய்ய வேண்டியது இருக்கும். எப்படி கணக்கிட்டாலும் இது தனி நபர் வாகனங்களுக்கு லாபமாகவே இருக்கிறது. இதனால் இதை மக்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கசாவடி கட்டணம் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் நிலையில் பலர் இந்த வருடாந்திர பாஸ் முறையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்ப்பை வழங்கும் வகையில் இருக்கிறது. முதல் நாளே ஏகப்பட்ட மக்கள் இந்த பாஸை வாங்க வாய்ப்புள்ளது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 18, 2025, 16:05 [IST]
English summary
Fastag annual pass rs 3000 announced know the launch date
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X