எந்த வங்கியில் ஃபாஸ்ட் டேக் கார்டு வாங்கலாம்? எது எதுல எவ்வளவு ஆஃபர்கள் இருக்குது தெரியுமா?

தற்போது பேடிஎம் நிறுவனம் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஃபாஸ்ட் டேக் விநியோகஸ்தர் பட்டியலில் இருந்து பேடிஎம் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம்-ல் ஃபாஸ்ட்டேக் கார்டை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் வேறு வங்கிக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பேடிஎம் வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். டிஆக்டிவேட் செய்த பின்பு அவர்கள் புதிதாக ஒரு வங்கியில் ஃபாஸ்ட் டேக் கார்டு எடுக்க வேண்டும் இப்படி எடுத்து அந்த கார்டை தான் தங்கள் வாகனத்தின் முன்பு ஸ்டிக்கராக ஒட்டிப்பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம்-ல் இருந்து வெளியாயிடும் வாடிக்கையாளர்கள் வேறு எந்த வங்கியின் கார்டை வாங்கலாம் என்று யோசனையில் இருக்கிறார்கள்.

fastag card offers

பேடிஎம்-ல் பழகிப்போன வாடிக்கையாளர்கள் வேறு வங்கிக்கு வரும்போது அங்க வங்கியின் சேவைகள் எப்படி இருக்கும் அந்த வங்கியின் ஃபாஸ்ட் டேக் கார்டு பயன்பாடு மற்றும் ரீசார்ஜ் அனுபவங்கள் எப்படி இருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இப்படியாக தற்போது மார்க்கெட்டில் உள்ள அதிகமாக புழக்கத்தில் இருக்கும் சில வங்கிகளில் ஃபாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

ஆனால் அதற்கு முன்னர் ஃபாஸ்ட் டேக் ஏன் கட்டாயமாக எடுக்க வேண்டும் என்ற விஷயத்தை பார்த்து விடுவோம். இன்று தேசிய நெடுஞ்சாலைகளை கடக்கும்போது சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த ஃபாஸ்ட் டேக் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் டேக் கார்டு இல்லை என்றால் இரு மடங்கு பணம் செலுத்த வேண்டியது இருக்கும். ஃபாஸ்ட் டேக் கார்டு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பணம் செலுத்தி விட்டு தாராளமாக கடந்து செல்ல முடியும்.

fastag card offers

ஃபாஸ்ட் டேக் கார்டு இருந்தால் நீங்கள் பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை. ஒரு முறை கார் ரீசார்ஜ் செய்துவிட்டால் தாராளமாக சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். சில்லறைகள் குறித்த கவலைகளை நீங்கள் பட வேண்டிய தேவை இல்லை. ஃபாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்தினால் சுங்கச்சாவடி கட்டணம் குறைக்கப்படும் . சரி இனி நேரடியாக வங்கிகள் குறித்த தகவல்களை காணலாம் பாருங்கள்.

ஐசிஐசிஐ வங்கி ஃபாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்தினால் உங்களுக்கு சுலபமான பயனர் இண்டர்பேஸ் கிடைக்கும் மற்றும் பல்வேறு கேஷ் பேக் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் பேங்க் ஃபாஸ்ட் டேக் கார்டு மார்க்கெட்டிலேயே குறைவான விலையில் விற்பனை ஆகிறது. சிறந்த கஸ்டமர் சப்போர்ட் இருக்கிறது. அவ்வப்போது தள்ளுபடிகள் அறிவிக்கப்படும்.

எச்டிஎப்சி ஃபாஸ்ட் டேக் கார்டை பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பரிவர்த்தனை நடக்கும். நம்பகத்தன்மையான கஸ்டமர் சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஃபாஸ்ட் டேக் கா்டை பயன்படுத்துவது அதிக கேஷ் பேக் தள்ளுபடி கிடைக்க வழிவகுக்கும். மேலும் எஸ்பிஐ யோனா ஆப் மூலமே இதையும் கட்டுப்படுத்த முடியும்.

ஐடிஎப்சி ஃபஸ்ட் பேங்க் ஃபாஸ்ட் டேக் கார்டை பொறுத்தவரை குறைவான விலை, அதே நேரம் மிக நேர்மையான அப்ளிகேஷன் பிராசஸ் என்பது இருக்கும். கோடக் மஹிந்திரா பேங்க் கார்டை பொறுத்தவரை ஈஸியாக ரீசார்ஜ் செய்யலாம். அதே நேரம் சுலபமான இன்டர்ஃபேஸ் கிடைக்கும். பஞ்சாப் நேஷனல் பேங்க் கார்டு பொருத்தவரை பல்வேறு விதமான ரீச்சார்ஜ் ஆப்ஸ்கள் உள்ளது. சுலபமான கஸ்டமர் சப்போர்ட் இருக்கிறது.

இப்படியாக ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான சிறப்பு சேவைகளை வழங்கி வருகிறது. சில வங்கிகள் கேஷ்பேக்குகளை தருகின்றன. சில வங்கியில் சிறப்பான கஸ்டமர் சப்போர்ட் தருகின்றன. உங்களுக்கு எது சௌரியமாக இருக்குமோ அந்த வங்கியில் நீங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம். பேடிஎம் ஃபாஸ்ட் டிராக் கார்டுகளை மார்ச் மாதத்திற்கு பிறகு ரீசார்ஜ் செய்ய முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகள் தற்போது ரீசார்ஜ் செய்வதில் இருந்து தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கார்டில் இருக்கும் பேலன்ஸை நீங்கள் தாராளமாக பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் புதிதாக கார் வாங்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள டிப்ஸின் படி வங்கியை தேர்வு செய்து கார்டை வாங்கிக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 20, 2024, 7:00 [IST]
English summary
Fastag card offers choosing best service provider
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+