ஃபாஸ்டேக் கார்டில் வச்சிட்டாங்க ஆப்பு? காரை விக்கனும்னா இனி ரொம்ப கஷ்டம்ங்க!

சுங்கசாவடி கட்டணத்தில் பாக்கி வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதனால் இனி சுங்ககட்டணம் செலுத்தாமல் யாரும் தப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சுங்கசாவடிகளில் தற்போது ஃபாஸ்ட்டேக் முறையில் தான் வசூல் நடக்கிறது. வாகன ஓட்டிகள் தங்கள் ஃபாஸ்ட்டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் சுங்க சாவடியை கடக்கும் போது அதிலிருந்து பணம் கழித்துக்கொள்ளப்படும். இந்த முறை கொண்டு வரப்பட்டதற்கு முக்கியமான காரணம் விரைவாக வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த சுங்கசாவடியில் கூட்டம் குறையவில்லை.

Fastag Card

இந்நிலையில் மத்திய அரசு மல்டி லேன் ஃப்ரீ ஃப்லோ என்ற முறையில் சுங்கசாவடிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் சுங்கசாவடியில் ஃப்ரி ஃப்ளோ ஆகும் வகையில் வாகனங்கள் பயணிக்கும். வாகனங்கள் சுங்கசாவடியில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.அந்த வழியாக வாகனம் செல்லும் போது வாகனத்தின் நம்பர் பிளேட்டை கண்காணித்து அந்த நம்பர் பிளேட் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த லேனில் செல்லும் நபர்களிடம் ஃபாஸ்ட் டேக் கார்டில் போதுமான பேலன்ஸ் இல்லை என்றால் அது நெகட்டிவில் சென்றுவிடும். அடுத்தமுறை அவர் ஃபாஸ்ட் டேக் கார்டிற்கு பணம் செலுத்தும் போது அந்த தொகை கழிக்கப்படும். இப்படியாக பலர் நெகட்டிவிலேயே கார்ட்டை வைத்து பணத்தை கட்டாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.

Fastag Card

அவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது. அதன்படி வாகன ஓட்டிகள் நெகட்டிவில் ஃபாஸ்டேக் கார்டை வைத்திருந்து பணம் செலுத்தாமல் அந்த வாகனத்தை விற்க முயன்றாலோ அல்லது அதற்கு வாகன பதிவெண்ணை புதுப்பித்தாலோ வாகனத்தின் உரிமையை மாற்றினாலோ அல்லது ஃபிட்னஸ் சான்று எடுக்க முயன்றாலோ அதை செய்யமுடியாது. பாக்கி தொகையை செலுத்தினால் மட்டுமே இதை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீங்கள் வாகனங்களை பயன்படுத்தும் போது எப்பொழுதும் ஃபாஸ்டேக் கார்டை நெகட்டிவில் செல்ல அனுமதிக்காதீர்கள். அப்படியே சென்றாலும் அதை உடனடியாக ரீசார்ஜ் செய்து ஆக்டிவேட் செய்துவிடுங்கள். அப்பொழுது தான். நீங்கள் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருக்க முடியும். தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டை வைத்து தற்போது அரசு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 17, 2025, 23:45 [IST]
English summary
Fastag card missed toll vehicle services denied reasons
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+