ஒரே நாளில் ரூ42 கோடி வசூல்! 1.4 லட்சம் பேர் இந்த பாஸை வாங்கிட்டாங்க!

இந்தியாவில் ஆகஸ்ட் 15ம் தேதி ஃபாஸ்டேக் பாஸ்கள் வழங்கப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே லட்சகணக்கான மக்கள் இந்த பாஸை வாங்கியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாஸ் நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த பாஸை மக்கள் வாங்கி குவித்துள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே நாம் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஒட்டிகள் சுங்கசாவடிகளை கடந்து செல்ல சுங்க கட்டணம் செலுத்த வேண்டியது வரும். இந்நிலையில் மத்திய அரசு தனி நபர் வாகனங்களுக்கான வருடாந்திர ஃபாஸ்ட் டேக் பாஸ் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளை இந்த பாஸை வாங்கினால் கடந்து செல்ல முடியும்.

Fastag Annual Pass

இந்தியாவில் இந்த பாஸை வாங்க ரூ3,000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் செலுத்தினால் 200 சுங்கசாவடிகளை நம்மாள் கடந்து செல்ல முடியும். இந்த பாஸ் நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் முதல் நாளே மாலை 7 மணி நிலவரப்படி சுமார் 1.4 லட்சம் பயனாளர்கள் இந்த பாஸை வாங்கிவிட்டனர்.

இது மட்டுமல்ல முதல் நாளே 1.39 லட்சம் முறை இந்த பாஸ் பயன்படுத்தப்பட்டு கார்கள் சுங்கசாவடியை கடந்து சென்றுள்ளது. இது மட்டுமல்ல நேற்று நாள் முழுவதும் ஒரே நேரத்தில் 20-25 ஆயிரம் பயனாளர்கள் ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலியை அனைத்து நேரங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர். நேற்று முதல் சுங்கசாவடியை இந்த பாஸ் மூலம் கடந்து செல்லும் போது வாகன ஓட்டிகளுக்கு 0 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக மெசெஜ் வந்துள்ளது. வழக்கமாக எவ்வளவு பணம் பிடிக்கப்பட்டது என்ற எஸ்எம்எஸ் வரும். தற்போது இது 0 என வந்துள்ளது.

Fastag Annual Pass

இனி தொடர்ந்து இந்த பாஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பலருக்கும் இந்த பாஸை எப்படி பெறுவது என்ற விபரம் சரியாக தெரியாமல் இருக்கிறது. அதனால் தான் குறைவாக விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்படுத்த இன்னும் பாஸ் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

மேலும் ஒராண்டிற்குள் 200 சுங்கசாவடியை ஒருவர் கடந்துவிட்டால் அவர் மீண்டும் ரீசார்ஜ் செய்து பாஸை புதுப்பித்துக்கொள்ள முடியும். இதனால் ஆண்டுதோறும் இதன் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த பாஸ் மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறத.

நீண்ட ஆண்டுகளாக சுங்கசாவடி கட்டண பிரச்சனை பெரிய தலைவலியாக இருந்த நிலையில் தற்போது இதற்கு ஒரு தீர்வாக வருடாந்திர பாஸ் முறையை அரசு கொண்டு வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது. இதனால் மக்கள் பலர் இந்த பாஸை விரும்பி வாங்குவார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்த பாஸ் முறையை பயன்படுத்துடன் மூலம் ஒரு முறை சுங்கசாவடியை கடக்க ரூ15 செலவாகிறது. மத்திய அரசு தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், அதிக முறை பயன்படுத்துபவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கலாம். கமர்ஷியல் வாகனங்களுக்கு தனி பாஸ் முறையை கொண்டு வந்தாலும் வரவேற்ப்பை பெறும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 16, 2025, 23:15 [IST]
English summary
Fastag annual pass sells 1 4 lakh on day one nhai launch
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+